பெரியபுராணம் – 6

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

பா. சத்தியமோகன்


61.

நாற்று பறிக்கும் மாதர் மாட்சியும்
நாற்றை முடிந்து முடியாக சேர்ப்பவர் செய்கையும்
வயலை உழுது பண்படுத்துபவர் ஓசையும்
காதலுக்குரிய இனிய காட்சி

62.

உழுத ஏர் மிக ஊறி சேறு தெளியும்
குழம்பென ன வயலில் இந்திரனைத் தொழுது
நாற்று நடுவோர் கூட்டம்தான்
காவிரி பாயும் நாடெல்லாம் விளங்கும்

63.

நீர்மண்டிய பரந்த வயலில் நாற்றின் முதல் சுருள் விரிந்ததும்
காணும் உழவர்கள் பதம் காட்டியதும் கடைசியர்கள் களையெடுப்பர்
சங்குகள் ஈனும் முத்துக்கள் இடறுவதால் தளர் நடையிடுவர்
வண்டலையும் குழல் அலைய வரப்பு அடைவர்

( கடைசியர்கள் – உழத்தியர்கள் )

64.

செங்குவளை அணிந்த கருங்குழலில் சிக்கிய வண்டு
அதை ஓட்டும் கைகளால் அயல்வண்டும் வரவழைப்பார்
பிறைச் சந்திர நெற்றியில் வியர்வை அரும்ப சிறு முறுவலுடன்
களையாகப்ப்றித்த பொங்குமலர் தாமரையின் தேனில் வாய் மடுப்பார்

65.

கரும்பல்ல நெல்! கமுகல்ல கரும்பு !
வண்டு குடையும் நீலமலரின் துகளின் இரவைக் காட்டும் பகல்
அரும்பல்ல முலை ! அமுதல்ல ! மொழி
எனும்படி வரும் பல்லாயிரம் உழத்தியர்கள் வயலெல்லாம்.

66.

கயல்மீன்கள் துள்ளும் கரையில் கிடக்கும் நத்தை ஓடுகளே சிறுபானை
சங்குகள் ஈன்ற முத்துக்களும் தேனும் உலைநீர்
அங்கிருக்கும் மை ஓடுகளே அடுப்பு செவ்வாம்பல் மலர்களே தீ
வயலெல்லாம் சிறுமியரின் விளையாட்டு

67.

காடெல்லாம் கழையான கரும்பு ,சோலையெல்லாம் மலர் அரும்பு
பக்கமெல்லாம் கருங்குவளை மலர்கள் ,சங்குகள்
நீர்நிலையெல்லாம் அன்னங்கள், குளமெலாம் கடல்போல
நாடெல்லாம் நீர் நாடும் சோழநாடாகாது

68.

கரும்பாலையில் சாறு காய்ச்சுபவர்க்ள இடும் ஒலியும்
சோலைகளில் வண்டுகள் கூடி ஒலிக்கும் ஒலியும்
உலகம் ஓங்கச் செய்யும் நான்கு வேதத்தின் ஒலியும்
கடலின் ஓசையைவிடப் பெரிதாயிற்றே

69.

அன்னங்கள் டுகின்ற மிகப்பெரிய நீர்த்துறைகளில்
கூட்டமாக எருமைகள் விழுந்து மூழ்கும்போது
கன்னியாயிருக்கும் வாளை மீன்கள் பாக்குமரம்மேல் பாயும் காட்சி
பரந்த வானின் வானவில் ஒக்குமே.

70.

சோலையில் பழகும் உற்சாக வண்டினம்
நீர்நிலைப்பூக்களில் படிந்து தேனைக்குடிக்கும்
நீர்நிலைகளில் வாழும் மீன்களோ தாவி
வண்டுகளுக்குரிய கனிகளைச் சேதம் செய்யும்

71.

நீண்ட வயலில் நெல் ஓங்குகிறது தன்னிகரின்றி
மிக தூய வெண்மையான உண்மைக்கருவாக வளர்கிறது
கரு முற்றுகிறது பசலை அடைகிறது சுருள் விரிகிறது
அன்பரின் சிந்தை போல அலர்ந்தன கதிர்கள் எல்லாம்

72.

அன்பின் வசமாகி இறைக்கு ளான அன்பர்
தமக்குள் கூடும்போது தலையினால் வணங்குமாப்போல்
பாலூறி முற்றிய கதிர்கள் முதிர் தலை வணங்கி
தூய அறிவினர் தன்மைபோல விளைந்தன வயல்களெல்லாம்

73.

அரிதலால் பெற்ற செந்நெல் சூடுகளை அடுக்கிய அடுக்கில் சேர்ப்பார்
பரிவுடன் பிடித்த பலப்பல மீன்களை குவிப்பார் குன்றைப்போல்
புரியாய் சொரிந்த சங்கு ஈன்ற முத்துக்களை சுடர்மலையென உயர்த்துவர்
தேன் வடிய சேர்த்தபின் விரிமலர் தொகுதியும் ஒரு புறம் குவிப்பர்

74.

நெல்கற்றை சூடுகுவிந்த போரை அளவாகச்சாய்த்து
பெரிய ஏர்களைச்செலுத்தும் கருமையான எருமைக்கூட்டம்
பெரிய பொன்மலைச்சாரல் மீது
நீர்கொண்ட கரிய மேகக்கூட்டம் சுற்றி வருவது போலே.

75.

வைக்கோலைப் பிரித்து வேறிடம் இட்டபின் நெல்லை மழையெனத்தூற்றி
சிவந்த பொன்மலையோ நவமணிக்குன்றோ எனும்படி
கைவினை வல்ல உழவர் வானம் மறைக்க க்கிய நெற்குன்றம்
தாமரை நீர் நிறை மருதநிலத்தை மலைநிறை நாடாக்கியது

– திருஅருளால்
தொடரும்.

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்