அறிவியலும் அரையவியலும் – 3

This entry is part [part not set] of 38 in the series 20091015_Issue

வஹ்ஹாபி


கடந்த 9 அக்டோபர் 2009 திண்ணை இதழில் அப்துல் அஸீஸ் எனும் பெயரில் எழுதுபவர், “அவை ஒவ்வொன்றும் தனக்கு வரையறை செய்யப் பட்ட வழியில் நீந்திச் சொன்று கொண்டிருக்கின்றன [021:033] என்று இவர் குறிப்பிடும் இடத்தில் தெளிவாக தரையும் அப்படியே சூரியனை சுற்றி வருகிறது என்று எழுதியிருக்கிறதா என்று படித்து சொல்ல வேண்டுகிறேன்” என்று திண்ணை ஆசிரியரை (அன்புள்ள ஆசிரியருக்கு) வேண்டியிருந்தார் [சுட்டி-1].
முதல் மடலில், “உலகம்” என்றும் “பூமி” என்றும் எழுதியவர் இப்போது “தரை”க்கு இறங்கி விட்டார். தரை என்பது நீர் உட்பட எதுவுமில்லா நிலத்தைக் குறிக்கும் சொல்லாகும். பூமியின் மூன்றில் இரண்டு பங்கைச் சூழ்ந்திருக்கும் கடல், நமது “தரை”க்குத் தொடர்பற்றது போல் கட்டுரையாளர் குறிப்பிட்டிருப்பது வியப்பளிக்கிறது!
வானில்தான் சூரியனும் சந்திரனும் இருக்கின்றன என்பது, நிலவைக் காட்டி உணவூட்டும் தமிழ்த் தாயின் இடுப்பில் இருக்கின்ற குழந்தைக்கும் தெரிந்ததுதான். என்றாலும் அதைக் குர்ஆனின் சொற்களால் நிரூபிக்க வேண்டிய கட்டாயச் சூழல் எனக்கு. ஏனெனில், போகிற போக்கைப் பார்த்தால், “வானில்தான் சூரியனும் சந்திரனும் உள்ளது என்று குர் ஆனில் சொல்லப் பட்டிருக்கிறதா?” எனக் கட்டுரையாளர் அறிவுப்பூர்வமான கேள்வியைக் கேட்டு விடும் வாய்ப்பிருப்பதால்,
“ஏழு வானங்களையும் அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காகப் படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்க்கக் கூடாதா? அவற்றில் சந்திரனை வெளிச்சமாகவும் சூரியனை ஒளிவிளக்காகவும் அமைத்தவன் அவனே!” [071:015,016] Allah has created the seven heavens in tiers and has made the moon a light therein, and made the sun a lamp meaning, He made a distinction between them (the sun and moon) in reference to their lighting. He made each one of them in a set manner with a distinct quality so that the night and day may be known. They (the night and day) are known by the rising and setting of the sun. He also determined fixed stations and positions for the moon, and He made its light vary so that sometimes it increases until it reaches a maximum, then it begins to decrease until it is completely veiled. This shows the passing of months and years [சுட்டி-2].
என்று குர் ஆன் தெளிவாகக் கூறுவதை உறுதி செய்வது எனது கடமையானது.
அடுத்து,
“வானில் இருக்கும் சூரியன்-சந்திரனோடு வானுக்குச் சம்பந்தம் இல்லாத பூமியைக் ‘கொண்டுபோய்’ சேர்த்துச் சொல்வது சரியாகுமா?” என்பது கட்டுரையாளரது முக்கிய ஆட்சேபணையாகும்.
“திண்ணமாக, வானங்கள்-பூமி ஆகிய அவ்விரண்டும் விலகி விடாதவாறு அல்லாஹ்தான் தடுத்து வைத்திருக்கிறான். அவை இரண்டும் விலகுமாயின் அவை இரண்டையும் தடுத்து நிறுத்த அவனையன்றி எவராலும் முடியாது …” [035:041] Verily, Allah grasps the heavens and the earth lest they should move away from their places, and if they were to move away from their places, there is not one that could grasp them after Him [சுட்டி-3].
மேற்காணும் இறைவசனத்தில் அரபு மொழியின் சிறப்பு எண்ணான இருமை تَزُولاَ ஆளப் பட்டுள்ளது ஈண்டு நோக்கத் தக்கது.
ஏனெனில், எனது முதல் எதிர்வினையில் [சுட்டி-4] எடுத்துக் காட்டாகக் குறிக்கப் பட்டதும் கட்டுரையாளரின் மறுப்புக்குரியதுமான, “… அவை ஒவ்வொன்றும் தனக்கு வரையறை செய்யப் பட்ட வழியில் நீந்திச் சொன்று கொண்டிருக்கின்றன” எனும் 021:033 இறைவசனத்தில் சூரியன் – சந்திரன் ஆகிய இரண்டையும் குறிக்க இருமைச்சொல் ஆளப்படவில்லை என்பதும் “ஒவ்வொன்றும்/எல்லாமும்” எனப் பன்மைச் சொல் كُلٌّ பயன் படுத்தப் பட்டுள்ளதும் கட்டுரையாளர் விளங்க வேண்டிய கட்டாயக் கருவாகும்.
அந்த வசனத்தில் ஏன் இருமை ஆளப்படவில்லை? எனும் வினாவுக்கு விடை, அந்த இறைவசனத்தில் இருமைக்கு மேற்பட்டவை இடம் பெறுகின்றன என்பதுதான். அந்த வசனம் முழுமையாக : “அவன் தான் இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். அவை ஒவ்வொன்றும் தனக்கு வரையறை செய்யப் பட்ட வழியில் நீந்திச் சொன்று கொண்டிருக்கின்றன” [021:033] And He it is Who has created the night and the day, and the sun and the moon, each in an orbit floating [சுட்டி-5].
மேற்காணும் இறைவசனத்தில் உள்ள இரவு-பகல் என்பன பூமிக்குச் சொந்தமானவை. இரவு-பகல் மாறி வரும் பூமியும் வானங்களும் பால்வளிப் பயணத்தின் சகபயணிகள் என்பதை இதைவிடத் தெளிவாகச் சொல்லவும் வேண்டுமோ?
கட்டுரையாளரின் கருத்துப்படி சூரியன்-சந்திரன் இரண்டும் பூமியை அம்போ என்று விட்டுவிட்டு நீந்திச் சென்று கொண்டிருக்கின்றன எனக் கொண்டால் … பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், சூரிய ஒளியின்றி இருளில் மூழ்கி எப்போதோ செத்திருப்போம்.
மேற்காணும் விளக்கங்கள் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதல்ல. தலைக்குள் இருப்பதைப் பயன் படுத்தும் எவருக்கும் எளிதாக விளங்கக் கூடியவைதாம் – அதுவும் கட்டுரையாளரின் கூற்றுப்படி, “700 ஆண்டுகளுக்கு முன்னர் சரியாக எழுதி வைத்த இமாம் இபுனு கஸீர்” விளக்குவதால்.
மறுப்புகள் தொடரும், (இன்ஷா அல்லாஹ்).
ஃஃஃ
to.wahhabi@gmail.com
http://wahhabipage.blogspot.com

சுட்டிகள்:
01 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=80910094&format=html
02 – http://www.tafsir.com/default.asp?sid=71&tid=55421
03 – http://www.tafsir.com/default.asp?sid=35&tid=43173
04 – http://wahhabipage.blogspot.com/2009/10/blog-post.html
05 – http://www.tafsir.com/default.asp?sid=21&tid=32927

திண்ணை குறிப்பு:
இந்த விவாதம் இத்துடன் முற்றுப்பெறுகிறது.

Series Navigation

வஹ்ஹாபி

வஹ்ஹாபி