கடிதம் செப்டம்பர் 2,2004 – சன் டிவியின் சர்வாதிகாரம்

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

அருளடியான்


சன் டிவி, தன்னிடம் நாடகத் தொடர் கொடுக்கும் நிகழ்ச்சித் தயாாிப்பாளர் பிற தனியார் டிவிகளில் தொடர் செய்யக் கூடாது என நிபந்தனை விதிக்கின்றனர். சமீபத்திய உதாரணம், நடிகை குஷ்பு ஜெயா டிவியில் ‘கல்கி ‘ தொடாில் நடித்ததால், அவர் சன் டிவியில் நடித்த ‘குங்குமம் ‘ தொடாில் அவரது பாத்திரத்தை சாகடித்து விட்டனர். மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர் தன்னைப் பற்றி விமர்சித்த சக நடிகை பானுமதியின் கதாபாத்திரத்தை படத்தில் சாகடித்து விட்டார். சன் டிவி எம்.ஜி.ஆரை விஞ்சி விட்டது. இயக்குநர் கே.பாலச்சந்தாிடம் பல சன் டிவி பல நிபந்தனைகளை விதித்ததால், அவர் பிற டிவிகளுக்கு மாறி விட்டார். இதே போல மற்றவர்களும் ஒரு கட்டத்தில் மாறக் கூடும்.

‘ஆனந்த விகடன் ‘ இதழுக்கு சன் டிவியில் ‘புதுசு ‘ என்ற கருத்தில் விளம்பரம் செய்கின்றனர். வெட்கமில்லாமல் சன் டிவியின் குடும்பத்தில் இருந்து வரும் ‘குங்குமம் ‘ இதழுக்கு ‘புதுசு கண்ணா புதுசு ‘ என்ற வசனத்துடன் விளம்பரம் செய்கின்றனர். விகடன் குழுமமும் இதனை ஆட்சேபித்ததாகத் தொியவில்லை. எழுத்தாளர் ஞாநி, குமுதம் குழுமத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். எனக்குத் தொிந்து குமுதம் குழுமத்தில் வந்த வணிகம் தொடர்பான பல கட்டுரைகளை ‘கண்ணதாசன் பதிப்பகம் ‘ புத்தகமாக வெளியிட்டுள்ளது. இந்நிலையில் குமுதம் குழுமத்தின் குறைபாடுகளை எழுத்தாளர் ஞாநி மிகைப் படுத்திக் கூறுகிறாரோ என நினைக்கத் தோன்றுகிறது. அறிவு ஜீவிகள், சன் டிவி குழுமத்தின் சர்வாதிகாரப் போக்கை விமர்சித்து ஒரு முடிவு கட்ட வேண்டும்.

—-

aruladiyan@netscape.net>

Series Navigation