கவிக்கட்டு — 43

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

சத்தி சக்திதாசன்


மனிதாபிமானமே விழித்துக் கொள் !

உலகம்
உன் முன்னால்
உருண்டு கொண்டே !
உயிர்களை
உறிஞ்சிக் கொண்டே !
மனிதாபிமானமே ! விழித்துக் கொள்

அழிந்தவர்
அறிந்ததில்லை
அடுத்தவர் எந்தவூர்
அதுவும் தெரிவதில்லை
ஆயினும் பேதமை உனக்கேன் ?
மனிதாபிமானமே ! விழித்துக் கொள்

நாடுகள் என்றோர் எல்லை
நாளையை இழந்தவர்க்கில்லை
நம்பிக்கை தொலைந்தவர்
நடப்பதில்லை திசை பார்த்து
நிச்சயம் உள்ளங்கள் உருகுது
நினைத்துச் சமுதாயம் உதவுது
மனிதாபிமானமே ! விழித்துக் கொள்

நீர்க்குமிழி
நிரந்தரம் என்றால்
நீயும் நானும்
நிரந்தரமே !
நிலையற்ற வாழ்க்கை
நிச்சயமற்ற மகிழ்ச்சி
நியாயங்கள் மறந்தால்
நிம்மதி மறையுமே !
மனிதாபிமானமே ! விழித்துக் கொள்

வேதனை தான் வாழ்க்கை என்றால்
வெந்தது
வெள்ளை உள்ளங்கள் என்றால்
வேகத்துடன்
வெம்பிய மனங்களை அணைத்தவருண்டு
மனிதாபிமனமே ! விழித்துக் கொள்

விதைத்தவர் எல்லாம்
விளைந்ததை இங்கே அறுப்பதில்லை
வினைகளைக் கண்டு
விலகியவர்
வினாக்களுக்கெல்லாம்
விடை கண்டவரல்ல
விண்ணைத் தொட்டு
விளையாடி
வீரத்துடன் பல தலையாடி
வீழும் மட்டும் வாழ்ந்தவரில்லை
மனிதாபிமானமே ! விழித்துக் கொள்

மனிததுவத்தின் பிறப்பிடம்
மனிதாபிமானம்
மறந்ததானால் விழித்துக் கொள்ள !
மானுடம் இங்கே
மறந்துவிடும் சரித்திரம் படைக்க

****

உறக்கம் மறந்தேன்

உள்ளம் முழுவதும் சோக வெள்ளம் கரை புரண்டோட
உதிர உறவுகள் உருக்குலைய உறக்கம் மறந்தேன்

ஆழியே னோஇங்கே ஓடிவந்து அழித்துச் சென்றவாயி ரமே
அன்றிலிருந்தின் றுவரை ஏனோயான் உறக்கம் மறந்தேன்

கர்த்தர் பிறந்ததையி ங்கே மகிழ்வாயுலகம் விழாவாடியி ருந்தனர்
கரைதாண்டிய லைகள் கழுவிச்சென்றன உறக்கம் மறந்தேன்

பிஞ்சு மலர்களழிந்தன எழுந்தா டிய சுனாமி அலைகளால்
பிழிந்தவொர் துயரம் மனதையுடை க்கயென் உறக்கம் மறந்தேன்

வாழ்க்கையி ழந்தவர் , குடும்பமி ழந்தவர் எண்ணிக்கை யற்றோர்
வாழும் நாள்வரை மாறாச் சோகமு றக்கம் மறந்தேன்

உலகமு ழுவதும் உதவும் கரங்களின் றிங்கே உயர்ந்தனவே
உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் திரள உறக்கம் மறந்தேன்

—-

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்