திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20101227_Issue

அரசியலும் சமூகமும்

கவனமுடன் படிக்க வேண்டிய நூல்…- விடுதலை -இஸ்லாமியப் பெண்ணியம் நூல்

ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாமியத்தை ஆன்மிக அடிப்படையில் அறிந்து கொள்ள திருக்குரான், நபி வழி தொகுப்பான அதீஸ் ஆகியவை உதவுகின்றன. இவை ஆண்சார்ந்த நலன்களின் அடிப்படையிலேயே அர்த்தப்படுத்தப்பட்டுள்ளன. புனித நூல்களில் பெண்ணிய கோட்பாட்டை விளக்க மறைக்கப்பட்ட பகுதிகளை…

ராகுல் காந்திக்கு திறந்த ஒரு கடிதம்

அரிந்தம் பந்தோபாத்யாய், தமிழாக்கம். சேஷாத்ரி ராஜகோபாலன் (Bandyopadhyay Arindam – பந்தோபாத்யாய் அரிந்தம் - ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். (ஆங்கிலத்தில் 11-டிசம்பர்-2010இல் வெளிவந்தது) http://www.blogs.ivarta.com/An-open-letter-Mr-Rahul-Gandhi/blog-395.htm தமிழாக்கம் செய்தவர்: சேஷாத்ரி ராஜகோபாலன். முதல் பகுதியாக…

விளக்கு விருது திலீப் குமாருக்கு வழங்கப் படுகிறது : நடுவர்கள் குறிப்பு

நா கோபால்சாமி படைப்பிலக்கியம் என்ற வகையில் எண்ணிக்கையால் – 30க்கும் குறைவான சிறுகதைகளை எழுதியுள்ள திலீப்குமார், தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளவில்லை என்ற போதிலும், தமிழில் பன்முகத்தன்மை கொண்ட கதைகளை எழுதிய எழுத்தாளர். மூங்கில்…

அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 9 Onward Christian Soldiers முன்னேறும் கிறிஸ்துவ போர

ஜான் ஹார்ட்டுங் Onward Christian Soldiers முன்னேறும் கிறிஸ்துவ போர்வீரர்கள் யூத மதத்துக்கு அடிபணியாத யூத மதத்தின் கிளைமதமாக உருவாகியிருக்கும் கிறிஸ்துவ மதம் தான் தனது தெய்வத்தோடு செய்துகொண்டுள்ள புது ஒப்பந்தம், யூத மதம்…

அறிவிப்புகள்

தமிழ்ப் பேரறிஞர் ஈழத்துப்பூராடனார் கனடாவில் மறைவு

மு.இளங்கோவன் இலங்கை மட்டக்களப்பில் பிறந்து கனடாவில் வாழ்ந்து வந்த செல்வராசகோபால் என்னும் இயற்பெயர்கொண்ட ஈழத்துப்பூராடனார் தம் எண்பத்திரண்டாம் அகவையில் இயற்கை எய்தினார்(21.12.2010).திண்ணையில் இவரைப் பற்றியும், இவர் படைப்புகளைப் பற்றியும் பல அறிமுகக்கட்டுரைகள் முன்பு வெளியாகியுள்ளன.…

இலக்கிய வட்டம், ஹாங்காங் கூட்ட எண்: 30- கருத்தரங்கம்

இலக்கிய வட்டம், ஹாங்காங் இலக்கிய வட்டம், ஹாங்காங் கூட்ட எண்: 30- கருத்தரங்கம் பொருள்: மதிப்புரைகள் நாள்: திங்கட்கிழமை, 27 டிசம்பர் 2010 நேரம்: மாலை 6.00 முதல் 8.00 வரை இடம்: விரிவுரை…

அமீரகத் தமிழ் மன்றம் தனது 11-வது ஆண்டு விழா

ஜெஸிலாஅன்பு நண்பர்களுக்கு அமீரகத் தமிழ் மன்றம் தனது 11-வது ஆண்டு விழாவை வரும் பெப்ரவரி மாதம் 18ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாடவிருக்கிறது. எல்லா வருடங்களையும் போலவே இம்முறையும் ஆண்டு விழா மலரும் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.…

நேர்காணல் மூன்றாம் இதழ் பற்றிய அறிவிப்பு

அய்யனார்அன்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். நேர்காணல் மூன்றாம் இதழ் பற்றிய அறிவிப்பு வெளியிடக் கேட்டுக் கொள்கிறேன். நேர்காணல் மூன்றாம் இதழில் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் திரு.ம. நாசர் நேர்காணல் இடம்பெறுகிறது.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

கணினி மேகம் (cloud computing) பகுதி 1

சித்ரா சிவகுமார், ஹாங்காங் 1 ஆப்பிரிக்காவில் இருக்கும் மகள், தமிழகத்தில் இருக்கும் தன் தந்தையிடம் பேசும் உரையாடல்: “அப்பா.. இன்னிக்கு குழந்தையோட பிறந்த நாள் விழா நல்லா நடந்தது” “நிறைய படங்கள் எடுத்தீங்களா!” “எடுக்காமலா?…

அணு ஆயுதத் தகர்ப்புக்கு முற்பட்ட அமெரிக்க அணுவியல் விஞ்ஞான மேதை ஹான்ஸ் பெத்தே (1906 – 2005)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “ஒருவர் அமைதி நிலைநாட்ட விரும்பினால் அவர் போருக்குத் தயார் செய்ய வேண்டும்.” ரோமானியப் பொன்மொழி “சமாதானத்தை விழைவோர் கையில் ஆயுதப் பலம் இருந்தால்தான், உலகில் அமைதி…

இலக்கிய கட்டுரைகள்

தமிழின் செம்மொழித் தகுதிகள்

முனைவர் மு. பழனியப்பன் முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர்> மா. மன்னர் கல்லூரி>புதுக்கோட்டை செம்மொழி என்ற நிலையில் ஒரு மொழி ஏற்கப்பட வேண்டுமானால் அதற்கென்று சில தகுதிப்பாடுகள் தேவைப்படுகின்றன. செம்மொழி என்று ஒரு மொழி…

இவர்களது எழுத்துமுறை – 20 பாலகுமாரன்

வே.சபாநாயகம் 1. இலக்கியதாகம் கொண்டவனாக நான் என் வாழ்க்கையை ஆம்பிக்க வில்லை. வறுமையான சூழ்நிலையில் வளர்ந்தேன். ஆணாதிக்கத்தின் உச்சகட்டம்தான் என் அப்பா. இங்கே என் அம்மா மட்டுமல்ல, என்னைச் சுற்றி உள்ள என் சித்தி,…

கதைகள்

பரிமளவல்லி 26. வெற்றிலைக்கொடி (இறுதி அத்தியாயம்)

26. வெற்றிலைக்கொடி சனிக்கிழமைகாலை. ஏழுமணிக்கு இன்னும்சில நிமிடங்கள். விமானநிலையத்தில் அதிக கும்பலில்லை. சரவணப்ரியா சாமியையும், பரிமளாவையும் நுழைவிடத்திற்கு அருகே இறக்கினாள். சாமி பெட்டிகளை இறக்கி அவற்றை இழுத்துக்கொண்டு பரிமளாவுடன் விமானநிலையத்தில் நுழைந்தான். அவள் ‘செக்-இன்’…

முள்பாதை 61 (இறுதி அத்யாயம்)

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com அத்தை மறுநாள் புதுமணத் தம்பதிகளை மணையில் உட்கார வைத்து சத்யநாராயண பூஜை செய்ய வைத்தாள். ஊரில் எல்லோரையும் சாப்பிட அழைத்தார்கள். முதல்நாள்…

சாதாரண ஒரு சராசரி ஈயின் கதை

நட் ஹாம்சன் (நோர்வே) தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் நான் எழுதிக்கொண்டிருந்தேன். திறந்திருந்தது ஜன்னல். ஜன்னல்வழியே அந்த ஈ உள்ளே வந்தது. ஆக எங்கள் சிநேகம் ஆரம்பமானது. ஈ என் தலையைச்சுற்றி ஒரு ஆட்டம் போட்டது.…

வன்முறை 11

சூர்யா லட்சுமிநாராயணன்இதய நோயாளிகள் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள் தனது மனைவி இன்னொருவனுடன் படுக்கையில் இருப்பதை சென்னை தியாகராய நகரில் ஒரு கிரவுண்ட் விலை என்ன என கேட்பதை நகரப் பேருந்தின் பின்பக்க சீட்டில்…

நீங்க போட்ட எட்டு

T.V.ராதாகிருஷ்ணன்தனக்கு இதுபோன்றதொரு நிலைமை வரும் என தர்மலிங்கம்..அந்த நிமிடம் வரை நினைக்கவில்லை. அந்த ஊரில் இருந்த ஒரு பள்ளியில் எட்டாவது வகுப்பு ஆசிரியர் அவர்.கிட்டத்தட்ட இருபத்தைந்து வருட அனுபவம். அவரிடம் படித்த மாணவர்கள் பலர்..இன்று…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -10

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "தனக்கும் கடவுளுக்கும் இடையே கிறித்துவப் பாதிரியார் அல்லது சகபாடியின் தடையீட்டுக்கு எதிராகச் செய்யும் ஒரு மனித…

வெவ்வேறு சிறகுகள்…

ஸ்ரீஜா வெங்கடேஷ் காலை அனைவரையும் அலுவலகம் , கல்லூரிகளுக்கு அனுப்பிவிட்டு டிவியைப்போட்டாள் நித்யா. வழக்கமான மாமியார் , மருமகள் தகராறு , அந்தரங்கமான விஷயங்களை காமிராவின் முன் அரங்கேற்றுதல் என்று திருப்பித்திருப்பி அதே அசிங்கங்கள்தான்.வெறுப்போடு…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 22

ரேவதி மணியன்சென்ற வாரம் இரண்டாம் வேற்றுமை (द्वितीया विभक्तिः ) எடுத்துக்காட்டில் बालः फलम् खादति (சிறுவன் பழம் சாப்பிடுகிறான்)என்ற வாக்கியத்தில் எதை/என்ன ? (किम्) என்ற வினாவை எழுப்பும்போது बालः किम खादति?…

கவிதைகள்

விபரீத கரணி

ஷம்மி முத்துவேல் அவர்களின் தலைகளில் கால்கள் முளைத்திருந்தன .... இறகுகளில் சிலவற்றின் மென்மையோடு காற்றின் திசையில் பறப்பனவாய் மேலும் கீழும் அசைந்தபடி வானுக்கும் பூமிக்குமான பயணம் கழிகளின் மேல் ஒரு அனாயச நர்த்தனம் மரணத்தின்…

சிறிய சிறகு

சத்யானந்தன் இந்தச் சிறிய வெள்ளை இறகு என் தந்தையின் அறையில் இருந்தது. வீழ்ந்ததா வீழ்த்தப் பட்டதா சிறு பறவையின் சிறகா அல்லது பெரிய பறவையின் உள்ளிறகா பறவைகள் கூடு கட்டும் பருவம் எது இடம்…

மகரந்தங்களில் தேனுண்ணும் வ‌ண்டுக‌ள்

ராம்ப்ர‌சாத் வாசங்களின் அஸ்திவாரங்களில் பூக்கப் பழகிவிட்டு அவைகளுக்கு அஸ்திவாரங்களின்றிப் பூக்கத்தெரிவதே இல்லை... அஸ்திவாரங்களின் உதவியின்றி வேரூன்றுவதை பற்றிய வண்டுகளின் கேள்விகளை பதில்களின்றி புறக்கணிக்கின்றன... வாசங்களுக்காகவே மகரந்தங்களை வளர்க்க முனைகின்றன பூக்கள்... மகரந்தங்களில் தேனுண்ணும் வாய்ப்புக‌ளை…

இந்தியன்

T.V.ராதாகிருஷ்ணன்ஹவாலா மோசடி ஐநூறு கால் நடை தீவனம் தொள்ளாயிரம் ஐபிஎல் ஆயிரத்துஇருநூறு சேத்தன் பரேக் இரண்டாயிரம் ஹர்ஷத் மேத்தா நான்காயிரம் சத்யம் பதினான்காயிரம் முத்திரத் தாள் இருபதாயிரம் காமென்வெல்த் எழுபதாயிரம் ஸ்பெக்ட்ரம் ஒரு லட்சத்து…

தேநீர் விரல்கள்

கலாசுரன் சலனமற்ற பார்வையின் முனையில் தொங்கியபடி உருமாறும் நிகழ்வுகள் ... அவை தன் ஒவ்வொரு உருவங்களிலும் புது விதமான மொழிகளைக் கையாளுகின்றது பிரம்மிப்பான வேடிக்கையோடு பார்த்துக்கொண்டிருக்க மேசையில் சிந்திய தேநீரின் விரல் நீண்டு என்…

வளையல் துண்டுகளின் காட்சி

அன்பாதவன் அருகருகே த் தொடர்கிறது நம் பயணம் சுவாரஸ்ய மவுனத்தோடும் சுகமான நினைவுகளுடனும் தண்டவாளங்களைப் போல தகுந்த இடைவெளியோடு. @ உடைந்த வளையல்துண்டுகளாய் வீழும் உரையாடல்களைக் குலுக்க மனசின் முப்பட்டைக் கண்ணாடியில் திரள்கின்றனப் புதுப்புது…

எதிர்காலம்

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ நீங்கள் அறிந்திருப்பதைப் போன்றே நானும் அதை நன்கறிந்திருக்கிறேன். நாளை ஒருவன் வரக்கூடுமென்றும் இரவும் பகலுமற்ற இடை வெளியொன்றில் இணக்கங்களும் பிணக்கங்களுமற்ற மையச் சாத்தியக் கூறுகளில் முற்றுமாய் கசடுகளற்ற சில பந்த பிணைப்புகளை…

உயிர் நீர்

முனைவர் சி.சேதுராமன்வானம் தன் கைகள் நீட்டி அள்ளியநீர் மேல் போய் கரியதாம் நாவற் கனிபோல் கருப்பாக நிறமும் மாறி காற்றினால் அலைப்பு முண்டு கைகளால் குடித்த நீரை அன்பால் கண்களால் கசியவிட்டு காசினி குளிரச்…

கண் திறக்கும் தருணம்..

இளங்கோ* மௌனக்கோட்டில் புள்ளிகள் கொத்துகிறான் ஒருவன் சொற்களின் கூர் பட்டுத் தெறிக்கின்றன பிசிறுகள் கண் திறக்கும் தருணத்தில் உடைந்து விழுகிறது மௌனம் ***** --இளங்கோ

ஊறுக்காய் குறிப்பு!

ரசிகன் ஒரு குறிப்பிட்ட சில தோழிகளை மட்டும் எண்ணம் பட செய்கிறது ஒரு 555 சிகரெட்டும் ஒரு கிளாஸ் ஜானி வாக்கரும்! பேசப்படாத நாட்களில் மௌனங்களுக்கு ஊற்றி விடவோ பற்ற வைக்கவோ தவறியதில்லை நினைவுகள்!…

நகைச்சுவை

எங்கள் தெரு புளியமரம்!

சபீர் நான் பிறந்து வளர்ந்த கடற்கரை கிராமத்தில் பள்ளிவாசலுக்கு அருகில் ஒரு புளிய மரமும் அதனை ஒட்டியும் சுற்றியும் அமைந்த சிமென்ட் மேடையும் எங்கள் பாட்டன் பூட்டன் சொத்தென நிழல் பரப்பி நிற்கும். படிப்பு…