ஒப்பனை அறை பதிவுகள்
Published March 6, 2011 • By
தேனு
தேனு
வட்ட வரையியாம் வாழ்க்கை..
அது இழைத்திடும் ஒப்பனைகள்
துவக்கத்துடன் இறுதியுரும்
இடமென்றும் ஒன்றுதான்..
அசல்களின் துணைக்கால்களென
மாதிரியின் பயன்பாடு
யூகிக்கப்படும் நுனிவரையில் எனும் கணிப்பு
அவளுக்கு மட்டும் புதிதா என்ன?
.
மறதிகளின் கிழட்டுக்கூட்டம்
பொய் வண்ணமிழைத்து
ஆட்டுவிக்கும் பொம்மையென
வழிகின்றன துளிகள் சில..
.
விழிநீர் விலக்கிட
தன்னிலை மறைத்து
மூன்றாம் கரமொன்று
நீண்டிட..
கலையப்படத் துவங்கியிருந்தன
அவள் மறைபட்டிருந்த
நிலையற்ற ஒப்பனைகள்..
– தேனு