இவர்களுக்காக…..

This entry is part of 35 in the series 20030215_Issue

பிரியா ஆர்.சி.


எத்தனை முறை தோற்றாலும்
வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன்
காத்திருக்கும் கணக்கில்லா கஜ்னி முகமதுகளுக்காக

பரீட்சைக்கு கண்விழித்துப் படித்ததைவிட
பார்ப்பதற்கு அதிக நேரம் செலவிட்டு
தூக்கமும் துக்கமும் ஒருசேர எழுந்தவர்களுக்காக

இந்து இஸ்லாம் எல்லாம் மறந்து
இந்தியா மட்டுமே நினைவில் கொண்டு
இமாலய வெற்றிக்கு ஏங்கும் இந்தியருக்காக

பதினொரு பேரின் தலையெழுத்தை
பலகோடி கையெழுத்துக்கள் மாற்றும் என்று
கணவுகள் நினைவாக காத்திருக்கும் இரசிகருக்காக

உலகக் கோப்பை வெல்லுமா இந்தியா ?

எதிர்பார்ப்பும் ஏக்கமும் எங்கள் கண்ணில்
உழைப்பும் உத்வேகமும் உங்கள் கையில்!!!

rcpriya@yahoo.com

Series Navigation