காலத்தின் கணமொன்றில்

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

பசுபதி


சிற்சில கணங்கள் சேர்ந்ததே வாழ்வு.
கடிதில் மறையும் நொடிகள் ஒன்றில்,
மேசைமேல் தேநீர் கோப்பைகள் மேலே,
இருவிழி கலந்து
இதயம் இரண்டைத் தொளைத்து,
உரைத்தன:
‘பேசாதே இன்றுநீ;
பேசவில்லை நானும்;
இருப்போம் மெளனமாய் இதுபோல்;
சோகப் பரிசால் இணைந்து
உணர்ச்சிப் பெருக்கில் பிணைந்து
அமர்வோம் கைகளை இறுகப் பற்றி.
எவரே அறிவார் ? இந்தக் கணத்தில்
தொலைவில் உளதோர் மலையின் உச்சியில்
உறைபனி மெதுவாய் உருகத் தொடங்குமோ ? ‘
[ கைஃபி ஆஜ்மியின் ஒரு கஜலின் தழுவல்]

~*~o0O0o~*~
pas@comm.utoronto.ca

Series Navigation

பசுபதி

பசுபதி