திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

இருவர்

This entry is in the series 20030918_Issue

ஜி செந்தில்நாதன்


இருவர் ஓருவராக கடற்கரை மணலில் தெரிந்தார்கள்
இவன் சிரித்தான்.

அவள் காதலிக்கிறா இவனை.
இவன் காதலிக்கவில்லை.
அவள் இவன் நண்பனை காதலிக்கிறா
மற்ற நண்பர்கள் இவனிடம கேட்டார்கள், ‘ உன் காதலை அவள் ஏற்றுக்கொள்ளவில்லையாமே ‘

கடற்கரையில் இருக்கிறேன். செல் அடிக்கிறது.
‘நான் தான் பேசுகிறேன். எங்கே இருக்கிங்க ‘
‘கடற்கரையில் ‘
‘யாரோட ‘
‘உன்னோட ‘

கடற்கரை மணலில் அமர்ந்தேன்.
பூக்காரி வந்தா..
என்கிட்ட பூ வேணுமான்னு கேட்கலை
ஆனா எனக்கு அப்படி கேட்டது, காதுல வச்சுக்க!
சோசியக்காரி வந்தா..
‘கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருப்பீங்கனு ‘ சொல்லவில்லை!
தண்ணி பையன் வந்தான்..
‘அண்ணா, தண்ணி ‘ கேட்டான்..
எனக்கு இருந்த சூடை குறைக்க!
சுண்டல் பையன் வந்தான்..
‘எங்க அக்கா ‘ அப்படின்னான்..
கடல் தண்ணிரை, என் கண்ணின் தண்ணிர் முத்தமிட்டது!

gsvnatha@rediffmail.com

Series Navigation

About ஜி செந்தில்நாதன்

ஜி செந்தில்நாதன்

View all 1 articles →

இருவர்

This entry is in the series 20010715_Issue

ஞாநி


இங்கர்சாலும்

காிபால்டியும்

பெர்ட்ரண்ட் ரஸ்ஸலும்

பெர்னாட் ஷாவும்

இங்கேயும்

உருவாக்க வேண்டி

அய்யாவும்

அண்ணனும்

உழுத நிலத்தில்

அய்யகோ, தம்பி !

விளைந்ததோ

இமெல்டாவும்

கோயபல்சும்தான்.

இங்குள்ள தமிழர்

இரண்டாதல் கண்டு

எங்கள் பகைவர்

இரண்டிலும் கலந்தார்.

எதையும் தாங்கும் இதயம்

எங்கள் தமிழருக்கு–

தம்மை எாிக்கும் கொள்ளியிலும்

எந்த கொள்ளி நல்லதென்று

சேனல்கள் துணை நாடி

தரம் பிாிக்கும்

பகுத்தறிவுச் செம்மல்கள்

எம் தமிழர்.

டெல்லியின் சிாிப்பில்

சுயாட்சியைக் காண்போம்.

நமக்கு நாமே திட்டம்

மாபெரும் வெற்றி.

நமக்கு நாமே – பகைவர்.

**

நன்றி – தினமணி

Series Navigation

About ஞாநி

ஞாநி

View all 69 articles →