அமீரகத் தமிழ் மன்றம் தனது 11-வது ஆண்டு விழா

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

ஜெஸிலா


அன்பு நண்பர்களுக்கு

அமீரகத் தமிழ் மன்றம் தனது 11-வது ஆண்டு விழாவை வரும் பெப்ரவரி மாதம் 18ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாடவிருக்கிறது. எல்லா வருடங்களையும் போலவே இம்முறையும் ஆண்டு விழா மலரும் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது. மலருக்கான படைப்புகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

படைப்புகள் கதையாகவோ கவிதையாகவோ கட்டுரைகளாகவோ இருப்பது நல்லது. A4 பக்க அளவில் ஆறு பக்கங்களுக்கு மிகாமல் உங்களது படைப்புகள் இருந்தால் நல்லது.

படைப்புகேற்ற படங்களும், உங்களைப் பற்றிய சுயகுறிப்பினையும், சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றினையும் படைப்புடன் கூடவே அனுப்பித் தருமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

படைப்புகள், சுயகுறிப்பு மற்றும் புகைப்படங்களை (கட்டுரைக்குத் தேவையான புகைப்படங்கள் + படைப்பாளியின் புகைப்படம்) atmuae@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

வரும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு உங்களது படைப்புகளை அனுப்புங்கள்.

உங்கள் ஒத்துழைப்புக்கும் புரிந்துணர்வுக்கும் முன்கூட்டிய நன்றி!!

பேரன்புடன்
ஜெஸிலா

குறிப்பு: ஆசிரியர் குழுவின் பரிசிலனைக்குப் பின் உங்களது படைப்பு ஆண்டுவிழா மலரில் பிரசுரிக்கப்படும். உங்கள் பேராதரவிற்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள். ஆசிரியர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

Series Navigation

ஜெஸிலா

ஜெஸிலா