எனவேதான்,

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

நெப்போலியன்


வாழ்க்கை
நிரந்தர
அருகதையற்றது.

ஆயுள்
அங்கீகாரமற்ற
உத்திரவாதம்.

உயிர்
உனக்குள்
இருந்தே
உன்னை
ஏமாற்றுவது.

வாழ்வின்
நிச்சயமற்ற
நிமிடங்களுடனே
பயணப்படும்….

நம்
யாத்திரையில்
இன்றின்
இருத்தலே
இனிமை.

எனவேதான்,

இன்றைக்கான…
கனவை
கண்ணீரை
கலவியை
கவிதையை
இன்றே முடி.
—- நெப்போலியன், சிங்கப்பூர் —-
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்