ஈரடி கவிதைகள்

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

குமார் கணேசன்


கண்கள்
ஏழைக்கு
என்றும் கடல்மீன்கள்!

கவிதை விழி
இலட்சணமும் இலட்சியமும்
நிறைவாய் இருப்பதால்!

கயல் விழி
அவனுக்கும்
(ஆங்கில) மீன் விழி!

நகம்
கடித்தாள்!
புரிந்து கொண்டான்!!

இடைமெலிந்தால்
கன்னி கனியாவாள்!
காளை களையாவான்!!

விதி
அவன் அவள் அவர்!
மெய்யா ? பொய்யா ?

குழந்தை
பெயர் மட்டுமே
இலவசம்!

முதுமை
காயை விட
கனியே சுவைக்கும்!

– குமார் கணேசன்

மதிப்பு
இடத்திற்கேற்ப
ப10ஜ்யத்திற்கும் உண்டு!

மழை
பிறந்த வீட்டுக்கு
விருந்துக்கு வருகிறது!

பேனா
உனக்குள்ளும்
ஓராயிரம் குழந்தைகள்!

தீ
நல்லவற்றையும்
எரிக்கும்!

புள்ளிகள்
நேர்கோடு வளைகோடு!
இணைந்தே இருக்கும்!!

ஆந்த்ராக்ஸ்
நிறவெறி இனவெறி
அவைகளுக்கு இல்லை!

முட்டை
பொரித்தால் உணவு!
பொரிந்தால் உயிர்!!

வி(த்)தை
விதைக்குள் இருக்கும்
மெய்யே!
—-

Series Navigation

குமார் கணேசன்

குமார் கணேசன்