உனது மொழியை பு ாியாத பாவி நான்

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

நளாயினி தாமரைச்செல்வன்


____
மனசும் உடலும் சோர்ந்த தருணங்களில்
உன் மடியில் கால் பதித்து நடைபயின்று
உன் அலையின் ஓசையில்
என் சோகங்களையே
களைந்து போட்டு
உன்னோடு சேர்ந்து
குதாகலித்திருக்கிறேன்.
மலைச் சூாியனின்
மறைவு கண்டு
உன்மடியில்
முகப்புதைத்தழும்
சூாியனின் கோல அழகை
கவிதையாக புனைந்து
உரக்க உன் செவிகளில்
சேற்கும் படி
காற்றிற்கு சொல்லியிருப்பேன்.
என் சூாியக் காதலனின்
கரம் பிடித்து
உன் அலைகளே
நமக்கு சாட்சி என நினைத்து
உன் மணற்கரையில் நடந்திருப்பேன்.
நிலவின் ஒளியிலே
உன்மடியில் படுத்திருந்து
நீ காற்றிடம் சொல்லியனுப்பும்
கதைகளை குதூகலம் பொங்ககேட்டிருப்பேன்.
வற்றாத என் ஐPவநதியாய்
என்மனதுள் பல கவிதைகள் புனைய
உன்மடி தந்தவளே
பார் உன்னைக் கூட
ஒரு ஆணாக சித்தாிக்க முடியவில்லை.
ஆண்கள் அப்பப்போ தமது உணர்வுகளை வெளிக்காட்டி
சாந்தமாகிடுவர்.
பெண்களோ அப்படியல்ல
என்பதற்கு நீ நல்ல உதாரணம்.
அமைதி என்றுமே ஆபத்தானது
என உணர்த்த நீ ஒருத்தி போதும்.
மெளனம் என்றுமே
பயங்கரத்தை தோற்றுவிக்கும்
என்பது எத்தனை உண்மையானது.
காலம் காலமாக
உனக்கு தந்த வலிகளை
வெளிக்காட்ட
நீ இப்படியா செய்து தொலைப்பது.
உனது எத்தனை சோகங்களை
அன்றயபொழுதில்
அலைகளோடு எனக்கு சொல்லி அனுப்பினாயோ ?
உனது மொழியை பு ாியாத பாவியாகிவிட்டேன்.

நளாயினி தாமரைச்செல்வன்.
சுவிற்சலாந்து.
30-12-2004
thamarachselvan@hotmail.com

Series Navigation

நளாயினி தாமரைச்செல்வன்.

நளாயினி தாமரைச்செல்வன்.