அவசரகதியில்;

This entry is part [part not set] of 33 in the series 20100822_Issue

தீப்தி


அதிகாலை எழுந்து
அவசரகதியில்….
பள்ளிக்கு
என்னோடு
அம்மா அனுப்பும்
சோற்று டப்பாவோடு
ஒன்றிரண்டு
முருக்கோ
தட்டையோ
சீடாயோ
வைத்தனுப்புவதுண்டு!
தவிர்க்க முடிவதேயில்லை….
பள்ளிக்கூட
குப்பை வாயிலில்
மிட்டாய்க் கடைப்
பாட்டியின்
ஈ மொய்த்த
பந்ட்டத்தின் மீது
செல்லும் ஆசையை!
தம்பிக்குத் தெரியாது
கையில்
அம்மா திணித்து அனுப்பும்
காலனாவை
எடுப்பதும்
வைப்பதுமாகவே
கடந்துவிடும்
இடைவேளை நேரங்கள்!
காலனாவிற்கு
கணக்கு காட்ட வேண்டுமே
எனும் பயத்தோடு!

Series Navigation

தீப்தி

தீப்தி