காதலுடன் ஒரு சொற்றாடல்

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

சித்தகவி


(முன் குறிப்பு: உடல் இச்சைகளை பூர்த்திசெய்துகொள்ளமட்டும் உருவாகும் தற்காலிக தொடர்புகளைப் பற்றியதல்ல இக்குறிப்பு. இத்தகைய தொடர்புகள் காதலுக்கு இட்டு செல்லலாம். காதலின் மூலமும் ஒருவர் உடல் தேவைகளை தீர்த்துக்கொள்ளலாம். ஆனால் காதலில் உருவாகும் பேரண்பும், காதலர் நலனில் அக்கறையும் தற்காலிக உறவுகளில் ஏற்ப்படுவதில்லை).

காதலுக்கான விதைகள் எல்லா உயிர்களிலும் உறைந்து கிடக்கிறது. இது ஒரு மரபணுவுடன் (Genetics) தொடர்புள்ள விஷயம்தான் என்பதில் ஐயமில்லை. காதல் விதைகள் முளைக்கவும், முளைக்காமல் மக்கி மடியவும், நிறைய இடம், பொருள், காலம், சமூக, பொருளாதார, கலாச்சார சூழ்நிலைகள், ஏன் அரசியல் காரணங்கள் கூட உண்டு. உயிர் ராசிகளின் பரினாமம், மற்றும், அக, புற, சமூக, கலாச்சார வளர்ச்சியைப் பொறுத்து, காதலின் பரிமானங்களும், சிக்கலும், ஆளமும், வகைகளும், எண்ணிக்கைகளும், அமைகிறது. இதில் மனித காதல் மிகவும் சிக்கலானதாகவும், பல-பரிமானம் கொண்டதாகவும் உள்ளது. காதலுக்கு தடைக்கற்கள் எவ்வளவோ, அதே அளவு உண்மையான காதலுக்கு, வயதோ, வகுப்போ, சாதியோ, மதமோ, உறவு முறைகளோ, நிறுவன அமைப்புகளோ(திருமணம் உட்பட) ஒரு வரம்பாக இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. இயற்கை விதிகளின் படி எந்த் ஒரு வரம்பும் காதுலுக்கு இல்லை என்றே தோண்றுகிரது. ஆனால் சில காதல் உறவுகள், குறிப்பாக அவை உடல் ரீதியான சேர்க்கைக்கு இட்டு செல்லும்போது, இயற்கை விதிகளினாலும் நியாயப்படுத்த இயலாதோ எனவும் படுகிறது. உதாரணமாக, தாய்-மகன் உறவு(eudiepus complex), தந்தை-மகள் உறவு(electra complex), அண்ணன்-தங்கை உறவு போன்றன.

மனித காதல் ஒரு புரியாத புதிர்தான். காதலை அறிவியல் நோக்குடன் தெரிந்து கொள்ளுதல் முடியாத காரியம் என்றே தோன்றுகிறது. காதல் வெறும் சுரப்பிகள்(Harmones related issue) சம்பந்தமான விஷயம்தான் காதலுக்கு பல தோற்றக் காரணங்களும், கணங்களும், இடங்களும் உண்டு. உடல் கவர்ச்சியாகவோ, அன்பை நாடியோ, அழகியல் பொருத்தத்தினாலோ, புரிதல் மற்றும் அறிதல் தொடர்பான விருப்பங்கலாளோ, கொள்கைரீதியான விருப்பங்கலாளோ, பொருளாதார நெருக்கடிகளினாலோ, சந்தர்ப்ப வசத்தினால் ஏற்படும் திடார் இணைப்புகளினாலோ, ஏதோ ஒரு (அல்லது) பல காரணங்களால் ஒருவர் மட்டுமோ(ஒருதலைக்காதல்) அல்லது இருவரும் சேர்ந்தோ மனத்தில் ஒருவரை ஒருவர் இருத்திக்கொள்வதில்தான் காதல் தொடங்குகிறது. ஒலி அலைகளினாலும், ஒளிக்கதிர்களினாலும், ஈர்ப்பு விசையினாலும், காந்த சக்தியினாலும், காலம் மற்றும், இடம் சந்தர்ப்பச் சேர்க்கையினாலும் காதல் ஒருதலையாகவோ, இருபக்க காதலாகவோ துவக்கப்படுகிறது. இந்த காதலுக்கான தேடலும், காதலரை கண்டுகொள்ளுதலும், அவர் நலனில் அக்கறை கொள்ளுவதும் மரபணுவிலேயே முன்நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது. மோகம், காமம் மட்டுமல்லாது, ஆன்மிகம் மற்றும் தெய்வீகத்தண்மையும் காதலின் முக்கிய பரிமாணங்கள்தான்.

காதல் பலருக்கு தன்மயமாக்கலுக்கான விளைவாகவே (egotic fulfilment) இருப்பினும், உண்மையான ஆளமான காதல் சுயமகிழ்ச்சிக்காகவோ அல்லது ஆன்மிக முதிர்ச்சியினாலோ விட்டுக்கொடுத்தல்(selfless-ness) என்ற மன நிலைக்குதான் ஒருவரை இட்டுசெல்லமுடியும்.

ஒருவர் ஒரே சமயத்திலோ, அடுத்தடுத்தோ, ஒன்றுக்கு மேற்பட்ட சிலரை காதலிக்க முடியும் என்றே தோன்றுகிறது. காதல் ஒற்றைப் பொருத்தத்தை நாடிய தேடலோ அல்லது முடிவற்ற தேடல்களோ அல்ல. (It is neither search for a perfect singular match nor infinite search). ஏன் பலரைக்கூட ஒரே காலத்தில் காதலிக்கலாம்தான். ஆனால் அன்பை வழங்குவதற்கு தேவையான கால, இட வரம்புகளினால்தான் பலரை காதல் செய்ய முடிவதில்லை. இரண்டு, அல்லது மூன்றுக்கு வாய்ப்பிருக்கிறது. இதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடுகள் உண்டா தெரியவில்லை. மரபணு மற்றும் உளவியல் அடிப்படையில் ஒன்றுக்கு மேல் சிலரை காதலிப்பதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடுகள் உண்டா ? ஞான முதிர்ச்சியும், தெளிவும் இருந்தால் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆத்மார்த்தமான காதல் உறவுகள் சாத்தியமே. தமிழ்க்கடவுள் முருகனுக்கு தெய்வானைதான் வள்ளியை கைப்பிடித்து கொடுக்கிறாள்.உடல் ரீதியான ஒன்றுக்கு மேற்பட்ட காதல் மற்றும் திருமண உறவுகள் ? அவரவர் விருப்பம் தான். சட்டமும், கலாச்சார நிறுவன்ங்களும் தடுக்காமல் இருந்தால் சரிதான் ? விபச்சாரத்தை அங்கீகரிக்கும் கீழை மற்றும் மேலை நாட்டு மக்களும், நிருவணங்களும் இதைப் பற்றி சிந்திக்கத்தான் வேண்டும் ?

காதல் உடலுறவு மற்றும் திருமணத்துடனும் இணைத்துப்பேசப்படுவதால் பெரும் குழப்பம் பலருக்கு. காதல், உடலுறவு, திருமணம் இம்மூன்றும், தனித்தனியாகவும், சேர்ந்தோ இயங்க முடியும். உடலுறவும், திருமண பந்தம் இன்றியும் காதல் மட்டும் தனித்து இயங்க முடியும். காதல் இல்லாத உடலுறவும் திருமண பந்தமும் அன்றாட வாழ்வில் காணக்கூடியதே. இம்மூன்றும் வாழ்நாள் முழுவதும் காதலர்களுக்கு சேர்ந்தியங்கினால் மகிழ்ச்சியான விஷயம்தான். நடைமுறையில் இதற்க்கு எவ்வளவு சிக்கல்கள் ?

காதல் ஒன்றுதான் எளிதில் அடையக்கூடிய ஆன்மிக விசையாக, சக்தியாக பலருக்கும் இருக்கிறது. இதன் மூலம்தான் மனிதன் இயற்கை, விடுதலை, பேரண்பு, அழகு, உண்மை, கருணை, ஞானம், பக்தி, மற்றும் இருத்தலின் கணங்களை முழுவதும் எளிதில் உணரமுடியும் என்று தோண்றுகிறது.

Series Navigation