ஆகஸ்டு-15
Published November 27, 2003 • By
நம்பி
நம்பி

—————–
ஹாட்மெயிலைத் திறந்து
காலை விரித்த கடங்காரிகளை
கூண்டோடு கடாசி
எஞ்சியதற்கு
‘வாழ்க பாரதம் ‘ சொல்லிவிட்டு
யாஹூ குழுமத்தில்
விசா கிடைத்த நாட்டான்களுடன்
சுதந்தரம் அடைந்துவிட்டோமென்று
ஆனந்த பள்ளு பாடிவிட்டு
கிணுகிணுத்த குறுஞ்செய்திகளை
தனித்தனியே வாழ்த்திவிட்டு
கடவுச்சீட்டு புதுப்பிக்க
கடைசி நாளென்றுணர்ந்து
திக்குத்தெரியாத நாட்டில்
மறைந்திருந்த தூதரகத்தை
தட்டுத்தடுமாறிக் கண்டெடுத்து
உள்ளே நுழைகையில்
‘இன்று போய் நாளை வா ‘
என மறைத்த
அறிவிப்பு உணர்த்தியது
அட, ‘ஆகஸ்டு-15 ‘.
—
nambi_ca@yahoo.com