இருள் (நாடகம்)

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

கணேசன், பாண்டிச்சேரி


பின்மேடையில ஒருபெரிய சுவற்றலமாரி இருக்க அதில் குருடர்கள் படுத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒருகுருடன் மெல்ல எழுந்து)

குருடன்1: வந்தவர்களைக்காணவில்லை. கருந்தேரில் சீர்கொண்டு வருவதாக சொல்லிவிட்டு வெறுங்கையோடு என்னை நோக்கி வருகிறார்களாம்.

(வலது மேடையில் வைக்கபட்டிருக்கும் சுவற்றலமாரியின் மேல் தட்டில் இருந்த குருடன்> தனக்குமேல் தட்டில் இருக்கின்றவனிடம்)

குருடன்2: வந்ததும் திரும்பி சென்றிருக்கலாம். இல்லையென்றால் அவர்களுக்கும் மூன்றாவது கால் முலைத்திருக்கும்.

(அவனுக்கு அடுத்த தட்டில் இருந்த குருடன்)

குருடன்3: மூன்றாவது கால் முளைத்திருந்தாலும் திரும்பிப் போயிருக்க வாய்ப்பில்லை. இங்கே ஆறு கால்கள் முளைத்தவர்கள் வரை வந்து தங்கியிருக்கிறார்கள்.

(இரண்டாவது குருடன் மூன்றாமவனை நோக்கி)

குருடன்2: மன்னிக்கவும். இப்போது யாருக்கும் கூடுதலான கால்கள் முளைப்பதில்லை. பத்திரிக்கைகள் பேசுகின்றன. உனக்கு இந்த விஷயம் தெரியுமா என்று சோதித்துப்பார்த்தேன்.

(முதலாவது குருடன் சுவற்றலமாரியின் கீழ்தட்டிற்கு வந்தமர்ந்துகொண்டு)

குருடன்1: சீர் கொடுக்க வரவில்லை யென்றாலும் என்னைக்கான வருவார்கள். அவர்களுக்கு தேவையானவனாக இருந்திருக்கிறேன். இப்போதும் இருக்கிறேன். நிச்சயம் வருவார்கள். வெறுங்கையோடாவது வருவார்கள். (சிறிது மெளனத்திற்குப்பிறகு) வெறுங்கையாடு வந்தால் விரட்டியடித்து விடுவேன். இனி; லாபமில்லாமல் எதையும் நான் செய்யப் போவதில்லை.

குருடன்3: உனக்கெதற்கு லாபம். நீ காரியங்களைச் செய். கீதையின் வாசகத்தைப்போல்.

குருடன்1:இருள் தேசத்தில் காலுக்கு மட்டும் தான் இடம் இருக்கும். இதைப்போல் கட்டிவைத்திருந்து> நம்மை விட்டுச்சென்றாலொழிய நமக்கேது பொருட்கள். சு+ன்யத்தில் எதிராலியின் குதற்க எண்ணங்களைக் காட்டும் முகத்தைத்விர அவன் மைவித்தை மந்திர வார்த்தைகளுக்கு கட்டுப்பட வேண்டியது தான். முகம் சிரிக்கிறதா குரல் சிரிக்கிறதா ? (சிறிது நேர மெளத்திற்குப்பிறகு) இதில் எந்த உபதேசமும் பலிப்பதில்லை.

குருடன்3: என் சுவாசம் தான் உன்னை வாழவைக்கிறது.

குருடன்1: அதை யோசிக்கவேயில்லை. என்னை யோசிக்கிறேன். மற்றவர்களுக்கு என்ன செய்கிறேன் என்று மட்டும் சிந்திக்கிறேன். எனக்கென்ன செய்கிறார்கள் என்பதை நினைத்துப்பார்ப்பதில்லை. பகலைக்காணாதவனின் சில்லரை> முழுப்பணம் ஆகாதது போல் வாழ்கிறேன்.

குருடன்2:அதனால் தான் சீர் கொண்டு வருவார்கள் என்று காத்திருக்கிறாயோ.

குருடன்1:ஆமாம். இப்போது தான் என் புத்திக்கு உறைக்கிறது. அவர்கள் சீர் கொண்டுவருவார்கள் என்று எப்படி அனுமானித்தேன் ?. அவர்களாக சொல்லவில்லை. வரும் போது இதை இதை கொண்டு வாருங்கள் என்று நானும் கேட்கவி;ல்லை. பின் என்ன அடிப்படையில் நான் காத்துக்கொண்டிருக்கிறேன். ?.

குருடன்3: குருடனின் உலகில் சீரென்பதும் இருட்டுத்தான்.

குருடன்2: இருட்டென்பதே சீர் தான்.

(அப்போது இரண்டு நபர்கள் மேடைக்குள் வருகிறார்கள். வந்தவர்கள் இருவரும் குருடர்கள். வந்தவர்களில் ஒருவன் )

புதிய குருடன்1: யாராவது இருக்கிறீர்களா ?.

(குருடர்கள் மூவரும் ஒருவர் இருக்கும் இடத்தை ஒருவராக மாற்றிமாற்றி பார்த்துக்கொண்டு)

குருடன் 3 : நம்மைப்போல் குருடர்கள் வந்திருக்கிறார்கள். (சொல்லிவிட்டு தனக்குள் சிரித்துக்கொள்கிறான்)

குருடன்2: வந்திருக்கிறார்கள் இல்லை. வந்திருக்கிறான்.

குருடன் 3: உன்னால் கணிக்கமுடிகிறதா ?

குருடன் 2: நிச்சயமாக.

குருடன் 3: பெரும்பாலும் ஒருவர் பேசும் போது மற்றவர் போசாமல் இருப்பது நாகரீகமாக கடைபிடிக்கப்பட்டுவருவதால் . . .

குருடன் 2: என்ன ஒருவருக்கும் மேல் இருப்பார்கள் என்கிறாயா ?

(அப்போது புதியவர்கள் மெல்ல அவர்களை அவர்களது குரலைக்கொண்டு நெறுங்குகிறார்கள் சப்தமில்லாமல்.)

குருடன்1: சீருடன் வந்திருக்கிறார்களோ ?

குருடன்3: எங்களுக்குத்தெரியவில்லை. எந்த கையில் என்ன வைத்திருக்கிறான் என்று. உனக்குத்தெரிந்தால் போய் பேசு.

குருடன்2:ஆனால் நெடுநேரம் இங்கே தங்க வைக்காதே.

குருடன்3: ஆமாம் நமக்கே இடப்பற்றாக்குறை. இவர்கள் வேறு வந்துவிட்டால்.

(அந்த இருவரும் சுவற்றலமாரிக்கருகில் வந்து அவர்கள் பேசுவதை வெகுநெருக்கத்தில் இருந்துகொண்டு கவனிக்கிறார்கள். அவர்கள் வெகு அருகில் இருப்பதை உணராத அவர்கள்)

குருடன்1: முதலில் அவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வோம் பிறகு நாம் என்ன செய்யலாம் என்பதை யோசிக்கலாம்.

குருடன்2: என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. என்னுடைய இடத்தை கொடுக்க மாட்டேன். இப்பொதே நான் வளைந்து நெளிந்து படுத்துக்கொண்டிருக்கிறேன் (அவன் நின்ன இடத்திலிருந்தபடியே மிகவும் ஜாக்கிரதையாக வளைந்துநெளிந்து காட்டுகிறான்).

குருடன்1: தங்குவதற்குத்தான் வந்திருக்கிறார்கள் என்று ஏன் நீயே அதற்கான வழியை ஏற்படுத்தி தந்துவிடுவாய் போலிருக்கிறதே.

குருடன்3: சரி வேண்டுமானால் ஒன்று செய்வோம். அவர்களாக கண்டுபிடித்து கேட்டால் பதிலளிப்போம். இல்லையேல் விட்டுவிடுவோம். என்ன நான் சொல்லவது சரிதானே.

குருடன் 2 : சில நேரங்களில் உன்னாலும் யோசிக்கமுடிகிறது.

குருடன்3: சரி. பேசாதே. காதைத்தீட்டிக்கொண்டு என்ன நடக்கிறதென்று உன்னிப்பாய்க்கேள்.

குருடன்2: ம்.

(அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட புதியவர்கள்> சற்று விலகி வந்து)

புதிய குருடன்1: (தம்மோடு வந்த குரடனிடம் ரகசியமாக) நம்மையிவர்கள் குருடர்கள் என்று கண்டுபிடித்துவிட்டார்கள்.

புதிய குருடன் 2 : அவர்கள் கண்டுபிடிக்க முடியாதைக்கண்டு பிடித்திருக்கிறாய். இனி அவர்களுக்கு மிகவும் சுலபமாகிவிடும். நாம் குருடர்கள் என்று உறுதிசெய்துகொள்ள. குருட்டு உலகில் இருக்கும் எல்லோருக்கும் இது தானே கதி. நமக்கென்று ஒரு சமுதாயத்தை உருவாக்கிக்கொள்ளும் ஆசையில் விளைவும் விபரீதத்தை பாதுகாப்பென்று என்று முடிவெடுத்து இவர்களுடன் சேர்ந்து வாழ வந்திருக்கிறோம். அப்படியிருக்கையில் ஒளிவு மறைவிற்கு ஏது இடம்.

புதிய குருடன்2: இவர்களுடன் சேர்ந்து வாழத்தான் வந்தோம். சரி தான். இவர்கள் எற்றுக்கொண்டால் தானே. இவர்கள் பேசியதைக்கேட்டாயல்லவா ?. குருடர்கள் என்று தெரிந்தால்; சேர்த்து வாழ ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதனால்

புதிய குருடன் 1 : அதனால். . .! ?

புதிய குருடன் 2 : நாம் குருடர்கள் இல்லை. இவர்களைக்காக்க வந்த சமூக சேவகர்கள் என்று புரியவைக்கவேண்டும்.

புதிய குருடன்1: குட்டு வெளிப்பட்டுவிட்டால்.

புதிய குருடன்2: அதுவரை இருப்போம். அதற்குள் நமக்கு உகந்த இடத்தை கண்டு பிடித்துவிடலாம். கண்டுபிடித்தாக வேண்டும். (மிகக்கோபமாக) இப்போதைக்கு இதைவிட்டுவிட்டு நடுத்தெருவில் நிற்கமுடியாது.

(இவர்களுடைய பேச்சு இதைவரைக்கேட்காததால்)

குருடன்1: யாரங்கே. உங்களுக்கு என்ன வேண்டும் ?

புதிய குருடன்1: ஐய்யா உங்களுக்கு சேவை செய்ய வந்திருக்கிறோம்.

குருடன் 1: வந்திருக்கிறோமென்றால் . . .

புதிய குருடன்1: இரண்டுபோர் வந்திருக்கிறோம்.

குருடன் 2 : குருடர்களுக்கு குருடர்கள் சேவையா.

குருடன் 3 : இருள் இருளோடு சேர்ந்ததுபோல் தான்.

புதிய குருடன்2: நாங்கள் குருடர்களில்லை. செவிடர்கள்.

குருடன் 3 : ஓ . . . அது சரி. அப்படியானால்; வந்ததும் வராததுமாக ஒற்றை அரையில் இருக்கும் எங்களை ஏன் ~யாரெங்கே~ என்று சப்தம் போட்டுத் தேடினீர்கள் ?.

புதிய குருடன் 1 : எப்படி ஆரம்பிப்பது என்ற குழப்பம்> அதனால் தான்.

புதிய குருடன் 2 : சேவை என்பதில் நிறைய திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தது. நீங்கள் நினைப்பது போல் பழைய முறையிலான சேவையை நாங்கள் செய்ய முன் வரவில்லை. யாருக்கும் குழப்பம் இல்லாமல் ஒரு புதுவித சேவையைச் செய்வதற்கான ஆராயச்சிகள் மேற்கொண்டு முடிவை மட்டும் பரிசோதிக்க உங்களை முதலில் அனுகுகிறோம். இதில் கொடுப்பவருக்கு இழப்பில்லை. ஒன்றைக்கொடுத்து இரண்டை பெருவார் பிறகு அவர் இரண்டைக்கொடுக்கலாம் நாலைப்பெறுவதற்கு. இல்லையேல் இரண்டையே கொடுக்கலாம். இதில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதே போல் வாங்கியனுபவிப்பவனும் மானத்தோடும் கவுரவத்தோடும் இருக்கலாம். கொடுத்தவன் நான்தான் இதைச்செய்தேன் இப்படிச்செய்தேன் என்று சொல்லிக்காட்ட முடியாததால். இது முற்றிலும் புதிய முறை.

குருடன் 3 : (தன் நண்பர்களிடம் ) இவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாது.

குருடன் 2 : ஏதாவது திட்டமிட்டுத்தான் இவரகளின் நிஜத்தை அறிய வேண்டும்.

குருடன் 1 : (தனக்குள் பெரிதாக ஏதோ திட்டங்கள் செய்பவன் போன்ற பாவனைகள் செய்து பின் புதியவர்களை நோக்கி) ஒரு உதவி செய்யுங்களேன். மூளையில் இருக்கும் குப்பைத்தொட்டியில்> சற்று முன் ஒரு பிஸ்கட் கவரை போட்டேன். அதைக்கொஞ்சம் கொண்டுவரமுடியுமா தயவுசெய்து ?.

(புதியவர்கள் இருவரும் நெருக்கமாக வந்து)

புதிய குருடன் 1 : சோதிக்கிறார்கள். என்ன செய்வது ?.

புதிய குருடன் 2 : குப்பைத்தொட்டியில் இருக்கும் பிஸ்கட்பேப்பரை எடுத்துக் கொடுப் போம். வேறென்ன செய்வது.

புதிய குருடன் 1 : புத்தியிருக்கிறதா. குப்பைத்தொட்டி எங்கே இருக்கிறது ?. அப்படியே இருந்தாலும் மூளையில்தான் இருக்கிறதா. மூளை எங்கிருக்கிறது ?. மூளையில் எந்த மூளை. எடுத்துக்கொடுத்தாலும் அதன் நிறம் என்ன ? வடிவம் என்ன ? என்று கேட்டால்.

புதிய குருடன் 2 :அவ்வளவு தானே. பொறு.

(புதியகுருடன் 2 அந்த அறையைத்தடவி தடவிச் சென்று தட்டுப்பட்ட பொருளை எடுத்தான். அது துடைப்பம். அதைக்கொண்டு போய் அவர்களிடம்)

புதிய குருடன் 2 : இந்தாருங்கள் துடைப்பம்.

குருடன் 2 : நான் பிஸ்கட் கவரைக்கேட்டேன்.

புதிய குருடன் 2 : அரையைக்கூட்டவா.

குருடன் 1 : பிய்கட் கவர் எங்கே ?

குருடன் 2 : காற்று இல்லையா. பேன் போடவா ?

(குருடன் 1 மற்றவர்களிடம்)

குருடன் 1 : இவனுக்கு காது கேட்கவில்லை என்று நினைக்கிறேன். முழுச்செவிடன் போலிருக்கிறது.

குருடன் 2 :பொய். முன்பு நான் கெட்ட கேள்விகளுக்கு பதிலளித்தானே.

(புதியவர்கள் இருவரும் தங்களுக்குள்ளாகவே)

புதிய குருடன் 1 : இதோ பார் நீ வெளியே மூத்திரம் இருக்கச் சென்றதாகவும்> இவனைத்தனியாக விட்டுவிட்டுச்சென்றது குழப்பமாகிவிட்டதென்றும் சொல்லி சமாளித்துவிடு.

(புதிய குருடன் 2 அவர்களிடம் சென்று)

புதிய குருடன் 2 : என்ன நண்பர்களே என் நண்பனை துடப்பமும் கையுமாக நிற்கவைதிருக்கிறீர்கள்.

குருடன் 1 : ஓ நீங்கள் இவ்வளவு நேரம் இங்கே இல்லையா. எங்கே சென்றிருந்தீர் ?

(குருடன்2 குருடன்1யை தன்பக்கம் இழுத்து ரகசியமாக அவனோடு)

குருடன் 2: என்ன நீங்கள் இங்கே இல்லையா என்று கேட்கிறாய். உனக்குத்தெரியாதா அவர் இங்கே இல்லை என்று ?

குருடன் 1: அவர் குரலே இல்லையே அதனால் தான்.

குருடன் 2: ஒரு வேளை இங்கேயே இருந்துகொண்டு நம்மை ஏமாற்றினால் ?

குருடன் 1: எப்படி ? நாம் என்ன அவ்வளவு மோசமாக இருக்கிறோம். கண்கள் தான் தெரியாது காதுகளும் மட்டம். இவனைப்போல ?

குருடன் 2: எனக்கென்னமோ சந்தேகமாகவே இருக்கிறது. எப்போது என் இடத்தை பிடுங்கப்பொகிறார்களோ ?

குருடன் 1: இன்னொரு முறை இப்படிப்பேசாதே. எதுவாயிருந்தாலும் அவர்கள் போனதும் பேசிக்கொள்வோம். இப்போதைக்கு வார்த்தையை அடக்கு. (அவன் புதியவர்களின் பக்கம் தலையைத்திருப்பி) நீங்கள் சொல்லுங்கள். இவனுக்கு வயிற்றுவலிஇரண்டு நாளாய் டாக்கடரை வரச்சொல்லியிருந்தோம். வலிக்குதாம் நாம் என்ன செய்ய. பெறுத்துக்கொள்ள சொல்லிவிட்டேன். நீங்கள் சொல்லுங்கள். எங்கே போயிருந்தீர்கள்.

புதிய குருடன் 2 : மூத்திரம் பேய.

குருடன் 1 : போகும் போது எங்களுக்கு விளக்கமாக சொல்லிவிட்டு சென்றிருக்கலாமே. இப்படி காது கேட்காதவனை எங்களிடம் விட்டுச்சென்றால் . . . சரி> ஒரு உதவி செய்கிறீர்களா. மூளையில் குப்பைத்தொட்டியிருக்கிறது. பிஸ்கட் கவரை அதில் போட்டுவிட்டோம். பரிசுக்குரிய எண் அதில் இருப்பதை இப்போது தான் இவன் சொன்னான். தயவு செய்து எடுத்துக்கொடுக்கிறீர்களா.

புதிய குருடன் 2 :அவ்வளவு தானே. (தன் நண்பனிடம் அவர்களுக்கு நன்றாய் கேட்கும் படி) இதோ பார் இன்னும் ஏன் அந்த அசிங்கத்தை வைத்துக்கொண்டு நிற்கிறாய். அதைப்போட்டுவிட்டு அதோ இருக்குதே அந்த குப்பபைத்தொட்டியை அப்படியே எடுத்துவா. (என்று சொல்ல அவன் மறுபேச்சு பேசாமல் அங்கேயே நின்றிருக்கிறான். மற்றவர்கள் குழப்பத்தோடு அவன் செயலைக்கவனிக்கிறார்கள். அவர்கள் அருகிலேயே குப்பைத்தொடடிக்குப்போனவனும் எடுத்துவரச்சொன்னவனும் நின்று கொண்டு அவன் அங்கே போய் எடுத்துவரும் நேரத்தை எடுத்துக்கொண்டு> பிறகு குருடர்களை நோக்கி)

புதிய குருடன் 1 : ஐய்யா. பாவம் இவன் பிறவியிலேயே செவிடு. அவனால் சரிவர கேட்க முடியாது.

(அவன் உடனே இடைமறித்து)

புதிய குருடன் 1 : பிறவிலேயே என்றாலும் சிலநேரம் எனக்கு நன்றாக கேட்கும். இப்போது கேட்கிறதே. நான் ஏதாவது குளருபடி செய்துவிட்டேனா( குருடர்களிடம் கேட்டான். அவர்களுக்கு இப்பேச்சு ஆச்சர்யத்தைக்கொடுக்க> கீழே இறங்கி அவர்களிடம் தட்டுத்தடுமாறி வந்து)

குருடன் 1 : என்னைப்பிடித்துக்கொள்ளுங்கள்

(புதிய குருடன் 2> அவன் இருக்கும் இடத்திற்கு தடவித்தடவி வந்து கைகளை தடவித்தடவி தேடிப்பிடிக்க குருடன்1)

குருடன் 1 :என்னப்பா எங்களைப்போலவே நீயும் தடவித்தடவி பிடிக்கிறாய்.

புதிய குருடன் 1 : உங்களைப்போல் இருந்திருந்தால் எப்படியிருந்திருப்பேன். கொஞ்சம் கண்களை மூடிக்கொண்டு உங்களை கண்டுபிடிக்க ஆசைப்பட்டேன். தவறாகப்படுகிறதா ?

குருடன் 1 :வேண்டாம். நீ அப்படியெல்லாம் செய்யக்கூடாது. நாங்கள் படும்வேதனைப்போதாதா. நீ வேறயா ? உங்களை வைத்துக்கொள்ளலாமா வேண்டாமா என்று நாளை முடிவு சொல்கிறோம். அதற்கு முன் . . . எங்கே பிஸ்கட் பாக்கட்.

(புதிய குருடன் 2 தன் காலை அவர்களை நோக்கி நகர்ந்து வருவதைப்போன்ற ஒலிளை எழுப்பிவிட்டு)

புதிய குருடன் 2 :ஆகா . . . இதில் நம்பர் எதுவும் இல்லையே. உங்களை நன்றாக யாரோ ஏமாற்றிவட்டார்கள்.

குருடன் 1 :என்ன நம்பர் இல்லையா.

(முதல் குருடன் கையைத்தட்ட ஆரம்பிக்கிறான். மற்றவர்கள் அவனின் கையோசைக் கேட்டுக்கொண்டே அவனை நெருங்கிவந்து ஒன்றாய் சேருகின்றனர். புதியவர்களுக்கு அங்கே என்ன நடக்கிறதென்று யூகிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். இங்கும் அங்கும் நடந்து ஓருவர் மேல் ஒருவராய் மோதிக்கொள்கிறார்கள். அவர்களின் நகர்தலின் போது குருடர்களின் மீதும் விழுகிறார்கள்.)

குருடன் 1 : என்ன ஆயிற்று உங்களுக்கு.

புதிய குருடன் 1 :பேப்பர் பறக்கிறது. அதனைப்பிடிக்கிறோம்.

குருடன் 3 : போதும் நிறுத்துங்கள். இனி நீங்கள் நடிக்கவேண்டாம்.

புதிய குருடன் 2 :என்ன நடிக்கிறோமா. என்ன சொல்கிறீர்கள் ?

(மூவரும் ஒருவரையொருவர் கைக்கோர்த்துக்கொண்டு)

குருடன் 2 : எங்களை ஏமாற்ற முடியாது.. நீங்களும் எங்களைப்போல் குருடர்கள் தான் என்று புரிந்துவிட்டது. இந்த இடத்தில் குப்பைத்தொட்டியே கிடையாது. மேலும்; இங்கே எதையும் நாங்கள் போடவும் இல்லை. வேஷத்தைக் களைத்துவிட்டு வந்த வழியாக போய்விடுங்கள்.

புதிய குருடன் 1 :செ. உங்களுக்கு கண்கள் தான் குருடு என்று நினைத்தோம். மனமும் குருடாகிவிட்டது. பாவம் என்றெண்ணி உதவி செய்யலாம் என்று வந்தால். . . உங்களுக்கே எங்களது உதவி தேவைப்படாத பட்சத்தில் நாங்கள் போகிறோம். ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிவிடுகிறேன். இங்கே ஒரு குப்பைத்தொட்டியுள்ளது. அதில் பிஸ்கட் கவர்கள் மட்டுமல்ல இன்னும் நிறைய இருக்கிறது. நீங்கள் இந்த இடத்தை முழுமையாக ஆண்டிருந்தாளல்லவா தெரிந்திருக்கும். பாவம் குருடர்களுக்கு எப்படி எல்லாம் தெரிந்திருக்கப்போகிறது. வருகிறோம்.

(என்று சொல்லிவிட்டு அவன் தன் சகாவையும் அழைக்க)

புதிய குருடன் 2 :அடேய் வாடா. இன்னும் என்ன அவர்களையே பரிதாபமாக பார்த்துக்கொண்டு நிற்கிறாய். வா. ( அவன் அவனது குரலை அடையாளமாக வைத்துக்கொண்டு வருகிறான்.) இங்கே வாடா. வா. வா. (சரியாக அவன் குரலை வைத்துக்கொண்டு வந்துவிட> இருவருமாக குருடர்கள் நிற்கும் இடத்தை அவர்கள் பேசிய தூரத்தைக்கொண்டு சரியாக கணித்து> இடிக்காமல் பின்னோக்கி நடந்தார்கள். அவர்கள் செல்வதை குருடர்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் காலடிகளை தடக்தடக்கென்று தரையில் தடிக்காண்டே செல்கிறார்கள். குருடர்கள் இன்னும் கைகளைவிடுவித்துக்கொள்ளாமல் இருக பிடித்துக்கொண்டு அவர்களை அழைக்க விருப்பம் கொண்டவர்களாக அவர்கள் போகும் திசையைநோக்கி தலையைத்திருப்பி பார்த்தனர். ஆனால் அவர்களில் யார் முன்மொழிவது என்பதில் குழப்பம் மேலிட போவதைக் கேட்டுக்கொண்டே நிற்கின்றனர். புதியவர்கள் சற்று தூரம் சென்றதும் சத்தம் போடமல் அங்கேயே நிற்கின்றனர். வெகுநேரம் சப்தம் இல்லாதிருக்கிறது. போய்விட்டார்கள் என்று தமக்குள் ஒரு முடிவுக்குவந்தபிறகு குருடர்கள் கைகளைவிடுவித்துக்கொண்டு)

குருடன் 3 : ஏன் அவர்கள் இப்படி நடித்து ஏமாற்றவேண்டும். உலகில் நமக்குக்கிடைத்தது போல் அவர்களுக்கும் இடம் கிடைக்காமலா போகும். முயற்சியில்லாதவர்கள்.

குருடன் 2 : நீ சுலபமாகச்சொலிவிட்டாய். வெளியே போய் பார்த்தால் தானே. நம் நல்ல காலம் பல வருடங்களுக்கு முன்பே அடைக்கலாம் புகுந்துவிட்டோம். இப்போதெல்லாம் சுலபத்தில் இடம் கிடைப்பதில்லை.

குருடன் 3 : உனக்கு எப்படி இதெல்லாம் தெரிகிறது.

குருடன் 1 :செய்திகள் மூலம் தான்.

குருடன் 3 :செ உன்னைப்பொல் நானும் பிரெய்லி படித்திருந்திருக்கலாம்.

குருடன் 1 :கொஞ்சம் இரு. அவர்கள் ஒருவேளை இங்கேயே இருக்கக்கூடும். எதுவாக இருந்தாலும் பொருமையாகப் பேசுங்கள்.

(புதியவர்களுக்கு அவன் சொன்னது காதில் விழுந்துவிட்டது. நகர்ந்து சுவற்றோரமாக நின்று கொண்டார்கள். மூன்று குருடர்களும் அறையை சுற்றி சுற்றி வந்தார்கள். புதியவர்களின் அருகில் வருபோது> அவர்கள் வரும் சத்தத்தினை உணர்ந்து பின்னோக்கி நகர்ந்து கொள்கிறார்கள். ஒரு முறை சுற்றியதும் முதல் குருடன் கையைத்தட்டுகிறான் மற்ற குருடர்கள் அவனருகில் வந்து நிற்கின்றனர்.)

குருடன் 2 :அவர்கள் இல்லை. இப்போது பேசலாம். நாம் இருக்கும் நிலையில் யாராவது வந்து நம்மை கொள்ளையடித்துவிட்டு சென்றுவிட்ால் . . .

குருடன் 1 :நம்மிடம் கொள்ளையடிக்க என்ன இருக்கிறது.

குருடன் 3 :உடல் இருக்கிறேதே. கண் தான் பழுது மற்றதெல்லாம் சரியாக இருக்கிறது. இப்போதெல்லாம் உடற்பாகங்களை விற்கின்றார்களாமே.

குருடன் 2 :ஐய்யய்யோ. நாம் என்ன செய்வது.

குருடன் 1 :நமக்கு ஒரு காவலன் வேண்டும்.

குருடன் 3 :இங்கு தங்கியிருப்பதே ஒரு பெரியவரின் கருணையால்.

குருடன் 2 :அவர்தாம் நமக்கு வேண்டியதை எல்லாம் செய்கிறாரே.

குருடன் 3 :அதுசரி. தினமும் நம்மை வந்து பார்க்கிறாரா என்ன ?. இதைப்போல்

யாராவது வந்தால் என்ன செய்வது.

குருடன் 1 :யாரு வந்தாலும் கதைவைத்திறக்கக்கூடாது.

குருடன் 3 :பால் காரன்> காய்கரிகார அம்மா> கரண்டு பில் தண்ணி பில் பார்க்க வருபவன் யாராக இருந்தாலும் .நிறைய பேர் வருவார்களே. வரட்டும். அவர்களை யெல்லாம் வரவிடாமல் செய்ய முடியுமா என்ன.

குருடன் 2 :ஆமாம். அவர்களையெல்லாம் வரமுடியாமல் செய்ய முடியுமா என்ன ?

குருடன் 1 :விடு எல்லாவற்றையும். என்ன இன்று ஒரே குழப்பமாக இருக்கிறது.. எப்போதும் போல் இருப்போம். இந்த நினைப்பெல்லாம் இருந்தால் ஒரு நொடிகூட நாம் நிம்மதியாய் இருக்க முடியாது. அப்படியேதாவது துரிதிருஷ்டமாக நடந்து விட்டால் நடந்துவிட்டு பொகட்டும். எப்போவோ போகிற உயிர் இப்போ போனால் என்ன> இப்புறம் தான் போனால் என்ன.

(இவர்களுடைய சம்பாஷனைகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த புதியவர்களுக்கு அடுத்து என்ன செய்வது என்பது போன்று நிலையில் சிறிது நேரம் அமைதியா இருக்கிறார்கள். பிறகு ஒருவன் மற்றவனின் காதில் ஏதோ சொல்வதும் கேட்பவன் நிராகரிப்பதும் ஏற்பதுமாக அவர்களுக்குள்ளாகவே ஒரு சம்பாஷனை நடந்துகொண்டிருக்கிறது.)

குருடன் 1 : என்னைச் சிலர் தேடிவருவார்கள் என்று சொல்லியிருந்தேனே . . .

குருடன் 3 :ஆமாம். அதற்கென்ன இப்போ. அவர்கள் தான் இப்போது வந்து போனவர்கள் என்ற நினைக்கிறாயோ.

குருடன் 1 :சீச.சீ. இப்போது வந்து போனவர்கள் அவர்களாய் இருக்காது. அவர்கள்மிகவும் நல்லவர்கள். என்ன இருந்தாலும் அவர்கள் எனக்காக எதுவும் செய்ய முன் நிற்பவர்கள். நான் தான் சொன்னேனே அவர்கள் எனக்காக சீரெல்லாம் கொண்டுவருவார்கள் என்று. இவர்களென்ன சீராகொண்டு வந்தார்கள். நம்மிடம் ஏதாவது கிடைக்குமா என்று ஆதரவ தேடியல்லவா வந்தார்கள். இப்போதென்னவோ அவர்கள் வெகுவிரைவில் வருவார்கள் என்று தோனுகிறது.

குருடன் 2 : வரவர நீ பெரிய சோதிடன் போல் நடந்து கொள்கிறாய்.

(அப்போது ஒருவன் உள்ளே வருகிறான். அவன் குருடனல்ல. அவன் நேராக வந்து அந்த மூன்று குருடர்களிடமும் சென்று)

புதியவன் :என்ன சொளகரியம் தானே.

குருடன் 1 :யார் நீங்கள்.

புதியவன் :சரி வருகிறேன்.

குருடன் 2 :யார் நீங்கள் என் கேட்டால் வருகிறேன் என்ற சொல்கிறீர்களே. யார்நீங்கள்.

புதியவன் :நானா. . . என்னையா யார் என்று கேட்கிறீர்கள். நான் தான் . . .( சுற்றி ஒரு முறைப்பார்த்தவன் மூளையில் புதியவர்கள் ஒண்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிடுகிறான். பிறகு இந்த மூன்று குருடர்களையும் ஒரு முறை பார்;துவிட்டு)

புதியவன் :நான் யார் என்ற அப்புறம் சொல்கிறேன். நீங்கள் எத்தனைப்பேர் இங்கே இருக்கிறீர்கள்.

குருடன் 3 :நீங்களும் குருடர்தானா. ஐய்யா அனுப்பினாரா.

புதியவன் :இல்லை. நான் கேட்பதற்க பதில் வரவேண்டும். நான் மிகவம் கண்டிப்பானவன். சரியான பதில வராவிட்டால் உங்களைத் தெருவுக்கு தள்ளிவிடுவேன்.

குருடன் 2 :என்ன மிரட்டுகிறாயா. இப்போது புரிகிறது> நீயார் என்று.

புதியவன் :யார் ?

குருடன் 3 :எங்கே உன்னுடன் வந்த அரைச்செவிடன். இந்த இடத்தில் அவனுக்கும் பங்கு தரமுடியாது என்று அவனை எங்காவது தொலைத்துவிட்டயா ?

புதியவன் : மூவரையும் கொன்று போடுவது தான் என் முதல் வேளையாக இருக்கப்போகிறது. நான் யாரென்று தெரியாமல் பேசகின்றிீர்கள்.

குருடன் 1 :யாராய் இருந்தால் என்ன ? குருடர்களிடம் எப்படி நடந்துகொள்வதேன்று தெரியமாமல் மிரட்டிக்கொண்டிருக்கிறாயே.

புதியவன் :நான் அப்படியென்ன கேட்டுவிட்டேன். நீங்கள் எத்தனைப்பேர் என்று தானே கேட்டேன்.

குருடன் 2 :பார்த்தால் தெரியவில்லையா அல்லது உனக்கு எண்ணிக்கை தெரியாதா.

புதியவன் :நீங்கள் எத்தனை பேர் என்று நான் சொல்வதற்கும் நீங்கள் சொல்வதற்கும் எண்ணிக்கை வித்தியாசம் இருக்கும் என்று நம்புகிறேன்.

குருடன் 1 :நாங்கள் மூன்று பேர் இருக்கிறோம். எங்கள் மூன்று பேருக்காவவே கட்டிதரப்பட்ட இந்த இடத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

புதியவன் :எவ்வளவு நேரமாக நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்.

குருடன் 2 :எவ்வளவு வருடங்களாக இங்கே இருக்கிறோம் என்று கேள்.

புதியவன் :உங்களுக்கு வாய் கொழுப்பு அதிகம். திமிர்பிடித்தவர்கள் போலிருக்கிறது.

குருடன் 3 :நாங்கள் உனக்கு இப்போது கட்டாயமாக பதிலளிக்கத்தான் வேண்டுமா.

புதியவன் :ஆமாம். நீங்கள் என்கேள்விக்கு நிச்சயம் பதிலளிக்கத்தான் வேண்டும்

குருடன் 2 :அப்படியானால் நீங்கள் யார் என்று நாங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். அப்போது தான் ஒத்துழைக்க முடியும்.

புதியவன் :சொல்லவில்லையென்றால்

குருடன் 3 :விரட்ட வேண்டிவரும்

புதியவன் :அது சரி. உங்களுக்கு நான் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.; வருகிறேன். எனக்கு இடப்பட்ட வேளையை விட அதிகமாக் நீங்கள் கொடுத்திருப்பதால் நான் பல விஷயங்களை சரிபார்க்க வேண்டும். பிறகு பார்ப்போம்.

(அவன் போகையில் அவர்களிடம்) கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் இந்த இடம் உங்களுக்கு மீதிகாலத்திற்கும் பாதுகாப்புத்தரவேண்டும் என்று.

(அவன் போகும் போது அந்த இரண்டு புதியவர்களையும் கைப்பிடித்து அழைத்துக்கொண்டு செல்கிறான். பழைய குருடர்களுக்கு குழப்பம் அதிகரிகத்தது. அவர்களுக்கு என்ன செய்வதென்ற தெரியாமல் பித்துப்பிடித்தவர்கள் போல் அங்கும் இங்கும் வேகவேகமாக நடந்தபடியிருக்கின்றனர். ஒருவர் மீது ஒருவர் இடித்துக்கொள்கின்றனர். இடித்துக்கொண்டபிறகும் தங்கள் சிந்தனை வாய்ந்த நடையை நிறுத்தினபாடில்லை. சிந்தனை உக்கிரத்திக்குச் சென்றது போல் அவர்கள் ஓடவும் செய்தார்கள் இப்போது அடிக்கடி ஒருவர் மீது ஒருவர் இடித்துக்கொள்கின்றனர். சிந்தனைச்செய்யும் பாவனை அற்றுப்போய் இப்போது வெறுமனே ஓடுகின்றனர். ஓட்டத்தின் வேகம் குறைந்து சோர்வுறுகின்றனர். ஒவ்வொருவராக மயங்கி தரையில் விழுகின்றனர். மேடையை சிறிது நேரம் மெளனம் வியாபிக்கிறது. வெளியில் சென்ற அதிகாரியைப்போன்றவன் மீண்டும் உள்ளே வருகிறான். இர்ண்டு குருடர்களையும் அழைத்துவருகிறான். வரும் போதே அவர்களுடன் )

புதியவன் :நீங்கள் கவலை படாதீர்கள் உங்களை நான் தங்க வைக்கின்றேன்.

(கீழே மூன்று குருடர்களும் மயங்கி விழுந்திருப்பதைக் கண்டவன் பதைபதைத்துப்போய் அவர்களை துக்குகிறான். அவன் அழைத்து வந்து இரண்டு குருடர்களுக்கும் தம்மை அழைத்து வந்தவன் திடாரென பேச்சை நிறுத்திவிட்டதை உணர்ந்ததும்)

புதிய குருடன் 1 : ஐய்யா . . .

புதிய குருடன் 2 : ஐய்யா . . .

(பதிலில்லை. அவன் அவர்களின் மயக்கத்தைப் போக்குவதிலிலேயே குறியாய் இருந்தபடியால் இவர்களின் கூக்குரலுக்கு பதிலளிக்கவில்லை. அதனால் மேலும் கலவரம் அடைந்த புதிய குருடர்கள்)

புதிய குருடன் 1 : ஐய்யோ. நம்மை கைவிட்டுவிட்டாரே. அவர் எங்கே. யாரிடம் கொண்டுவந்து விட்டிருக்கிறார்.

புதிய குருடன் 1 : புழுக்கமான ஒருவித வாடைவீசுகிறதே. ஒருவேளை இது. . . அந்த மூன்று பேரு சொன்ன உடலுருப்பைவிற்கும் இடமாக இருக்குமோ.

புதிய குருடன் 2 :என்ன இருக்குமா என்கிறாய். அதேதான். நம்மை விற்றுவிட்டான். அவ்வளவு தான்.

புதிய குருடன் 1: நான் அப்போதே சொன்னேன். எதுவாகினும் நாமே தேடிப்பெற்றுக் கொள்ளலாம் என்று. கேட்டாயா. இவர் நல்லவர். அவரது குரல் கூட தெய்வத்தனமை கொண்டதாக இருக்கிறது> அதுயிதுயென்று சொன்னாயே இப்போது என்ன ஆச்சு.

(அவன் இவர்களது இந்த பேச்சைக்கேட்டதும் மலைத்துப்போய் அவர்கள் அருகில் வந்து உட்கார்ந்து கொள்கிறான். தான் அருகில் இருப்பதை வெளிப்படுத்தக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்துகொண்டு அவர்களையே கவனிக்கிறான்)

புதிய குருடன் 1 :இப்போது என்ன செய்வது.

புதிய குருடன் 2 :சப்தம் போடாதே என்னால் சுற்றிலும் என்ன நடக்கிறது என்று ஊகிக்க முடியவில்லை.

(இருவரும் மெளனமானார்கள். அவர்கள் மிக மிக கவனமாக தம் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டவர்கள் போல் அவர்களைச்சுற்றி வரும் ஓசைகளை கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது கீழே மயக்கமுற்று விழுந்திருந்த குருடர்கள் தம் சுயநிலையைக் கொஞ்சம் கொஞ்சமாக பெறத்தொடங்கினர். அவர்கள் அப்போது தம் உடலை அசைத்துக்கொண்டு உடல்வலியால் முனகிக்கொண்டே எழமுயற்சித்தனர். அந்த முனகல்களைக்கேட்டதும் புதியவர்கள் இருவரும் சுதாரித்துக்கொண்டு மெல்ல பின்னோக்கி நகர்ந்தனர்)

புதிய குருடன் 1 : ஐய்யோ நாம் எந்தப்பக்கம் போகவேண்டும்> எது பாதுகாப்பான இடம் நாம் உண்மையில் ஆபத்தில் தான் மாட்டிக்கொண்டிருக்கிறோமா. . . சு+ன்யமாய் இருக்கிறதே.

புதிய குருடன் 2 : சூ . . . பொறுமையாகப்பேசு. யார் காதிலாவது விழுந்துவிடப்போகிறது.

புதிய குருடன் 1 : நாம் எவர் பார்வையிலும் பட்டால் என்ன. அப்படியே யாராவது இருந்து பேசினாலும்> மெல்லப்பேசினால் என்ன வேகமாப்பேசினால் என்ன ?

புதிய குருடன் 1 : வேதாந்தாம் பேசாதே. இப்போதைக்கு சத்தம் போடாமல் இருப்பதே பாதுகாப்பு என்று நம்புவோம் அதன் படி நடந்துகொள்வோம் . வீணான கர்பனையெல்லாம் செய்து குழப்பாதே.

(அவன் அவர்கள் நகர்வதற்கேற்ப தானும் நகர்ந்து அவர்களுக்கு அருகில் இருக்கும் படி பார்த்துக்கொள்கிறான். மூன்று குருடர்களும் மெல்ல எழுந்து நிற்கின்றனர். அப்போது குருடன் 1)

குருடன் 1 : குருடர்களாப்பிறந்திக்ககூடாது.

குருடன் 2 : இப்போது ஒன்றும் செய்வதிற்கில்லை. நாம் குருடர்கள் அவ்வளவு தான். திடாரென்று நமக்கு கண்தெரிந்தால் கூட குருடர்களாய்த்தான் வாழ்வோம். விதவிதமான இருளைப் பார்த்துக்கொண்டு குருடர்களாய்த்தான் வாழ்வோம். இது குறையில்லை. மிகவும் சுதாரிப்போடு இருக்க வேண்டிய நேரம் இது.

குருடன் 3 :சுதாரிப்பு என்று முன்பு நம்மை வந்து மிரட்டிவிட்டுப்போனவனை மனதில் கொண்டு தானே சொல்கிறாய்.

(புதியவர்கள் இவர்களை(பழைய குருடர்களை) அடையாளம் கண்டு கொள்கின்றனர். தமக்குள் ஒரு தெளிவுக்கு வந்தவர்களாக)

புதிய குருடன் 1 : என்ன ஆலோசனைக்கூட்டமா ? பரவாயில்லை. நடத்துங்கள் நடத்துங்கள். இன்னும் கொஞ்ச நேரத்திற்குள் கையோ காலோ இருதையமோ இரத்தமோ இழக்கப்போவதற்குள் கடைசி ஆசைகளாக ஏதுவேண்டுமானும் பேசி சந்தோழித்துக்ககொள்ளுங்கள்.

குருடன் 1 :யார் நீ.

புதிய குருடன் 2 :என்னை அதற்குள்ளாகவா மறந்துவிட்டார்கள். நேற்றுத்தானே உங்களை சந்தித்துவிட்டுப்போனேன். இப்போது தான் எனக்கு நேரம் கிடைத்தது. உங்களுக்கு ஒரு முடிவைக்கட்ட.

குருடன் 2 :எதற்கு நீ இப்படியெல்லாம் பேசுகிறாய். நாங்கள் உனக்கு என்ன பாவம் செய்தோம்.

குருடன் 3 :உனக்கு என்ன தான் வேண்டும்.

புதிய குருடன் 2 :ஒன்றும் இல்லை. இங்கே இருண்டு பேர் வந்தார்களில்லையா. அவர்களுக்கு கொஞ்சம் இடா;தை ஒதுக்கித்தந்திருந்தால் இதெல்லாம் வந்திருக்குமா.

குருடன் 2 :இதேல்லாம் என்றால்.

புதிய குருடன் 2 :அடடே இதெல்லாம் என்று நான் சொன்னது . . . எதற்காக அதைப்பற்றி உங்களுக்கு விளக்க வேண்டும்.

குருடன் 1 :எங்களுக்குப்புரிகிறது. நீ எங்களது உறுப்புகளை வெட்டியெடுக்க உபகரணங்களைக் கொண்டு வந்திருக்கிறாய்.

(அவன் எற்தவித தடையும்மின்றி)

புதிய குருடன் 2 :ஆமாம் கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் அதற்கு முன் உங்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பத்தைத்தரலாம் என்று நினைக்கிறேன்.

குருடன் 1 :என்ன அது.

புதிய குருடன் 2 :இந்த இடத்தைவிட்டு நீங்கள் டாக்டர் வருவதற்குள் சென்றாவிட்டால் தப்பித்துக்கொள்ளலாம். அவர் டாக்டர் மற்றுமல்ல ஒரு பெரிய கொள்ளகைக்ாரனும் ஆவான் . ஆகையால் . . .

குருடன் 1 :சரி நாங்கள் போய்விடுகிறோம். உயிரைவிட வேறென்ன எங்களக்குத் தேவைப்படுகிறது.

குருடன் 3 :வருகிறோம்.

(மூன்று குருடர்களும் மேடையைவிட்டு உள்ளே சென்று விடுகின்றனர். அவன் புதிய குருடர்களை மிக மிக அதிர்ச்சியுடனும் ஆச்சர்யத்துடனம் பார்க்கிறான். அவர்களோ அந்த இடத்தை சுற்றிச்சுற்றி வருகிறார்கள். யாரும் இந்த இடத்தில் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு புதியகுருடன்2 கையைத்தட்டுகிறான். புதியகுருடன்1 அவனைநோக்கி வருகிறான். இருவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவிக் கொள்கின்றனர்.)

புதிய குருடன் 1 : இந்த இடம் மிகவும் பாதுகாப்பான இடம் என்று சொல்ல முடியாது. நம்மை கொண்டு வந்து இந்த இடத்தில் விட்டுவிட்டு அவன் எங்கேயோ சென்றுவிட்டான். நமக்காக இவர்களுடன் பரிந்து பெசி தங்கவைப்பதாகத்தான் சொல்லி ஆழைத்துவந்தான். ஆனால் திடாரென்ற அவன் காணாமல் போனது.

புதிய குருடன் 1 :ஒளிந்து கொண்டான் என்ற சொல். (அவன் தம்மைக்கண்டுபிடித்து விட்டார்களோ என்று அதிர்ந்தான்) அவன் நம்மை ஒரு வேளை இங்குவிட்டுவிட்டு வேறெங்காவது ஏற்பாடுகள் செய்ய சென்றிருக்கலாம்.

புதிய குருடன் 2 :எனக்கும் புரிகிறது. ஆனால் என்ன செய்வது. நாம் இப்படி அதிர்ந்து அதிர்ந்து பயத்தோடும் பீதியோடும வாழ்க்கையை நடத்தவேண்டும் என்று எழுதியிருக்கிறது. வரட்டும். வந்து என்னை கொள்ளட்டும் அதனைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் நான் அவன் வரும் நேரம் வரை நிம்மதியாக இந்த இடத்தில் வாழ்கிறேன். அவ்வளவு தான்.

புதிய குருடன் 1 :அவர்களை நாம் துரத்திவிட்டு வாழ்வது தான் மனதிற்கு என்னவோ போல் இருக்கிறது.

புதிய குருடன் 2 :போ. போ. அழைத்துவா அவர்களை. நாங்களும் உங்களைப்போல் குருடர்கள் தான் இடம் தாருங்கள் என்ற கெஞ்சி அவர்கள் காலில் விழுந்து இடம் கேள்.

புதிய குருடன் 1 :அப்படிக்கேட்டால் கொடுப்பார்காளா.

புதிய குருடன் 2 :அப்போது அவர்களுக்கு கண் தெரிந்து விடும். நம்மைக் கேலி பேசுவார்கள். ஒன்று தெரிந்து கொள் நீ குருடன் என்றால் நான் குருடனாயிருந்தாலும் உனக்கு என்னைப்ற்றித் தெரியாவரையில் நான் நன்றாக பார்க்கும் திறம் படைத்தவனே.

(அவன் மெல்ல எழுந்து அவர்கள் அருகில் வந்து அவர்களைத்தொடலாமா வேண்டாமா என்ற ஒருநிமிடம் யோசித்துவிட்டு சப்தம் போடாமல் அவ்விடத்தைவிட்டு சென்றவிடுகிறான். அவர்கள் இருவரும் மெல்ல நடந்து தடவித்தடவி அந்த இடத்தை ஆராய்பவர்களாக அறைமுழுவதும் செல்கின்றனர். கடைசியாக ஒருவன் அந்த மூன்ற குருடர்களும் படுத்திருந்த சுவற்றலமாறிக்கருகில் வந்து அதனை தொட்டுணர்கிறான். அதில் மெல்ல ஏறி அமர்கிறான் . பிறகு படுக்கிறான். கால் மேல் கால் போட்டுக்கொண்டு கையைத்தட்டி மற்றவனை அழைக்க அவனும் அங்கு வந்து அடுத்த அடுக்கில் ஏறி அமர்ந்து கொள்கிறான். பிறகு இருவருமாக)

~~நேற்றய கனவில் நமக்காக ஒதுக்கப்பட்டிருந்த வயலை

இப்போது தான் உழுது விதைக்க முடிந்திருக்கிறது.

—-

danasegar73@yahoo.com

Series Navigation

கணேசன், பாண்டிச்சேரி

கணேசன், பாண்டிச்சேரி