திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040219_Issue

அரசியலும் சமூகமும்

இந்தியாவில் பெண்கள் மசூதியால் ஏற்பட்ட புயல்

மொழியாக்கம் - யாழினி தமிழ்நாட்டில் தூங்கி வழியும் புதுகோட்டையில் சிவப்பு செங்கல் கட்டட ஆபீசில் தாவூத் ஷரீபா என்கிற முஸ்லிம் பெண்மணி வாழ்க்கையில் அவதிப்படும் முஸ்லிம் பெண்களை சந்திக்கிறார். அமைதியாக தாழ்ந்த குரலில் தாங்கள்…

பயங்கரவாதியை உருவாக்குவது எது ? – பகுதி 1

ஜேம்ஸ் வில்ஸன்(தமிழில்: ஆசாரகீனன்) [மொழி-பெயர்ப்பாளரின் குறிப்புகள் [..] என்ற வகை அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன. தவிர, எண்ணிக்கையிட்ட அடிக் குறிப்புகளும் விவர விளக்கம் தருகின்றன. கட்டுரை ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பும் கீழே தரப்பட்டுள்ளது]…

வாரபலன் – பிப்ரவரி 19,2004 – சீனியர் மேனேஜர் அவஸ்தை – குறுநாவல் குறுகுறுப்புகள் – வழி தவறிய காவிய நயம்- குஞ்சுண்ணி

மத்தள ராயன் வேணாம்யா என்றாலும் கார்க் கதவைத் திறந்து விட்டுப் பொட்டிக்குக் கை நீட்டுகிற டிரைவர், கதவைத் தட்டி விட்டு அறைக்குள் வந்து, குளிர்பதனம் சரியாக இருக்கா என்று மேற்கூரையைப் பார்க்கத் தலை திருப்பி…

ஈராக்: அமெரிக்க ஆளுகையின்கீழ் பெண்ணுரிமை

அசுரன் அரபு நாடுகளிலேயே சட்டரீதியில் மிகச் சுதந்திரமானவர்களாக வாழ்ந்து வந்தவர்கள் ஈராக்கிய பெண்கள்தான்ி. ஆனால், சதாம் உசேனின் கோரப்பிடியிலிருந்து ஈராக்கிய மக்களை விடுதலைசெய்ய வந்ததாய்ச் சொல்லி, இன்று ஈராக்கைக் கைப்பற்றியுள்ள அமெரிக்கர்களின் ஆளுகையிலோ ஈராக்கிய…

குழந்தைகளுக்கான கல்வி

பேராசிரியர் தொ.பரமசிவன்(தமிழ்த்துறை தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) மொழிக்கல்வியைப் பொருத்தமட்டிலே பள்ளிக்கு வரும்போதே குழந்தை பேசத்தெரிந்த குழந்தையாகத்தான் வருகின்றது. அதனுடைய மூளைஸ்ரீகுள்ளே சொல் தொகுதிகள் இருக்கின்றன. பள்ளிக்கு வருகிறபோது பிள்ளைகள் அறிந்திருக்கிற சொற்களின் அளவு,…

ஆஸ்திரேலியப் பழங்குடியினர் மீது ஆஸ்திரேலிய அரசின் தொடரும் அடக்குமுறை

ஆஸ்திரேலியாவின் பழங்குடி சமூகத்தினருக்கும் வெள்ளையருக்கும் இடையேயான தொடரும் வெறுப்புணர்வு, சென்றவாரம் கலவரமாக வெடித்து ஸிட்னி போலீஸாருடன் பழங்குடியினர் போராட்டமும் மோதலுமாக ஆனது. ஒரே பழங்குடி ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஆடன் ரிட்ஜ்வே பழங்குடியினருக்கும்…

அறிவிப்புகள்

கடிதங்கள் – பிப்ரவரி 19,2004

பித்தன் - நரேந்திரன் - அரவிந்தன் - கா.மெளலாசா - நண்பர் இஸ்மாயிலுக்கு, நீங்கள் பெரியாரைப் படித்திருப்பது குறித்து மகிழ்ச்சியே. அது இந்து மதத்தின் ஒரு பக்கம். களையப்படவேண்டிய பக்கம். ஆனால் ஒரு பக்கத்தை…

கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி

கடைசித் தேதி 30, ஏப்ரல் 2004 கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் உலகத்து தமிழ் படைப்பாளிகள் அனைவரும் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள். போட்டி விபரங்கள்: 1) போட்டிக்கு…

கடிதம் – பிப் 19,2004

மகுடேஸ்வரன் திண்ணை சமீபத்திய இதழில் இரா. முருகன் சென்னையில் நடந்த தமிழ் இலக்கியம் 2004ஐப் பற்றிய spot visit கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அவ்விழா குறித்து அவருடைய பதிவுகள் சிலவற்றிற்கு நான் பகிர்ந்துகொள்ள விஷயமிருப்பதால்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

உறக்கத்தில் பளிச்சிடும் உள்ளொளி

மு. சுந்தரமூர்த்தி, சொ. சங்கரபாண்டி முதல் நாள் மாலை பிடிகொடுக்காத பிரச்சினை ஒன்றுக்கு இரவு உறங்கி விழிக்கும்போது திடாரென்று பளிச்சென பதில் கிடைக்கும் அனுபவங்கள் சில தருணங்களில் நம் எல்லோருக்கும் நிகழ்ந்திருக்கும். அதே போல…

இலக்கிய கட்டுரைகள்

ஆறுகள் – கழிவு ஓடைகள் : ஜெயமோகனின் புது நாவல் ஏழாம் உலகம் .

சு. வேணுகோபால் தமிழில் நாவல் முயற்சிகள் குறுகிய எல்லைகளுக்குள் தான் நிகழ்ந்திருந்தன. அவை மதிக்கத்தக்கவை என்றாலும் நாவல் வடிவத்தின் பெரும் சவாலை எதிர்கொண்டவை அல்ல. ஜெயமோகனின் விஷ்ணுபுரம் அந்த வகையில் தமிழ் நாவல் உலகத்தைப்…

சுப்ரபாரதிமணியனின் சமயலறைக் கலயங்கள்

தமிழ் மணவாளன் வாழ்க்கை மிகப் பிரம்மாண்டமான. கோடி கோடியாய் நிகழ்ந்து முடிந்த,நிகழும் மற்றும் நிகழவிருக்கிற வாழ்க்கையின் கூட்டாகவே உலக இயக்கம் சாத்தியப்பட்டிருக்கிறது. இதில் தான் எத்தன விதமான பரிமாணங்கள். ஒருவரின் வாழ்க்கை ஒருவிதமாய், பிறிதொருவருடய…

கனடாவில் கால்சட்டை வாங்குவது

அ.முத்துலிங்கம் சமீபத்தில் ஒரு தகவலைப் படித்தேன். காலம் கடந்துபோய் இந்த தகவல் எனக்கு கிடைத்திருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ப. ஜீவானந்தம் பற்றியது. இந்த பெரியவரிடம் காக்கி கலரில் நாலு கட்டை கால்சட்டைகள் இருக்குமாம்.…

கதை ஏன் படிக்கிறோம் ?

சுரேஷ் சமீபத்தில் என் நண்பருடன் ஒரு சிறுகதைகள், நாவல்கள் படிக்கும் வி ?யமாக ஒரு சிறிய விவாதம் ஏற்பட்டது. நண்பரோ செய்தித்தாள்களையும் புத்தகங்களில் கூட non-fiction புத்தகங்களைத்தான் படிப்பார். எப்பவாவது ஆனந்த விகடன், குமுதம்…

தக்கையின்மீது நான்கு கண்கள் – குறும்படம்

ஜெயமோகன் சா. கந்தசாமி ஏறத்தாழ முப்பது வருடம் முன்பு எழுதிய சிறுகதை தக்கையின்மீது நான்கு கண்கள். அதேபேரில் கிரியா பதிப்பகம் ஒரு தொகுப்பையும் வெளியிட்டதனால் இக்கதை மிகவும் பிரபலமடைந்தது. சா கந்தசாமி 'கசடதபற '…

விருமாண்டி – கடைசிப் பார்வை

மாது முதல் நாளே முண்டியடித்துக் கொண்டு படம் பார்க்கிற ஆசை எனக்கு இல்லை. நல்லபடம் என்றால் அதுவே என்னைத் தேடி வந்து விடும் என்ற விதியின் மேல் நம்பிக்கைஉடையவன் நான். விருமாண்டியும் என்னைத் தேடி…

நிழல்களின் உரையாடல்(Mothers and Shadows)-மார்த்தா த்ராபா[தமிழில் அமரந்த்தா]

மாலதி மேற்கண்ட மொழிபெயர்ப்புநூல் வெளிவந்து சில வருடங்களாகி விட்டன.இப்போது இந்த நூல் குறித்து என் குறிப்புகள் எந்த வகையில் முக்கியப்படும் என்பதை முன்கூட்டி யூகித்து விடமுடியும் எல்லாருக்கும். இந்தப் பதிவின் வீச்சையும் செம்மையையும் பின்அட்டை,பின்இணைப்பு,மொழிபெயர்ப்பாளர்…

கதைகள்

அமெரிக்கா ரிட்டர்ன்

கவிநயா இதோ அப்பா வந்து விட்டார். Airport-ல் அவரைப் பார்த்தவுடன் குதூகலம் பொங்கியது, ரகுவிற்கு. 'வாங்கப்பா, flight எல்லாம் செளரியமா இருந்ததா ? ', என்று கேட்டபடி, அவரிடமிருந்து luggage-ஐ வாங்கிக் கொண்டான். 'ஒண்ணும்…

தாண்டவராயன்

நாகரத்தினம் கிருஷ்ணா இருட்டைக் கிழித்துக்கொண்டு உச்சத்தில் அந்தக் குரல். சிலேட்டில் அழுந்தப்பதித்து ஆணியை இழுப்பதையொத்த அந்தச் சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்தான் இவன். எதிரே அழுத்தமான சாம்பல்நிறச் சுவரின் அடக்கமான ரேடிய ஒளிவட்டத்துக்குள் தெரிவித்த நேரம்…

நாகம்

பத்ரிநாத் ஸ்ரீதர ராஜன் இன்று பதவி ஓய்வு பெறுகிறார். அதையொட்டி நடைபெறும் பிரிவு உபச்சார விழாவிற்கு அனைவரையும் அழைத்தது, அறிவிப்புப் பலகை. ' 'மூன்று மணிக்கு பொது அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது..அனைத்து ஊழியர்களும் அதைப் பயன்…

மூடல்

ஆபிதீன் 1 மாந்தீரிக யதார்த்தமெல்லாம் இல்லை; நிஜமாகவே இருண்டு திரண்டிருந்த பெரும் கருமேகம் ஒன்று கடைசியாக விமானத்தினுள் நுழைந்தது. மூடலாமா கூடாதாவென்ற விவாதங்களில் கலந்து கொள்ள வந்திருக்குமோ ? தெரியவில்லை. 'டக் 'கென்று விமானத்தினுள்ளிருந்த…

பொருட்காட்சிக்குப் போகலாமா..

செங்காளி புதிதாக எங்கள் ஊரில் நடக்கும் பொருட்காட்சிக்குப் போகலாம் என்று புறப்பட்டோம். அப்பாவும் அம்மாவும் தங்களுக்கு வேறு வேலைகள் இருப்பதாகச் சொல்லிவிடவே, நான் பரமுவையும் பாருவையும் கூட்டிக்கொண்டு போகட்டுமா என்று அம்மாவைக் கேட்க, அவர்…

அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தாறு

இரா முருகன் குத்துவிளக்கும் இன்னொரு கையில் நார்ப்பெட்டியில் ஜோசியர் கொடுத்த யந்திரமுமாகச் சுப்பம்மாள் அரண்மனைத் தோட்டத்துக்கு வந்தபோது நட்சத்திரங்கள் இல்லாமல் வானம் இருண்டிருந்தது. சீக்கிரம் மழை வந்துவிடும் என்று சந்தோஷச் சேதி சொல்லிக்கொண்டு ஒரு…

விடியும்! – நாவல் – (36)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் பழைய விணாத்தாள்களைப் புரட்டித் துருவி ஆராய்ந்து பரீட்சைக்குக் கட்டாயம் வருமென ஊகித்து நித்திரை முழித்துப் பாடமாக்கி தயாராகிக் கொண்டு போனவனுக்கு வந்ததோ நினைத்தே பார்த்திராத ஒன்று. தமிழ் சமூகத்தில், பெண்பிள்ளைகளுக்கு…

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -12)

எஸ். ஷங்கரநாராயணன் ஆறாம் பகுதி - தொடரச்சி தன் புகழ்ச்சியும் தன் வியத்தல் சார்ந்த மிதத்தல் பார்ட்டிகள் தவிர, இதுசார்ந்த உள்க்கலவரம் சுமந்து திரிகிற எழுத்தாளர்கள் உளர். அவர்கள் வேறு ஜாதி. சில வெளிநாட்டுக்காரர்களைக்…

சில நேரங்களில்…சில குழந்தைகள்

பத்ரிநாத் ' 'சித்தப்பா.. அவர் வர்றாப்பல இருக்கு.. ' ', கண்களில் மின்னும் நாணத்துடன் ரமா கூறியதையடுத்து விருட்டென்று வெளுயே சென்று பார்த்தார் கிருஷ்ணன்.. எங்கே.. அட.. அதோ .. ஆமாம் ..தூரத்தில் எங்கோ…

கலைகள்

உஸ்தாத் படே குலாம் அலி கான் – ஹரி ஓம் தத்சத்

திருமதி சுசீலா மிஷ்ரா (படே குலாம் அலிகான் அவர்கள் மறைந்ததும் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் எழுதிய கட்டுரை) இசையாகவே வாழ்ந்து, இசையாலேயே இயங்கி இசையோடு தன்னுடைய இருப்பையும் உணர்ந்துகொண்ட மனிதர் நாதப்பிரம்மத்திலும் இணைந்துவிட்டார். கயல் -ஆக…

ஃப்ரை கோஸ்ட்

திருமதி அஸ்ரா ஸையது தேவையான பொருட்க ஆட்டுக்கறி அரை கிலோ இஞ்சி விழுது 1 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள் 1 1/2 தேக்கரண்டி பூண்டு விழுது 1 தேக்கரண்டி உப்பு 1 தேக்கரண்டி…

கவிதைகள்

பத்திரமாய்

பவளமணி பிரகாசம் தென்றலாய் நடந்து வந்தாய் மனதில் வீசியது புயல் குளிர்ந்த பார்வை வீசினாய் உள்ளே வெடித்தது எரிமலை அன்பாய் அழகாய் பேசினாய் அண்டம் மீண்டும் சிதறியது அவசரமாய் ஏனடி ஓடினாய் ? ஆவியைத்…

யுத்த நெடி , இந்தியக் கூலியின் அரேபியக் காலம் , இருத்தலிஸம்

தாஜ் *** யுத்த நெடி ---- இந்தியப் பசுக்கள் பாலைவனத்தில் பொதி சுமப்பதை வளைகுடாவில் பார்க்கலாம் புஷ்டிப் புண்ணாக்கின் கனவில் ஒட்டகங்களுக்குச் சமமாய் ஒன்றி நடக்கிறது சொந்த மண்ணின் பசுமையை தொலைத்தது போக திரிந்த…

குட்டி இளவரசியின் பாடல் பற்றி

-- பா.சத்தியமோகன் அவள் முணுமுணுக்கும் பாடல் எது செவி கொடுத்தாலும் உணர இயலாது வரிகள் அவை அன்பின் வெதுவெதுப்பால் ஆனவை. நிச்சயம் கூறலாம் அச்சொற்கள் ஆனந்தம் எதிரொளிக்கும் கண்ணாடி அவள் அடுக்கும் பொம்மைகள் கரடியின்…

அன்புடன் இதயம் – 8 – ஒரு வாரிசு உருவாகிறது

புகாரி நாடெங்கும் கொடிக் கம்பம் நட்டுவச்சாச்சு நட்டநடு வீதியெங்கும் செலையும் வச்சாச்சு வீடெங்கும் புகுந்தலசி ஓட்டுக் கேட்டாச்சு வெவரமாகப் பேசினவன் இடுப்பொடிச்சாச்சு காடுமலை மேடுயெல்லாம் மேடை இட்டாச்சு கள்ள ஓட்டுப் போட்டு இப்போ ஆட்சி…

அவன்

பாஷா உங்கள் வட்டத்தில் அவன் இல்லை உங்கள் காதுகளில் ஒலிக்கும் குரலிலும் அவன் இல்லை! சித்தாந்தங்களால் அவனை செதுக்கிகொண்டிருந்தும் சிறுபிள்ளையாய் தேவதை கால்பிடித்து தேம்பியழுவானவன்! சந்தர்ப்பவாத நட்பை சகித்துகொண்டு சாயந்தர தனிமையில் சில கவிதைகள்…

கிராமத்தில் உயிர்!

கவியோகி வேதம் நகரத்தை நோக்கி நாம்வந்து விட்டதால் கிராமம் அழிந்ததுஎன கிறுக்கன் ஒருவன்சொன்னான்! . மடையனிவன்!தன்னுடைய வயிற்றுக்காய் நகர்வந்த முடைநாற்றம் வீசுகிற,மூக்குபொத்தி நீர்உறிஞ்சி, . அலைச்சலில் முங்கிவிட்ட, அழகுணர்ச்சி இழந்துவிட்ட புலையனிதைச் சொல்கையில், புரண்டதடா…

பிரிவிலே ஓற்றுமையா ?!

செங்காளி எழுகின்ற ஞாயிறுதான் விழுகின்ற மாலைவரை கழனியில் உழைத்ததெல்லாம் பழுதாய்ப் போனதம்மா. நட்டுவிட்ட பயிரெல்லாம் பட்டுப்போய்ப் படுத்திடவே கொட்டிய பணமெல்லாம் வெட்டியாய்ப் போனதம்மா. இக்கதையை எங்குசொல்ல மக்களை ஆளுவோரும் பக்கத்து நாட்டரசும் தக்கபடி பேசவில்லை…

மதியழகன் சுப்பையா கவிதைகள்

மதியழகன் சுப்பையா மும்பை 1 ஆதிக்கச் சமூகத்தில் ---- வார்த்தைகளால் காயப் படுகிறாய் செயல்களால் சிதைந்து போகிறாய் மன்னிப்பும் சமாதானங்களும் கூட வர்க்க யுக்தி என்கிறாய் என்னைக் கொல்ல இயலாது உன்னை வருத்துகிறாய் கைகளை…

காலத்தின் கணமொன்றில்

பசுபதி சிற்சில கணங்கள் சேர்ந்ததே வாழ்வு. கடிதில் மறையும் நொடிகள் ஒன்றில், மேசைமேல் தேநீர் கோப்பைகள் மேலே, இருவிழி கலந்து இதயம் இரண்டைத் தொளைத்து, உரைத்தன: 'பேசாதே இன்றுநீ; பேசவில்லை நானும்; இருப்போம் மெளனமாய்…

விட்டுசெல்….

பாஷா நீ மீண்டும் மீண்டும் புறம் தள்ளியபோதும் பள்ளம் நோக்கி பாயும் நதியாய் உன்னிடத்தில் வாசம் செய்யமட்டுமே என் அன்பு வருகிறது! நீ துயருற்றதருணங்களில் பல்கிபெருகி திசையாவும் கரம்நீட்டி தூக்கிசெல்கிறது என்னை உன்னில்! உறக்கம்கலையும்…

நகைச்சுவை

கவிப்பெரும்பேரரசு கரடிமுத்துவுக்கு ஞானபீடப்பரிசு

சொதப்பப்பா *** குமாங்கோ குத்துங்கோ கொல்லையில நீங்க போங்க வாங்கோ வந்துங்கோ வாங்கிட்டு குந்துங்கோ என்ற கவிதையைப் பாடிய கவிப்பெரும்பேரரசு கரடிமுத்து தமிழக மக்கள் அனைவரும் பாராட்டும் பெரும் கவிஞர் என்பது அனைவரும் அறிந்ததே.…

தேர்தல் ஸ்பெஷல் படங்கள்:

வரதன் புதுக்கோட்டையிலிருந்து யார்... ? கதை திரைக்கதை நெறியாள்கை ஜெ.ஜெயலலிதா ஜீட் கதை இயக்கம் தி.மு.க எங்கள் அண்ணா கதை இயக்கம் வைகோ வெறு(ம்)மாண்டி கதை இயக்கம் திருமாவளவன் - கிருஷ்ணசாமி வாய் ஜாலம்…