குப்பைப் பூக்கள்..!

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

பனசை நடராஜன் , சிங்கப்பூர்


குப்பை மேட்டில்
முளைத்திருந்தன செடிகள்
கொஞ்சம் மலர்களோடும்,
நிறைய முட்களோடும்..

கவர்ச்சி, நறுமணத்தால்
செடியும், இடமும் கூட
சிலாகிக்கப் பட்டது
சிறு கூட்டத்தால்..

நெருங்கி முகர்ந்ததும்
நிகழ்ந்தது விபரீதம்..
கால்களில் சகதி..!
கைகளில் கீறல்..!!

இப்போது புரிந்திருக்கும்..
மற்றவர்களால்
மலர்கள் மட்டுமே
ரசிக்கப் படுவதின்
ரகசியம்…!!!

– பனசை நடராஜன் , சிங்கப்பூர்
feenix75@yahoo.co.in

Series Navigation

பனசை நடராஜன், சிங்கப்பூர்

பனசை நடராஜன், சிங்கப்பூர்