அந்தவொரு மழை நாள்..

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

தேனுமுன்மொழிக்குப் பிறகான நாளொன்றில்
துளி துளியாய் எதிர்பார்ப்புகள்
சொட்டிக் கொண்டு
சூடேற்ற,
இருவண்ண வானவில் சாரலுடன்
மெய் சிலிர்த்திருந்தோம்..
.
அவளுக்கான என் மௌனமும்
எனக்கான அவள் மௌனமும்
சிலாகித்துக் கொண்டிருந்தன
மழையின்
மெல்லியதோர் இசையோடு..
.
சிலாகிப்புகளின் நெருக்கம்
மென்மேலும் இறுகிக் கொண்டே
இரண்டு இணை அதரங்களுக்கான
இடைவெளியாம்
ஓர் புள்ளிக்குள் ஒடுங்கி விடும்…
.
காதல் மின்மினிகளின்
வியூகமென
மின்வளையங்கள் மீட்டும்
அழகானதோர் வண்ண இசை…

– தேனு

Series Navigation

தேனு

தேனு