This entry is in the series 20031106_Issue

இளந்திரையன்


அன்றைப் போலவே
இன்றும் எல்லாம்
முடிந்து விட்டது
சிரிப்பும் சிறுகெக்கலிப்பும்
கம்மலும் இருமலும்
கதவு சாத்திப்
போய்விட்டது

ஒரு வரவுக்காய்
நானும்
ஒரு செலவுக்காய்
இவர்களும்
மூடிய அறைகளுக்குள்

பதினாறு வயதில்
திருவிழா போலவே இருந்தது
முப்பது வயதிலும்
முடியாமல் போனது

கூண்டுக்குள்
அடைபட்ட கிளி
சிறகடித்து சிறகடித்து
சிறகுதிர்த்தது

கூண்டைக் கொத்தி
இரும்பை வளைக்கும்
முயற்சியில்
சொண்டு மட்டும்

பச்சைப் பசேல் காடும்
பறந்து திரியும்
உரிமையும்
கிளிக்கு மட்டும் தானா ?

Ssathya06@aol.com

Series Navigation