ஆதிவண்ணம்

This entry is part [part not set] of 39 in the series 20101212_Issue

ஹெச்.ஜி.ரசூல்



ஆதமைப்படைக்க
ஜிப்ரீல் அள்ளி எடுத்துவந்த மண்
கண்ணீரும்
மகிழ்ச்சியும்
குறும்பும்
கறுப்பும்
வெளுப்பும்
பச்சையும்
பன்னூறு வன்ணங்களும் கலந்ததொரு
விசித்திரக் கலவையாய் மாறியது
ஆகாசத்தின் விரிவெளிப் பரப்பில்
சந்திர சூரிய நட்சத்திர மண்டலங்களாய்
பூமியெங்கும் ஒளி நிரப்பும்
நூறாயிலின் ஆதிவண்ணம்
திசையெங்கும் படரும்
நதிகளை அருவிகளை பொழிவிக்க
மழையை அழைத்துவரும்
மீகாயிலின்வரவு
ஒரு அதிசயமென விரிகிறது.
கொள்ளைக் குதிரைகளின் மீதேறி
அசுரப் பாய்ச்சலில் சுழன்றுவரும்
இசுராயிலின் மரணக்கயிறு
மூச்சுக் காற்றை
பிடித்து நிறுத்த எத்தனிக்கும்
பிரளய நெருப்போடு
அழிவின் துக்கத்தை
இசுறாபீலின் ஊதுகுழல்
கியாமத்தின் மறுபக்கத்தை
பீதியோடு சுமந்துவரும்.
அன்பும் பயங்கரமும் சூழ எங்கெங்கும்
நானின் வண்ணங்கள்
பஞ்சபூதாத்கள் விரல்பட
வெற்றிடமற்ற அனைத்திலும்
நானென்ற இன்னொன்று

Series Navigation

author

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்

Similar Posts