அவுரங்கசீப் : மதச்சார்பின்மையின் முன்னோடி

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

அரவிந்தன் நீலகண்டன்


ஹமீது ஜாஃபரை சொல்லிக் குற்றமில்லை. அறுபது வருடங்களுக்குள்ளாக நடந்த அறுபது இலட்ச யூதப் படுகொலையையே பூசி மொழுகும் தலைவர்கள் பிரகாசிக்கிற இஸ்லாமிய மார்க்கத்தில், முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட அவுரங்கசீப்புக்கு பூசி மொழுகல் நடப்பது அதிசயம் அல்லவே!

காசியில் ஆலயத்தில் நடந்ததாகக் கூறப்படும் நிகழ்வுக்கு எவ்வித சான்றாதாரமும் இல்லை. என்பதுடன் காசியின் ஆலயங்களை இடித்திட அவுரங்கசீப் உத்தரவிட்டது குறித்த ஆவண ஆதாரம் அவை ஏன் இடிக்கப்பட்டன என்பதை தெளிவாக்குகின்றன.

மாசிர்-இ-ஆலம்கிரி, அக்பரத், ஃபாத்தியா-இ-இப்ரியா, கலிமத்-இ-அவுரங்கசீப், மரகத்-இ-அபுல் ஹுசைன், ஃபதுகத்-இ-அலம்கிரி, கன்ஸுல் மக்பஸ், முந்திகபு லபப் ஆகிய அனைத்துமே அவுரங்கசீப் குறித்த மொகலாய வரலாற்று ஆவணங்கள். அவுரங்கசீப் காலத்தில் வாழ்ந்த இஸ்லாமிய (ஒரே ஒரு ஹிந்துவும் இக்கூட்டத்தில் உண்டு) வரலாற்றாசிரியர்கள் அல்லது அதிகாரிகள். இவற்றில் பலவற்றில் காசி கோவில் இடிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவை எவற்றிலுமே சீதாராமையாவுக்கு பெயரில்லாத மெளல்வி பெயரில்லாத நண்பருக்கு சொன்ன விசயம் குறித்து எள்ளளவும் ஒரு குறிப்பு கூட இல்லை.ஒருவேளை காஃபீர் ஹிந்துக்களின் மனம் புண்பட்டுவிடக் கூடாது என்று கூறவில்லையோ தெரியவில்லை. ஆனால் அவர்களது மற்ற விவரணங்களை பார்க்கும்போது அத்தகைய மென்மையான எண்ணம் கொண்டவர்கள் போல தெரியவில்லை. ஹிந்துக்கள் கொல்லப்படும் போது அதனை மகிழ்ச்சி தெரியும் விதத்தில் ‘காஃபீர்கள் இஸ்லாமின் வீரர்களால் அழிக்கப்பட்டனர் ‘ ‘விக்கிரக ஆராதனையாளர்களை கொன்று பொய்மையின் இருளை அழிப்பது ‘ என்றெல்லாம் பதிவு செய்தவர்கள்தாம் இவர்கள். சொல்லப்போனால், சீதாராமையாவின் இந்த நாட்குறிப்பு நூல் வெளியான பின்னர்தாம் இப்படி ஒரு பேச்சே உருவானது. ஆக, முழுக்க முழுக்க வெளிப்படையாக தெரியக் கூடிய மதச்சார்பின்மை கப்சா இது.

இந்நிலையில் திரு ஹமீது ஜஃபார் ஒரு வக்கிரமான கற்பனையை உண்மை என வாதாடுவது எத்தகைய நேர்மை கேடு அல்லது ஒருவேளை இஸ்லாமிய மதநெறி சார்ந்த விசயமா என்பதனை வாசகர்களே தீர்மானிக்கட்டும். ஆனால் அதற்கு ஹமீது ஜாஃபர் அளிக்கும் ஒரு தருக்கம் கவனிக்கத்தக்கது. பல ஹிந்து கோவில்களுக்கு அவுரங்கசீப் மானியம் வழங்கியதாகவும், அப்படி மானியம் வழங்கிய அவுரங்கசீப் ஏன் காசி விசுவநாதர் கோவிலை மட்டும் இடிக்கவேண்டும் எனவும் அப்படி இடித்து அங்கே ஏதும் கொள்ளை அடிக்காததால், அங்கு பாண்டே கூறியது போல ஒரு அந்தணர் கோவிலில் ஒரு ராணியிடம் தகாத முறையில் நடந்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். ஆனால் ஏதோ காசி விசுவநாதர் கோவிலை மட்டும் காசியில் அவுரங்கசீப் இடிக்கவில்லை. காசியில் மட்டும் கூட ஹிந்து கோவில்களை அவுரங்கசீப் இடிக்கவில்லை.

ழு 1661 இல் பீகாரில் கோவில்கள் இடிக்கப்பட்டன.

ழு 1669 இல் ஹிந்துக்களின் கல்வி நிறுவனங்களும், கோவில்களும் முழுமையாக அழிக்கப் படும் படியான உத்தரவு அனைத்து பிரதேச பேரரசு பிரதிநிதிகளுக்கும் அனுப்பப்பட்டது.

ழு 1670 இல் காசியிலும் மதுராவிலும் கோவில்கள் தகர்க்கப்பட்டன.

ழு 1681 இல் முகலாய இராணுவம் செல்லும் வழியில் இருக்கும் அனைத்து கோவில்களும் அழிக்கப்பட உத்தரவு கொடுக்கப்பட்டது

ழு 1692 இல் மாகாண பேரரச பிரதிநிதிக்கும் உள்ளூர் ஃபஜுதாருக்கும் ரசூல்பூரில் இருக்கும் அனைத்து விக்கிரக வழிபாட்டுதலங்களையும் இடிக்கும்படி பேரரசரிடமிருந்து நேரடி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ழு 1694 இல் அஜ்மிரில் ஒரு கோவிலில் சிலைகளை பல்லக்கில் வைத்து பொதுமக்கள் வழிபடுகின்றனர் என்பது பேரரசருக்கு தெரியவந்தது. அங்கு பேரரசர் உடனடியாக அம்மாகாண பேரரச பிரதிநிதிக்கு அக்கோவிலை உடைத்து அங்கு வழிபாடுகளை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

‘ஆக்ராவில் ஒரு பெரிய கோவில் இருந்தது. அங்கு பல விக்கிரகங்கள் இருந்தன. அவை நகைகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. இந்த கோவிலில் வணங்க காஃபிர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வருவது வழக்கமாக இருந்தது. அதற்கு அரசாங்கம் தலைக்கு இத்தனை பணம் என நிர்ணயித்து வசூலித்து வந்தது. மிகப்பெரிய அளவில் அவர்கள் வருவது வழக்கமாக இருந்ததால் பெரிய அளவில் அரசாங்கத்திற்கு பணம் வசூலாகி வந்தது. இந்த பழக்கம் ஷாஜகானின் ஆட்சி முடிவடையும் வரைக்கும் இருந்தது. ஆனால் பாதுஷா அவுரங்கசீப் அவர்களின் ஆட்சி தொடங்கியதும், இது குறித்து கேள்விபட்ட மாமன்னர் ஆத்திரமடைந்து இந்த வழக்கத்தினை நிறுத்தினார். அவரது அரசவை பிரபுக்கள் இதனால் அரசாங்கத்திற்கு ஏற்படும் இழப்பினைக் குறித்து சுட்டிக்காட்டினர். பாதுஷா அவர்களிடம் ‘நீங்கள் கூறுவது உண்மைதான். இது குறித்து நான் சிந்தித்து விட்டேன். இந்த வசூல் இழப்பினை ஈடுசெய்ய ஜஸியாவினை விதிக்க ஓர் திட்டம் உள்ளது. இதன் மூலம் விக்கிர ஆராதனை ஒடுக்கப்படுவதுடன், வரி வசூல் மார்க்க ரீதியில் சரியானதாகவும் இருக்கும். ‘ என்று கூறினார். அரசவை பிரபுக்களும் இந்த முடிவினை ஏற்றுக்கொண்டனர். மாமன்னர் அந்த விக்கிரகங்களை அழித்து கோவிலை இடிக்க உத்தரவிட்டார் ‘ (கன்ஸூ-உல்-மக்ஃபஸ்)

-ஆக இது ‘ஆபரேசன் ப்ளூஸ்டாரும் ‘ இல்லை. கோவில் செல்வம் குறித்த கேள்வியும் இல்லை. போர்க்கால நடவடிக்கையும் இல்லை. முழுக்க முழுக்க முஸ்லீம் மதநெறி மட்டுமே அவுரங்கசீப்பினை கோவில் இடிப்பிற்கு தூண்டியுள்ளது என்பதனை காண முடியும். அவுரங்கசீப் கொடுத்ததாக இவர்கள் நீட்டி முழங்கும் எந்த ‘பர்மானும் ‘ அவனால் நேரடியாக வழங்கப்பட்டதல்ல. மாறாக அவனது ஹிந்து சுபேதார்கள் அங்கொன்று இங்கொன்றாக வழங்கியவை. சில தாராஷுகோவால் வழங்கப்பட்டவை. ஆனால் ஒவ்வொருமுறையும் இத்தகைய விசயங்கள் அவுரங்கசீப்பின் காதுக்கு எட்டிய போது அவை அவனது நேரடி உத்தரவின் பெயரில் அழிக்கப்பட்டன அல்லது நிறுத்தப்பட்டன. எனவேதான் அவுரங்கசீப் கொடுத்ததாக கூறப்படும் ‘ப்ர்மான்கள் ‘ ஒன்று கூட அவன் நேரடியாக கொடுத்த ஆணையாக இல்லாமல் பின்னர் வழக்கத்திலிருந்து தப்பி பிழைத்த ஆணைகளாக இருப்பதையும், மாறாக கோவில்களை அழிக்கவும், கோவில்கள் சீரமைப்பை தடைசெய்யவும், ஏற்கனவே உள்ளூர் சுபேதார்களால் அளிக்கப்பட்ட சில சொற்ப தானங்களும் நிறுத்தப்படவும் கொடுக்கப்பட்ட ஆணைகள் அவுரங்கசீப்பின் நேரடி ஆணைகளாக இருப்பதையும் காணலாம்.

‘அக்பரத் ‘ எனும் அவுரங்கசீப்பின் அரசாணைகளின் தொகுப்பிலிருந்து ஒரு ஆணை இதனை தெளிவுபடுத்தும்.

‘மதுராவில் உள்ள கேசவ ஆலயத்தில் கல் அமைப்பு தாரா ஹுகோவால் வழங்கப்பட்டது என பேரரசருக்கு தெரியவந்தது. ‘இஸ்லாமிய மார்க்கத்தின் படி ஒரு சிலைவழிபாடு நடக்கும் இடத்தை பார்ப்பதே தவறு. தாராஷூகோவோ ஒரு கல் சுவரை அமைத்துக்கொடுத்துள்ளானே இது இஸ்லாமிய மார்க்கத்தினருக்கு பெருமை சேர்ப்பதாகாது அந்த கல் சுவரையே உடையுங்கள். ‘ என மாமன்னர் அவுரங்கசீப் உத்தரவு பிறப்பித்தார். அவரது கட்டளையை ஏற்று அப்துல் நஃபி கான் (மதுராவின் ஃபஜுதார்) அந்த சுவரினை உடைத்தெறிந்தார். ‘

ஒருவேளை அக்கல் சுவர் அவுரங்கசீப்புக்கு தெரியவராமல் போயிருந்தால், ஹமீது ஜாஃபர் தப்பி பிழைத்த அந்த கல்சுவரையும் அவுரங்கசீப்பின் ‘மதநெறிக்கு ‘ எடுத்துக்காட்டாக திண்ணை வாசகர்கள் முன் வைத்திருப்பார். துரதிர்ஷ்டவசமான விசயம்தான். ஆனால் ஹமீது ஜாஃபர் இவ்வாறு பதிலளிக்கலாம்: ‘அவுரங்கசீப்பின் மதநெறிதான் என்னே! அவர் சுவரைத்தானே உடைத்தார் கோவில் கோபுரத்தை தொட்டாரா ? கோவில் படிக்கட்டை உடைத்தாரா ? அவரை போன்ற நல்ல மனிதர்களை தலிபான் காலத்தில்தானே பார்க்கமுடிந்தது! இதெல்லாம் இந்த பாசிச அரவிந்தன் நீலகண்டனுக்கு புரியுமா ? ‘

சாஹி முஸ்தாத் கான் எழுதிய ‘மா ஆஸிர்-இ-ஆலம்கிரி ‘ தெளிவுபடுத்துகிறது: ‘இசுலாமிய ஆண்டு 1080 இன் இந்த ரம்ஸான் அற்புதங்களின் காலமாக இருந்தது. நீதியை நிலைநாட்டுபவரும், அநீதியை அழிப்பவருமான பேரரசர் மதுராவில் இருந்த புகழ்பெற்ற கேசவநாதர் கோவிலை உடைத்தழிக்க உத்தரவிட்டார். விரைவில் அந்த பொய்மைதலம் அழித்தொழிக்கப்பட்டது. அந்த இடத்தில் ஒரு உன்னதமான மசூதியை பெரும் பொருட்செலவில் எழுப்பினார்… .அக்கோவிலில் இருந்த விக்கிரகங்கள் ஆக்ராவுக்கு கொண்டு வரப்பட்டு பேகம் சாகிப் மசூதியின் படிகளில், இஸ்லாமியர்களின் கால்களால் தினந்தோறும் மிதிபடும் படி போடப்பட்டன. ‘ ஒருவேளை இதனை படிக்கும் ஹமீது ஜாஃபர் அவுரங்கசீப்பின் மதநெறி குறித்து புல்லரிப்படையலாம். ஆனால் சாதாரண மனிதர்களுக்கு இது மதவெறியாக தெரிகிறது. ஒருவேளை ‘திருமறை ‘யில் மதவெறிதான் மதநெறியோ தெரியவில்லை. அல்லது ஒருவேளை இதனை அவுரங்கசீப் மதநல்லிணக்கத்துக்காக செய்திருப்பாரோ ? பட்டாபி சீதாராமையா, பாண்டே மற்றும் சதீஷ்சந்திராக்கள் கூறினாலும் கூறலாம். அந்த மதநல்லிணக்க சாதனைகளை இளிச்ச வாய் காஃபீர்கள் படித்து பக்ரீத் தின ஆடுகளின் நற்கதி அடைய ஈமானின் நேர்மையால் தூண்டப்பட்டு ஹமீது ஜாஃபர்கள் திண்ணையில் எழுதி போலி-மதச்சார்பின்மைக்கு சேவை செய்யலாம்.

மேலும் ஹிந்துக்களின் ஒப்பீட்டு விழுக்காடு -எண்ணிக்கை அல்ல- (comparative percentage and not actual numbers) அவுரங்கசீப்பின் அரசு தர்பாரில் உயர்ந்தது என்பது கூட ஒரு நவீன போலி-மதச்சார்பின்மைகளின் புரட்டு வேலைதான். அதி சாமர்த்தியமான புரட்டுவேலை. ஏனெனில் இந்த விழுக்காடு கூட ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும்தான். அறிஞர்கள், கவிஞர்கள் போன்றவர்கள் நீக்கப்பட்டு சில ஆண்டுகளுக்குத்தான். அவ்வாறு நீக்கப்பட்டவர்கள் உடனடியாக நீக்கப்படாமல் சுபேதார்களாக இராணுவத்தில் சேர உத்தரவிடப்பட்டதன் விளைவாகத்தான். அவுரங்கசீப்பின் ஆட்சியில் ஹிந்துக்கள் அவர்கள் வகிக்கும் பதவிக்கு தகுதியான இஸ்லாமியர்கள் கிடைக்கும் வரை சகித்துக்கொள்ளவே பட்டார்கள் என்பதனை தெளிவுபடுத்துகிறார் வரலாற்றாசிரியர் முகமது யாசின்(A Social History of Islamic India, லக்னோ, 1958, பக். 44-49)

அடுத்ததாக, இந்த 80 வரி சமாச்சாரத்தையும் சிறிது தெளிவாக பார்ப்போம். காபி கானே இதனையும் தெளிவுபடுத்துகிறான் (பக்.87). அவுரங்கசீப் ஏன் வரிகளை நீக்கினான். அவனது வாரிசுரிமை போர்களின் காரணமாக அவனது இராணுவம் நாடெங்கும் அலைந்ததில் விளைச்சல்கள் சீர்குலைந்தன. மேலும் பருவமழையும் அப்போது பொய்த்தது. எனவே மக்களிடம் வரிவசூல் செய்வதென்பது இயலாத காரியமாக இருந்தது. இதன் விளைவாக பல வரிகள் நீக்கப்பட்டன. இது ஏதோ ஹிந்துக்களுக்காக செய்யப்பட்ட சலுகை அல்ல. மாறாக பொருளாதாரம் ஏறக்குறைய தகர்ந்துவிட்ட நிலையில் பொருளாதார இயந்திரம் மீண்டும் செயல்பட கொடுக்கப்பட்ட உத்வேகம் மட்டுமே. 80 வரிகளில் ஹிந்துக்களுக்கான சலுகைகளாக எதுவும் கொடுக்கப்படவில்லை. மதுபானங்களுக்கான வரிகள், சூதாட்டத்தின் மீதான வரிகள், பொதுமாதர் இல்லங்களின் மீதான வரிகள் ஆகியவையும் நீக்கப்பட்டன. ஹிந்து விழாக்களின் மீதான வரிகளுடன் இஸ்லாமிய ‘அருளாளர்கள் ‘ அடக்கதலங்களில் நடக்கும் விழாக்கள் மீதான வரிகளும் நீக்கப்பட்டன. ஆனால் அவுரங்கசீப்பின் தொடர் ஆணைகள் ஹிந்துக்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறிப்பதாகவே அமைந்தது.

1665 இல் ஹிந்துக்கள் மீது புனித தலங்கள் செல்வதற்கான வரி மீண்டும் சுமத்தப்பட்டது.

1668 இல் தீபாவளிக்கு வெளிப்படையாக இல்லங்களில் தீபங்கள் ஏற்றுவது தடைவிதிக்கப்பட்டது.

ஹமீது ஜாஃபர் சிலாகித்து கூறும் அவுரங்கசீப்பின் மதநெறியின் உச்சகட்ட முத்திரையாக நமக்கு கூறப்படுவது ஜஸியா. அதாவது மாற்றுமதத்தினருக்கான ‘பாதுகாப்பு வரி ‘. உண்மையில் இது பாதுகாப்பு வரி அல்ல என்றும் அவமானப்படுத்துவதற்காக விதிக்கப்படும் வரி என்பதும் இஸ்லாமிய மதத்தினை ஏற்க உருவாக்கப்படும் சமுக-பொருளாதார நிர்ப்பந்தம் என்பதும் ஹமீது ஜாஃபருக்கு தெரியாமல் இருக்க முடியாது. இன்றைய சூழலில் பெரும்பான்மையாக இருந்து தொலைக்கும் காஃபீர்களுக்கு சொல்லப்படும் சால்ஜாப்புகளில் வேண்டுமானால் ஜஸியா பாதுகாப்புவரியாக மாற்றப்படலாம். கேட்கிற கேனயன்களில் புத்தி இல்லாதவன் நம்பட்டுமே என சொல்லப்படுவதாக இருக்கலாம். ஆனால் அன்று (ரொம்ப தொலைவில் இல்லை ஒரு நானூறு ஆண்டுகளுக்கும் குறைவாகத்தான்) மொகலாய பேரரசனாக அவுரங்கசீப் இருந்த போது ஜஸியா விதிக்கப்பட்டது குறித்து எவ்வாறு கூறப்பட்டது ? அதனைத் தொடர்ந்து அவுரங்கசீப் தமது ஹிந்து பிரஜைகளிடம் காட்டிய அன்பான, ஆதரவான, நடவடிக்கை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். வரலாற்றாசிரியரான கவாஜா மிரின் மகனும் வரலாற்றாசிரியருமான காபி கான் எனப்படும் முகமது காசிம் எனும் காசில் அலி கான் எழுதிய முந்தகாபு-இல்-லுபப் முகமது ஷாஹி எனும் பொதுவாக தாரிக்-இ-காபி கான் என அறியப்படும் நூலில் ஜஸியா ஏன் விதிக்கப்பட்டது என்பது குறித்தும் அதனால் ஆத்திரமடைந்த மக்கள் எத்தட்டு மக்கள் என்பது குறித்தும் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது:

(மொழி.பெயர்ப்பு. எஸ். மொய்னுல் ஹக், பதிப்பகம்: கராச்சி: Pakistan Historical Society, 1975 பக். 258-259)

‘காஃபீர்களை ஒடுக்கும் பொருட்டும், காஃபீர்களின் நாடாக அல்லாமல் இஸ்லாமிய மார்க்க நாடாக விளங்கும் பொருட்டும் ஜஸியா வரியினை அனைத்து பிரதேசங்களிலும் ஹிந்துக்கள் மீது சுமத்தும்படி அவுரங்கசீப் உத்தரவிட்டார். டெல்லியிலும் சுற்று வட்டாரங்களிலும் உள்ள ஹிந்துக்கள் கூடி அரண்மனையின் முன்னர் வந்து இந்த வரியை தாங்கள் செலுத்த இயலாத நிலையில் இருப்பதாகவும், இதனை பேரரசர் திரும்ப பெறவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். ஆனால் பாதுஷா அதனை பொருட்படுத்தவில்லை. அவுரங்கசீப் ஒரு வெள்ளிக்கிழமை மசூதிக்கு தொழுகைக்கு செல்லும் நாள் அவருக்கு முன்னர் மக்கள் -செலாவணி மாற்றக்காரர்கள், சிறு வியாபாரிகள், கைவினைஞர்கள், தொழிலாளர்கள்- பெருமளவில் கூடினர். தங்கள் வேலைகளை நிறுத்திவிட்டு அவர்கள் பேரரசரிடம் கூட்டமாக வந்து முறையிட்டனர். பாதுஷா வீரர்களிடம் ஒரு பாதையை உருவாக்க கோரியும் அது முடியவில்லை. மக்கள் கூட்டமாக கூடி விண்ணப்பித்தவாறு இருந்தனர். பேரரசருக்கு மசூதி போக முடியாத உடன், அவர் யானைகளை தருவித்து அங்கு கூடியிருந்த மக்களின் மீது ஏவிவிடக் கூறினார். அவ்வாறே ஏவி விடப்பட்டது. பலர் யானைகளின் கீழ் மிதிப்பட்டு செத்தனர். அப்படியும் மேலும் சில நாட்களுக்கு ஹிந்துக்கள் கூடி ஜஸியாவை நீக்க கோரிக்கை விடுத்தபடியே இருந்தனர். ‘

’80 வரிகளை நீக்கிய ‘ பேரரசர் தனது சொந்த தலைநகரில் ஹிந்துக்களிடம் அதுவும் சாதாரண தொழிலாளிகள், சிறு வியாபாரிகளிடம் நடந்து கொண்ட கருணா விநோதம் மேற்கூறப்பட்டது. கூட்டத்தினர் எவ்வித வன்முறையிலும் ஈடுபடவில்லை என்பதை பாருங்கள். அவர்கள் செய்த ஒரே விசயம் அவர்கள் வழி மறித்து விண்ணப்பித்தது மட்டும்தான். காஃபீர்கள் வன்முறையில் மட்டும் ஈடுபட்டதாக காபிகானே கூறவில்லை. (இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் மக்கள் திரண்ட போது அவுரங்கசீப் மீது செங்கல்கள் வீசப்பட்டன.) யானையின் கீழ் மிதிபட்டு செத்தாலும் பரவாயில்லை ஜஸியாவை கட்டமாட்டோம் என்கிற அளவுக்கு அப்படி அந்த ‘சிறிய பாதுகாப்பு வரியில் ‘ என்னதான் விசயம் இருந்திருக்கக் கூடும் ? ஒருவேளை யானைகளின் கீழ் மிதிபட்டு செத்த ஹிந்துக்கள் அப்படி செத்தால் மோட்சம் கிடைக்கும் என எண்ணியிருக்கக் கூடுமோ (ஏற்கனவே ஜகன்னாதர் தேர் திருவிழாவில் ஹிந்துக்கள் அப்படி சாவார்கள் என மிசிநரிகள் கூறிய கதையை பின்னர் அங்கிருந்த கலெக்டரே பச்சைபொய் என எழுதிய வரலாறு பின்னாளில் இருக்கிறதே) அந்த ஹிந்துக்களுக்கெல்லாம் பரமபதம் அளிப்பதன் மூலம் அவுரங்கசீப் தனது மத நல்லிணக்கத்தை மீண்டும் நிலைநாட்டிக் கொண்டிருப்பானோ! மதநல்லிணக்கத்துக்காக இந்த முஸ்லீம் அரசர்கள்தான் எத்தனை கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள். அவர்களை போய் கொடுங்கோலர்கள் என்று சொல்லலாமா ? ஹமீது ஜாஃபர் வருத்தப்படுவதில் நியாயம் இல்லாமல் இல்லை. அவரிடமும் அவர் கூட்டத்தாரிடமும் அரசதிகாரம் இருந்திருந்தால் மீண்டும் இப்படி ஒரு மதநல்லிணக்க நிகழ்வை வார வாரம் வெள்ளிக்கிழமை நடத்தியிருக்கலாம். என்ன செய்வது! கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் ஜாஃபர். க்வாட்ராச்சியின் தோழி அண்டோனியா அம்மையாரின் கருணையில் இப்போதுதான் இராணுவத்தில் மத அடிப்படை கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. அவுரங்கசீப்பின் மதநல்லிணக்க லீலைகளை பாரத நகரங்களில் முகமதுவின் நல்லடியார்கள் நடத்தும் அந்த நாளும் வந்திடாதோ எனும் ஜாஃபரின் ஏக்கம் தீர்ந்தாலும் தீரலாம். அதுவரை காஃபீர்கள் காந்தி-நேரு சமாதிகளில் ஈஸ்வர அல்லா தேரே நாம் என இளிச்சவாய் தனமாக பாடிக் கொண்டிருக்கலாம்.

அவுரங்கசீப்பின் மதவெறி …மன்னிக்கவும் மதநெறி எந்த அளவுக்கு வரிவிதிப்பதில் விளையாடியது என்பதனை இன்னமும் தெளிவாக்குகிறது காபிகானின் நூல் (பக். 229) ‘முஸ்லீம்களின் அனைத்து வர்த்தக சரக்குகளுக்கும் ஹிந்துஸ்தானம் முழுமைக்கும் வரிகளிலிருந்து விடுப்பு அளிக்க பேரரசர் உத்தரவளித்தார். ஆனால் சில காலத்திற்கு பிறகு அனுபவசாலிகள் பேரரசருக்கு அறிவுரைகள் வழங்கினர், மற்றும் வருமானத்துறை அதிகாரிகளின் அறிக்கைகளின் அடிப்படையில் முஸ்லீம்களின் பொருட்கள் விலை அதிகமாக இல்லாதிருப்பின் அவை சுதந்திரமாக அனுமதிக்கப்பட வேணும் என்றும், விலைமதிப்புள்ள பொருட்களுக்கு மட்டும் வரியும் விதிக்கப்பட்டது. வருவாய் துறை அதிகாரிகள் முஸ்லீம்கள் சிறு சிறு அளவுகளில் தமது சரக்குகளை அனுப்புவதுடன் ஹிந்துக்களும் முஸ்லீம்களின் பெயரில் அனுப்ப உதவுகிறார்கள் என அறிவித்தனர். எனவே மீண்டும் வரிகளில் முஸ்லீம்கள் 2.5 சதவிகிதம் வரியும், ஹிந்துக்கள் ஐந்து சதவிகித வரியும் கட்டவேண்டுமென பேரரசர் அறிவித்தார். ‘ (இன்றைய UPA அரசின் அன்றைய முன்னோடியாக மகாத்மா அவுரங்கசீப் விளங்கியிருக்கிறான். எனவே அவனே மதச்சார்பற்ற ‘இண்டியாவின் ‘ தேசத்தந்தை. குறைந்தபட்சம் ‘இண்டியாவின் ‘ தேசத்தந்தை பட்டத்தில் 5 சதவிகிதம் அவுரங்கசீப்புக்கு அளிக்க வேண்டும் என்று இதனை படிக்கிற காங்கிரஸ் மகானுபாவன்கள் யாராவது தீர்மானம் கொண்டு வரலாம்.) மரணதண்டனை குறித்த வழக்குகள் இஸ்லாமிய மதகுருக்களிடம் அவுரங்கசீப்பால் அளிக்கப்பட்டன என ராஃபத் பில்கிராமி எழுதிய ‘Religious and Quasi-Religious Departments of the Mughal Period (1556-1707) ‘ (முன்ஷிராம் மனோகர்லால் பதிப்பகம் புதிடெல்லி, 1984 பக்.103) குறிப்பிடுகிறார். ஹிந்துக்களுக்கு இதில் எத்தகைய ‘நீதி ‘ கிடைத்திருக்கும் என்பதை அறிந்து கொள்ள நீங்கள் ராக்கெட் சயிண்டிஸ்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஹிந்துக்களை பொறுத்தவரையில் இஸ்லாம் அல்லது மரணம் என்பதாகத்தான் இது அமைந்தது.

ஆக, ஒவ்வொரு துறையிலும் ஹிந்துக்களுக்கு எதிராக அவர்களுக்கு பொருளாதார நெருக்கடி அளித்து அவர்களை மதம் மாற்ற முயற்சித்தவன்தான் அவுரங்கசீப். அவனை சொல்லி குற்றமில்லை. இதெல்லாம் முகமதுவுக்கு ‘அல்லாவிடமிருந்து வந்த கட்டளைகளின் ‘ நெறிமுறை என்றுதான் சொல்லவேண்டும். முகமது அராபியாவின் பாகன்களுக்கும் யூதர்களுக்கும் எதிராக செய்யாத ஒன்றையும் அவுரங்கசீப் செய்திடவில்லை. ஆம் அவுரங்கசீப் மனம் பிறழ்ந்த மதவெறியனல்ல, அவன் தெளிவாக இஸ்லாமிய மார்க்க நெறியின் படி நின்றவன் அவ்வளவுதான். இனி ஜஸியாவிற்கே வரலாம்.

ஜஸியாவின் முக்கியத்துவம் அது திமிகளை (ஹிந்துக்கள் வாஸ்தவத்தில் வாழவே உரிமையற்ற காஃபீர்கள். ஆனால் அவர்களை முழுமையாக அழிப்பது சாத்தியமில்லை என்பதால் முஸ்லீம் அரசுகள் வேறு வழியின்றி இஸ்லாமிய மதக்குருக்களால் வேண்டாவெறுப்புடன் திமிகளாக்கப்பட்டனர்.) அவமானப்படுத்திட உருவாக்கப்பட்டதாகும். ஜஸியா ‘ஒருவன் மரணமடைகையில் அல்லது இஸ்லாத்தை ஏற்கையில் ‘ அவனிலிருந்து நீங்கும் என அவுரங்கசீப்பின் அறிக்கை கூறுகிறது. மட்டுமல்ல ஒரு முஸ்லீம் ஹிந்துவானால் அவன் ஜஸியா கொடுக்கக் கூடாது மாறாக அவன் கொல்லப்பட வேண்டும் எனவும் அவனது ஜஸியா குறித்த அறிக்கை கூறுகிறது. ஜஸியா கொடுக்கையில் கடைபிடிக்க வேண்டிய நெறிகளையும் அவுரங்கசீப் தனது அறிக்கையில் தெளிவாகக் கூறியுள்ளான். ஒவ்வொரு ஹிந்துவும் அவன் அவனே போய் கொடுக்க வேண்டியது. தனது ஏவலரை அனுப்பக் கூடாது. கொடுப்பவன் நின்று கொண்டிருக்கவேண்டும். வாங்கும் அதிகாரி அமர்ந்த படி இருப்பான். அவனது கை மேலாக இருக்கும். கொடுப்பவன் கை கீழாக இருக்கும். மேலும் அந்த அதிகாரி ‘ஜஸியாவை செலுத்திடு முஸ்லீம் அல்லாதவனே ‘ எனக் கூறி ஜஸியாவை வாங்குவான். ‘ (பத்வா-இ-ஆலம்கிரி) இத்தகைய வரியின் நோக்கம் ஏற்கனவே மீண்டும் மீண்டும் இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களால் மகிழ்ச்சியுடன் பதிக்கப்பட்டுள்ளது. அது முஸ்லீம் அல்லாதவர்களை அவமானத்திற்கு ஆள்படுத்தி இஸ்லாமினை ஏற்க வைப்பதே ஆகும். இந்த அவமானகர வரியுடன், இதர வரிகளில் மதரீதியான இஸ்லாமியர்களுக்கான சலுகைகளையும் ஹிந்துக்களுக்கான பளுக்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் எத்தகைய ஆட்சியினை ஹிந்துக்கள் முன்னால் ஹமீது ஜாஃபர் நேர்மையுடன் மத நல்லிணக்கம் என முன் வைக்கிறார் என்பதனை அறிந்து கொள்ளலாம். மேலும் அது சொற்பமான தொகை என்பதும் கூட சரியல்ல. குஜராத்திலிருந்து வந்த வரிப்பணத்தில் நான்கு சதவிகிதம் ஜஸியா மூலம் கிடைத்தது. ஜஸியா வசூலிப்பவனின் அவமானகர நடத்தையிலிருந்து தப்ப ஹிந்துக்கள் இஸ்லாத்தை தழுவுமாறு அது நிர்ப்பந்தித்தது. காபி கானின் வார்த்தைகள் ஜஸியா எவ்வாறு வசூல் செய்யப்பட்டது என்பதையும் அது எவ்வளவு இருந்தது என்பதையும் தெளிவுபடுத்துகின்றன: ‘நகரம் மற்றும் நாட்டில் வாழ்ந்த காஃபீர்கள் ஜஸியா வரி கொடுக்க பெரும் எதிர்ப்பை தெரிவித்தனர். மக்களின் எதிர்ப்பும், அதிகாரிகளுக்கு தொந்தரவும் இல்லாத ஒரு மாவட்டம் கூட நாட்டில் கிடையாது.மிர் அப்துல் கரீம் எனும் திறமையான நேர்மையான அதிகாரி ஜஸியாவை வசூல் செய்ய தகுந்த இராணுவத்துடன் பர்கான் பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அவனுக்கு உதவியாக ஜஸியா கொடுக்க மறுக்கும் மக்களை தண்டிக்க உள்ளூர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டது. .அவுரங்கசீப் மூன்று அல்லது நான்கு மாதங்கள் சுகமாக பர்கான்பூரில் தங்கியிருந்தார். அவர் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னதாக அப்துல் கரீம் போன வருடத்து ஜஸியாவாக 26000 ரூபாய் அந்த நகரிலிருந்து வசூலிக்கப்பட்டதாக அறிவித்தார். அமின் -இ-ஜஸியாவான அப்துல் கரீம் மூன்றுமாதத்தில் பர்கான்பூரின் அருகாமையிலுள்ள பாதி ஊர்களிலிருந்து வசூலிக்கப்பட வேண்டிய பணமாக ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் வசூலித்திருந்தார். ‘ (பக்.278 பாகம்-2) மிகச்சிறிய அளவிலான ஒரு பாதுகாப்பு வரியை வசூலிக்கக் கூட அதிகாரிகள் ஊருக்கு ஊர் இராணுவத்துடன் அனுப்பப்பட வேண்டியிருந்தது என்றால், பாவம் அவுரங்கசீப் உண்மையிலேயே அந்த நல்ல மனிதனுக்கு இந்த பாழாய்போன காஃபீர் ஹிந்துக்கள் எவ்வளவு தொல்லை கொடுத்திருக்க வேணும்!

இனி சத்நாமிகள் விசயத்திற்கு வரலாம்.

சத்நாமிகள் காட்டுமிராண்டிகள் என எழுதுகிறார் ஜாஃபர். நாரனூல் மற்றும் மேவாட் பர்கானாக்களில் 3000-4000 ஸத்நாமிகள் வசித்து வந்தனர். இவர்களைக் குறித்து காபிகானால் எழுதப்பட்ட தாரிக்-இ-காபி கான் எனும் நூலில் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்:

‘இவர்கள் துறவிகளைப் போல உடையணிந்திருப்பார்கள். சிறிய அளவில் விவசாயமும் வாணிபமும் செய்வார்கள். அவர்கள் தங்கள் மார்க்கத்தின் அடிப்படையில் தங்களை ‘திரு நாமத்தார்கள் ‘ (சத்-நாம்) என மேன்மைப்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் நியாயமான முறையில் அன்றி செல்வம் சேர்ப்பதில்லை. அவர்களை யாராவது ராணுவபலம் கொண்டு அடக்க நினைத்தால் அவர்கள் அதனை சகிப்பதில்லை. அவர்களில் பலர் ஆயுதபாணிகள். ‘ (பக்.252)

என்ன நடந்ததென்றால் சத்நாமி விவசாயி ஒருவனை கொன்ற மொகலாய ‘வீரனை ‘ சத்நாமிகள் கொன்றுவிட்டனர். அந்த சத்நாமிகளை கைது செய்ய சிக்கிதாரால் முடியவில்லை. ஃபவுஜுதாரான தலாப்கான் ஒரு பெரும்படையை சத்நாமிகளுக்கு எதிராக அனுப்பினான். அப்படையையும் அவர்கள் முறியடித்தனர். தலாப்கான் உடனே மேலும் படை சேர்த்துக்கொண்டு, சுற்றுவட்டாரங்களில் உள்ள ஜமீன்தார்களையும் சேர்த்துக்கொண்டு சத்நாமிகளை எதிர்த்தான். இப்போரில் பல சத்நாமிகள் கொல்லப்பட்டாலும் இந்த படையையும் அம்மக்கள் விரட்டிவிட்டனர். பல முறை நடந்த போர்களின் பின்னர் தலாப்கான் கொல்லப்பட்டான். சத்நாமிகள் நாரனூலில் சுயாட்சியை ஏற்படுத்தினர். அவர்களே வரி வசூல் செய்தனர். இறுதியில் அவுரங்கசீபே அவர்களுடன் போர் செய்ய வெளி வந்தான். ஹமீதுகான், யாகியாகான், ஷுஜத் கான் ஆகியோர் இம்மக்களை படுகொலை செய்து அவுரங்கசீப்பின் மகிழ்ச்சிக்கு பாத்திரமானார்கள் என்கிறது மாஸிர்-இ-ஆலம்கிரி. முழுக்க முழுக்க அடித்தள மக்களின் கலகமாகவே இது பார்க்கப்பட வேண்டிய விசயமாகும் இது. இத்தகையதோர் கலகத்தை உருவாக்கும் சமூக பொருளாதார காரணிகள் கொண்ட சாம்ராஜ்யாதிபதியின் இலட்சணமும் இதில் விளங்கும். இன்றைக்கு எஞ்சிய சத்நாமிகள் தலித்துகள் என்பதுடன், இவர்களை மதமாற்றும் திட்டங்கள் மேல்நாடுகளில் கனத்த உளவியல் உக்திகளுடன் வகுக்கப்படுகின்றன.

ஆனால் வாணிபமும் விவசாயமும் சிறு அளவில் செய்தபடி, நியாயமான முறையில் அன்றி செல்வம் சேர்க்காத சுதந்திர வேட்கை கொண்ட ஒரு சமுதாயம் ஜாஃபரின் பார்வையில் காட்டுமிராண்டித்தனமானது. இஸ்லாமிய இறையியல் பார்வையின் விளைவா அல்லது சூஃபி ஞானமா தெரியவில்லை. என்றபோதிலும் இப்பார்வையும் கூட இஸ்லாமிய வரலாற்றுத்தன்மையின் ஒருவித தொடர்ச்சியாக இருக்கலாம். சத்நாமிகளை சாஹி முஸ்தாத் கான் மாஸிர்.இ.ஆலம்கிரியில் பின்வருமாறு கூறுகிறான்: ‘கலகக்காரர்கள், கொல்லர்கள், ஆசாரிகள், தோட்டிகள், தோலுரிப்பவர்கள் ஏனைய இழிபிறவிகள், மடையர்கள் கர்வக்காரர்கள் பெருமையால் தங்களை தாங்களே அழித்திட முன்வந்தது அதிசயமான விசயம்தான் ‘ (பக். 114)

ஜாஃபர் எழுதுகிறார்: ‘அவருக்கு எதிரான சதித் திட்டங்கள் பெரும்பாலும் மந்திர்களில் தீட்டப்பட்டன. எனவே அன்னை இந்திரா காந்தியின் பாணியில் Oparation (sic!)Blue Star (ஆமிர்தசரஸ் பொற்கோயில்) நடத்தி எதிரிகளை ஒழிக்கவேண்டிதாகிவிட்டது. இத்தகைய அடக்குமுறைகளுக்கு இந்து மன்சூதார்களே அனுப்பப்பட்டனர். ஆனால் அதனால் சேதமடைந்த ஆலயங்களை அவுரங்கசீப் தன்னுடைய நேரடிப் பார்வையில் செப்பனிட்டதாக ‘கிஸ்ஸா யே ஆலம்கீர் ‘ என்ற உர்து மொழி புத்தகத்தில் ஓம் ப்ரகாஷ்லால் சியால்கோட்டி எனவர் குறிப்பிட்டுள்ளார் (1909 ம் ஆண்டு லாகூர் பதிப்பு). மூல நூலான ஆலம்கீர் நாமா, ஈஸ்வர்தாஸ் நாகர் என்பவரால் பார்ஸி மொழியில் எழுதப்பட்டது. ‘

ஆலம்கீர் நாமாவை எழுதியவரின் பெயர் ஈஸ்வரதாஸ் நாகரா ? ஓகோ! ஐயா ஜாஃபரே சிறிது உமது தகவல்களை சரி பாரும். ஈஸ்வர்தாஸ் நாகர் எழுதிய நூலின் பெயர் ஆலம்கீர் நாமா அல்ல.ஆலம்கீர் நாமாவை எழுதியவர் மிர்ஸா முகமது காஸம். ஃபதூகத்-இ-ஆலம்கிரியை எழுதியவன்தான் ஈஸ்வரதாஸ் நாகர். மொகலாய அதிகாரியான ஈஸ்வரதாஸ் நாகர் வரி வசூலிக்கும் பதவியை வகித்தவன். அவுரங்கசீப்பை மிகவும் சிலாகித்தவன். 1687 முதல் 1700 ஆண்டு வரைக்குமான காலகட்டத்தில் அவுரங்கசீப் நடத்திய சாகசங்களை குறிக்கும் ஃபதூகத்-இ-ஆலம்கிரியில் துரதிர்ஷ்டவசமாக நண்பர் கூறுவதற்கு நேர் எதிரான வாசகங்கள் காணப்படுவது ஆர்.எஸ்.எஸ் சதி வேலை என்பதில் ஐயமில்லை: மொகலாய இராணுவம் மதுராவின் அருகில் முகாமிட்டுருக்கையில் அங்குள்ள ஒவ்வொரு கோவிலையையும் இடித்து அவை இருந்த இடத்தில் மசூதியை எழுப்புமாறு அவுரங்கசீப் கட்டளையிட்டதை அந்நூல் தெரிவிக்கிறது. ஃபஜூதாரின் பெயர் அப்துல் நபி கான். (தன்ஸீம் அகமதுவால் மொழி பெயர்க்கப்பட்ட ஈஸ்வரதாஸ் நாகரின் ஃபதூகத்-இ-ஆலம்கிரி, டெல்லி, 1978, பக்.82 பதிப்பகம்:Idarah-I Adabiyat-I Delli) மட்டுமல்ல ஹிந்து கோவில்களை உடைக்க அனுப்பப்பட்டவர்களின் பெயர்கள் பல மொகலாய வரலாற்று ஆவணங்களில் பதிந்துள்ளன. அவற்றுள் சில:

1) 1661 இல் பீகாரில் பலமவ் பிரதேசத்தில் ஹிந்து கோவில்களை அழிக்க அனுப்பப்பட்டவன் பெயர் தாவூத்கான். (ஆலம்கீர் நாமா)

2) வங்காளத்தில் அதே ஆண்டின் இறுதியில் பல கோவில்களை உடைத்து அவற்றில் இருந்த விக்கிரகங்களை உடைத்து அவற்றினை மசூதிகளாக மாற்றியவன் மீர் ஜமால். (ஆலம்கீர் நாமா)

3) 1679 இல் இராஜஸ்தானில் காந்தேலாவில் அங்குள்ள பெரிய கோவிலை உடைத்து வர அனுப்பப்பட்டவன் தாரப் கான். (மாஸிர்-இ-ஆலம்கிரி)

4)1679 இல் ஜோத்பூரிலிருந்து கோவில்களை உடைத்து ஒரு வண்டி நிறைய விக்கிரகங்களைக் கொண்டு வந்து அவற்றினை அவுரங்கசீப்பிடம் மசூதி படிகளில் ஈமான் கொண்ட முஸ்லீம்களால் மிதிக்கும்படி அளித்தவன் பெயர் கான் ஜகான் பகதூர் (மாஸிர்-இ-ஆலம்கிரி)

5) 1680 இல் உதய்பூரில் உள்ள ஹிந்து கோவில்களை உடைக்கும் ஒரே நோக்கத்துடன் சென்று அழித்தவர்களின் பெயர்கள்: ருகுலா கான் மற்றும் யாகாதாஸ் கான் (மாஸிர்-இ-ஆலம்கிரி)

6) 1680 இல் உதய்சாகர் ஏரியை பார்வையிட சென்ற போது அங்கிருந்த காஃபீர்களின் மூன்று கோவில்களை உடைத்தெறிய உத்தரவிட்டது அவுரங்கசீப். அங்கும் சுற்றுவட்டாரங்களிலும் உள்ள 122 கோவில்களை உடைத்த வீரத்திற்காக பகதூர் பட்டம் பெற்றவனின் பெயர் ஹஸன் அலி கான்.(மாஸிர்-இ-ஆலம்கிரி)

7) 1680 இல் சித்தூருக்கு அவுரங்கசீப் சென்றபோது அங்கிருந்த 63 கோவில்களை இடிக்க உத்தரவிட்ட மதச்சார்பற்ற மகாத்மாவின் பெயர் அவுரங்கசீப். ஆலய உடைப்பினை நிறைவேற்றிடும் பொறுப்பு அளிக்கப்பட்ட அதிகாரி: அபுதூராப் (மாஸிர்-இ-ஆலம்கிரி)

ஹமீது ஜாஃபர் என்பவர் எழுதிய ஒரு குறிப்பிட்ட கட்டுரை ஏன் எனது வலைப்பதிவில் போடப்பட்டது ? இஸ்லாம் ஏதோ ஒற்றைத்தன்மை கொண்டதல்ல அது மாறுப்பட்ட எண்ணவோட்டங்களை கொண்டது என காட்டவே. ஜாஃபர் சற்றே மேலும் பார்த்திருந்தால், ஜிகாதிகளால் கொல்லப்பட்ட காஷ்மீர் இஸ்லாமியர்களுக்கு இரங்கல் தெரிவித்து எழுதப்பட்ட கட்டுரையையும் கூட கண்டிருக்கலாம். ஆனால் ஜாஃபர் போன்று மேலோட்டமாக மத நல்லிணக்கவாதிகளாக தெரியும் இஸ்லாமியவாதிகள் கூட அடிப்படையில் அவுரங்கசீப் ஆதரவாளர்களாக, அவுரங்கசீப்பின் ஆட்சியை மதநல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாக காஃபீர் ஹிந்துக்களின் முன்வைக்கும் அளவுக்கு பயங்கரவாத எண்ணவோட்டம் உள்ளவர்களாக இருப்பது எனக்கு ஒரு பாடம் என்றே சொல்லவேண்டும்.

ஹமீது ஜாஃபர் சில முக்கிய இடங்களில் அவுரங்கசீப்பின் காலத்திய இஸ்லாமிய வாதிகளிடமிருந்து வேறுபடுவதையும் இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது.

ஹிந்துக்களை அவமானப்படுத்தி மதமாற்றுவதற்காக விதிக்கப்பட்ட வரியான ஜசியாவின் உண்மை தன்மையை அவுரங்கசீப்பும் அவன் காலத்திய இஸ்லாமியவாதிகளும், அவனுக்கு முந்தைய இஸ்லாமிய ஆட்சியாளர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஜஸியா கொடுக்க மறுத்த ஹிந்துக்களின் தலைகளை யானைகளால் சிதைக்கப்பட்டதை ஆனந்தத்துடன் சிலாகிக்கிறார்கள். ஆனால் ஹமீது ஜஃபார் அது வெறும் பாதுகாப்பு வரி என கூறி நியாயப்படுத்துகிறார்.

அவுரங்கசீப் காலத்திய இஸ்லாமியவாதிகள் காசி கோவிலை இடித்ததற்கான காரணத்தினை தெள்ளத்தெளிவாகவே கூறிவிடுகிறார்கள். அவ்வாறே அவன் இடித்த பிற கோவில்களை குறித்தும் அவை இஸ்லாமிய மதக்காரணங்களினால் (அல்லாவின் பெருமையை காட்ட, இஸ்லாத்தின் பெருமையை காட்ட, காஃபீர்களின் பொய்மையை ஒழிக்க இத்யாதி) என்பதை தெளிவாகக் கூறிவிடுகின்றனர். ஆனால் ஹமீது ஜாஃபரோ அவர்களே கூறாத அருவெறுப்பான பொய்யான ஒரு நிகழ்வின் மூலம் இந்த காட்டுமிராண்டித்தனத்தை -அதாவது இஸ்லாமிய மதநெறியாளர் தன்மையை- நியாயப்படுத்துகிறார்.

சத்நாமிகள் ஜாதீய வேறுபாடுகளற்றதோர் பக்தி இயக்க சமுதாயத்தினர். அவர்களின் பண்பட்ட வாழ்க்கை அவுரங்கசீப் காலத்திய இஸ்லாமியவாதிகளால் பதிவு செய்யப்பட்டிருக்க அவர்களை காட்டுமிராண்டிகள் என பட்டவர்த்தனமாக அறிவித்து அவுரங்கசீப்பை ஒருபடி தாண்டி சென்று தாம் இஸ்லாமிய மதநெறியாளர் என நிரூபிக்கிறார் ஹமீது ஜாஃபர். இவ்வாறு ஒவ்வொரு அம்சத்திலும் தாம் அவுரங்கசீப்பைக் காட்டிலும் மேம்பட்ட இஸ்லாமிய ‘மதநெறியாளர் ‘ என்பதனை நிரூபித்துள்ள ஹமீது ஜாஃபரை, காஃபிரான நான் ஒரு சமய சமரசவாதி என கருதியது மகா முட்டாள்தனமானது அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி வக்கணையாக சமய நல்லிணக்கம் பேசும் ஒவ்வொரு இஸ்லாமியவாதியுள்ளும் அவுரங்கசீப்பினும் மேம்பட்ட ‘மதநெறியாளர் ‘ இருக்கிறாரா என்பதை பார்ப்பது எவ்வளவு அவசியம் என்பதை எனக்கும் திண்ணையின் மற்ற காஃபீர்களுக்கும் காட்டிய அவருக்கு என்னுடைய நன்றியும் கூட.

காசில் அலி கான் எனப்படும் முந்தகாபு-இல்-லுபப் முகமது ஷாஹி (எனும்) தாரிக்-இ-காபி கான், மொழி.பெயர்ப்பு. எஸ். மொய்னுல் ஹக், பதிப்பகம்: கராச்சி: Pakistan Historical Society,1975. இந்நூலை தந்து உதவிய பெயர் கூற விரும்பாத இஸ்லாமிய சகோதரருக்கு நன்றி.

—-

aravindan.neelakandan@gmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்