காளிதாஸ் மரணத்துக்கு என்னிடம் பசியில்லை மரணம் மீதோ அடங்காப் பசியெனக்கு ருசியில்லாப் பண்டம் என்னை மரணம் மறுதளிக்கிறது தெருத் தெருவாய் அலைந்தாலும் தரிப்பிடமில்லா வாகனம் நான் உயர உயரப் பறந்தாலும் உறையும் கூடில்லாப் பறவை…
வேதா மகாலஷ்மி விழி பின்னி விரல் பின்னி விம்மிடும் இதயம் பின்னி இதழ் பின்னி இடை பின்னி சுவாச இழைகள் பின்னி... உயிர் பின்னி உடல் பின்னி உணர்வு எல்லாம் பின்னி பின்னிப் பின்னிப்…
பா.சத்தியமோகன் அவளுடைய சொல் பறவை எனது சொல் அம்பினில் சிக்கிக் கொண்டு ரத்தம் வடிக்கின்றது. செயல்களின் பாறாங்கல்லை இயலாமையின் முதுகினால் சுமக்கும் எனது நிலையோ சீறிச்சீறி ஓய்கிறது. பிறிதொரு நாள் வருந்தக்கூடும் காயப்படுத்தப்பட்ட அவளது…
சத்தி சக்திதாசன் விழிகள் மூட மறுத்ததின் காரணத்தை விழிக்க ஓர் உண்மை உள்ளம் தேடி கழிக்கும் ஒவ்வொரு கணமும் மனதின் கனத்த நேரம்தான் அறிவாயோ பழிக்கும் மனங்கள் யாவையும் ஏனோ பழகும் வகையினிலே உண்மையில்லை…
சத்தி சக்திதாசன் கண்களிலே தோன்றியபோதும் தெரியவில்லை இதயங்களை இடம் மாற்றிய பின்னும் இயம்பவில்லை நிழலாக உன்னைத் தொடர்ந்த போதும் தோன்றவில்லை இரவலாகத்தான் கேட்டேன் இனி எனக்குத் தேவையில்லை என்றன்று நீ கசக்கிப் பின் திரும்ப…
கற்பகம். ---------------------- கனவுக்குள் இருந்து நான் தினமும் உன்னை அழைக்கின்றேன். கருப்பும் வெள்ளையுமாய் அங்கே என் முகம் ... அதனால் உன் கண்களுக்குத் தெரிவதில்லையோ ?! ஓசைப்படாமல் குரலெழுப்ப முடிவதில்லை அதனால் என் மெளனப்…
நளாயினி தாமரைச்செல்வன், சுவிற்சலாந்து ..................................... நினைவழியா கால மடியில் எனது பிண்டம். மூழை மடிப்பெங்கணும் உனது படிமங்கள் உணர்வு நரம்புகளுள் உணர்வெடுக்கும் ஊற்று கருவிழிச் சதுக்கத்தால் கரைகிறது நினைவுகள். மழை நனைந்த செடி கொடி…
புகாரி வெள்ளிக் கால்கொலுசு வீதியெல்லாந் தாளமிட முல்லைச் சிரிப்புதிர்த்து முந்தானைக் கையசைத்து வெள்ளிப் பெளர்ணமியே விரைகிறாயடி - மனதைக் கிள்ளித் தவிக்கவிட்டே மறைகிறாயடி அல்லிக் குளத்தினிலே அந்தியொளி மஞ்சளிலே மெல்ல நீரிறைத்து முகப்பூவை ஈரமாக்கிப்…
திலகபாமா ஈரம் தோய்ந்திருந்த கொல்லைப் புறக் கதவாய் நானும் நிிலையோடு பொருந்த மறுக்க அடித்து சாத்தியாயிற்று திருஷ்டி கழித்து தீயில் கரைய விட்ட சூடமோடு எரியும் ஆசைகளோடு முன் கதவும் தாழிட உரை குத்திய…
பசுபதி வெம்பகலில் வேலைசெய்து வெம்பிடும் மக்கள் -- உலகில் கும்பலாய் ஓடிக் குளிரறைசேர் மக்கள் -- நானோ வேர்வையின்றி நின்று வெயிலிலே தண்மையாய் -- என்றன் காரியம் நடத்திவரும் சூரிய காந்திப்பூ. தரைநடுக்கம் வங்கிகளை…