காதல்

This entry is part [part not set] of 33 in the series 20110424_Issue

இலெ.அ. விஜயபாரதிநிலவெரிக்குமென
நிழற்கொடி பார்த்து
உடை உலர்த்துகிறாய்
மழை நனைத்த
மல்லிகை கொடிக்கு
தலை துவட்டுகிறாய்
மலர்களில் தடுக்கி
விழுந்த வண்ணத்துப்பூச்சிகளுக்கு
சுளுக்கெடுத்து விடுகிறாய்
குழந்தை தூக்கத்தை
குலைக்காத வண்ணம்
கொலுசில் சிணுங்குகிறாய்
தேநீரில் விழுந்த
ஈ எறும்புக்குக் கூட
மறுபிறவி அளிக்கிறாய்
சுட்டும் விழிச்சுடரில்
விட்டில் பூச்சிகளாய் ஏனோ
என் காதல் மட்டும்?

Series Navigation

இலெ.அ. விஜயபாரதி

இலெ.அ. விஜயபாரதி