மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முயற்சிகள் – பொய்க்கப்போகிற நம்பிக்கை எரிநட்சத்திரங்கள்

This entry is part [part not set] of 34 in the series 20070816_Issue

மும்பையன்


செல்வி அவர்களின் கட்டுரை சிறப்பான ஒன்று. நம்பிக்கை வைப்பதிலும், சிறு சிறு மாற்றங்களிலும் மகிழ்ச்சி கொள்வதிலும் தவறில்லைதான். அந்த சுகந்திரம் கூட இல்லாவிட்டால் 60 ஆண்டு சுகந்திரத்தின் பலந்தான் என்ன?

ஆனால், மருத்துவர் விசயத்தில் எனது தனிப்பட்ட நம்பிக்கை பலமுறை பொய்த்திருக்கிறது. எனது குடும்பத்து நபர்கள் யாராவது அரசியலுக்கு வந்தால், எந்த எம்.எல்.ஏயாவது தவறு செய்தால் சாட்டையால் அடியுங்கள் என்று சொன்னதான ஞாபகம். [என் ஞாபகம் தவறாகக்கூடயிருக்கலாம், அல்லது வார்த்தைகள் தவறாகயிருக்கலாம் ] அப்போது நான் மிக மகிழ்ந்தேன். தமிழக அரசியலில்
தங்களை வெளிப்படையாய் சுயவிமர்சனம் செய்து தண்டித்து கொள்ளும் ஒரு கட்சி வளர்கிறது என்ற செய்தியே நம்பிக்கை கீற்றை பரவச்செய்தது. ஆனால் அதன் உண்மை நிலையென்ன, என்பது நம்மில் அனைவரைக்கு தெரியும். தேவைப்படும்போது வன்முறை கையில் எடுத்தல், அடிப்படையான கொள்கை என்ற ஒன்றை வகுத்துக்கொண்டு தேவைப்படும்போது அதை மாற்றி அமைத்தல் அல்லது கொஞ்சம் சமரசம் செய்து கொள்ளல், அடிப்படை அறிவின்றி எதையோ, யாரையோ, எதற்காகவோ எதிர்த்தல், அதன் மூலம் கிடைக்கிற பப்ளிசிட்டியை ஓட்டாக மாற்றல், ஒவ்வொரு தேர்தலிலும் குதிரை மாற்றல், தனது குடும்பாதிக்கத்தை மெதுவாக நுழைத்தல், கட்சியும் கொள்கையும் ஒருநபர் சார்ந்து வளர்த்தெடுத்தல், தனிநபர் துதி, கட்சியில் அறிவியக்கத்தையும், மாற்றுக்கருத்துக்களையும் தந்திரமாக காயடித்தல் போன்ற ரெகுலரான திராவிட ஜனநாயகமரபின் நீட்சியாகவே மருத்துவர் வளர்ந்திருக்கிறார். [ திராவிட ஜனநாயகம் என்பதை படிப்பதற்கு உறுத்தலாகயிருந்தால் காங்கரஸ் ஜனநாயகம் என்றும் சேர்த்து படித்துக்கொள்ளுங்கள் ]

ஒருவேளை தமிழகத்தில் அப்படியிருந்தால்தான் அரசியல் பண்ணமுடியுமே என்னவோ.. எந்த கருத்துமையம் அரசியல் மையங்கள் மேல் ஆட்சி செலுத்ததாவரை இந்த நிலை நீடிக்கசெய்யும். கொள்கைதாண்டி தனிநபரின் ஆளுமை வளரச்செய்வது அபாயகரமானது. கலைஞர், எம்.ஜீ.ஆர், ஜெயலலிதா, மோடி, ஜோதிபாசு, போன்றோர்களின் ஆளுமையும் அதன் வளர்ச்சியும், வீழ்ச்சியும் நமக்கு தெரிந்ததுதான். அதனால்தான் இடதும், வலதும் தாங்கள் ஆளும் கட்சியின்/மாநிலத்தின்/தலைவர்கள் மீது எப்போதும் ஒரு பிடிப்பை, சுயவிமர்சனத்தை நீண்டகால பயன்கருதி கொண்டுள்ளன. இது கட்சிக்கும், நாட்டுக்கும் பயன் தரவல்லதே. ஒன்மேன் ஹ¤ரோ.. முதல்வன்.. சினிமாவில் மட்டுமே சாத்தியமாகவேண்டும்.

மக்கள் தொலைக்காட்சி நல்ல தொடக்கம். ஆனால் எதைநோக்கி பயணிக்கவேண்டுமோ அதை நோக்கியே பயணிக்கிறது. மறுபடியும் மக்கள் நலனுக்காக, தமிழ் கலாச்சார மீட்டெடுப்பிற்காக, உண்மையான திறந்த மனது விவாதத்திற்காக. அரசியல் சாராத தொலைக்காட்சியாக மிளிரும் என்று மறுபடியும் நம்பிக்கைவைத்து அதையிழக்க மனமில்லை. அப்படிவந்தால் மனம் மகிழ்வேன். மருத்துவரின் மிகப்பெரிய சாதனையாக, கொடையாக தமிழகம் அதற்கு தலைவணங்கும். 99% சதவீதம் அப்படிப்பட்ட அறிவற்ற காரியத்தை மருத்துவர், பழுத்த அரசியல்வாதி செய்யமாட்டார் என்பது என் கருத்து. கருத்து தோற்கடிக்கப்பட்டால் என் மீசையில் மண் ஒட்டினால் அதீத ஆனந்தமடைவேன்.

மறுபடியும் இது வெறும் மருத்துவரின் தவறல்ல. புரையோடிப்போயிருக்கிற திராவிட அரசியலின் ஊற்றுக்கண். இடதிலிருந்தும், வலதிருந்தும் கற்றுக்கொள்ளவேண்டியவை அதிகம்.

==============================================================
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20708091&format=html

“திரு.விஜயகாந்த் ரமணா படத்தில் செய்ததைவிட சிறந்த ஜனநாயகமுறையில் திரு.ராமதாஸ் செய்து வருகிறார். இதுபோல் இன்னும் நிறைய விஷயங்களில் அவரின் பொதுமக்கள் சேவை தொடர வேண்டும் ”


mani@techopt.com

Series Navigation

மும்பையன்

மும்பையன்

மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முயற்சிகள்

This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue

செல்வி


.

பாட்டாளி மக்கள் கட்சியின் முந்தைய செயல்பாடுகள் மிகவும் விமர்சனத்துக்குள்ளானவையாக இருந்தன. அதிலும் கூட்டணி மாற்றங்களும் மற்றும் சாதி வழி அரசியலுமாய் நிறைய அதிர்ப்தியை ஏற்படுத்தியிருந்தார்.

ஆனால் இப்போதைய அவருடைய செயல்பாடுகள் மிகவும் சமுக அக்கறை கொண்டவையாக வெளிப்படுகின்றன. ஒரு எதிர்கட்சிசெய்யவேண்டியதை காட்டிலும் அற்புதமாக செய்து வருகிறார். அதன் விளைவு

200க்கும் மேற்ப்பட்ட திருட்டு மணல் லாரிகள் பிடிபட்டுள்ளது.
33 தனியார் பொறியியல் கல்லூரிகள் அதிக பணம் கேட்டவிவகாரத்தில் பிடிபட்டது.

இந்த இரண்டும் சிறு தொடக்கம்தான் இந்த விவகாரங்கள் இத்தனை நாளாய் நடந்த போது கலைஞர் அரசு என்ன செய்தது. இப்போது நடவடிக்கை எடுக்க என்ன அவசியம். இதன் முழுப்பெருமையும் மருத்துவரையே சாரும்.

ஆனால் திரு. ராமதாஸ் அவர்கள் இந்த விஷயத்தை இத்தோடு விட்டுவிடாமல் தொடர் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். பிடிபட்ட லாரிகள், கல்லூரிகள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன அதன் விளைவு எத்தனை தூரம் நிர்வாகத்தை சீர்திருத்தி இருக்கிறது என்பதையும் கண்காணிக்க வேண்டும்

திரு.விஜயகாந்த் ரமணா படத்தில் செய்ததைவிட சிறந்த ஜனநாயகமுறையில் திரு.ராமதாஸ் செய்து வருகிறார். இதுபோல் இன்னும் நிறைய விஷயங்களில் அவரின் பொதுமக்கள் சேவை தொடர வேண்டும்.

1. சிறுவர்களின் பள்ளிக்கல்வி முறையில் மாற்றங்களை கொண்டுவந்து புத்தகம் சுமக்கும் சூழலைத்தவிர்க்க தேவையனாதை செய்ய வேண்டும்.

2. கல்லூரிகளில் உள்ள ராகிங் சுத்தமாக களைய கண்காணிக்க வேண்டும்

3. காவல் நிலையங்களில் சராசரி மக்கள் அனுகமுடியாமல் இருக்கும் நிலைமைகளை மாற்றிட வேண்டும்

4. திரு ராமதாஸ் அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள அரசு நிர்வாகங்களை கண்டு அவைகளை நம்நாட்டிலும் செயலாக்க உதவலாம்.

5. மேலும் மக்கள் தொலைக்காட்சி மூலமோ அல்லது மக்கள் குறைகேட்பு மையங்களை நிறுவி தொலைபேசி எண்ணையோ நிறுவி ( முதல்வன் படம் போல) குறைகளை கேட்டு அதை முதல்வரிடம் கொண்டுபோகலாம். குறைகள் டாடா தொழிற்ச்சாலை நிறுவப்போகும் கிராமத்தில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் நிறைந்து கிடக்கின்றன.

திரு ராமதாஸ் ஒரு விவகாரத்தை கையில் எடுக்கிறார் என்றால் அதில் தவறுகள் களையப்படும் என்பதை மக்கள் நம்பத்தொடங்கிவிட்டார்கள். அந்த நம்பிக்கையை அவர் வாக்குகளாகமாற்றும் சாத்தியக்கூறுகள் உள்ளன. அது அவரின் தொடர்நடவடிக்கைகளைப்பொருத்தே உள்ளன.

மற்ற அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்திலும் தம் கட்சிக்காரர்கள் பாதிக்கப்பட்ட போதும் மட்டுமே போரடி இருக்கின்றன. பெரிய வாக்கு வங்கியான நடுத்தர மக்களின் நேரடி பாதிப்புகளுக்கான போராட்டத்தை இவர் தொடங்கியுள்ளார். உள்ளாட்சி பிரச்சினைகளாகட்டும் எதுவானாலும் மாநில அளவில் போராட்டம் நடக்கும் எனத்தெரிந்தால் அந்தந்த உள்ளாட்சித்தலைவர்கள் எச்சரிக்கையோடு செயல்படவும் செய்வார்கள். அது நல்ல விளைவுகளை உண்டாக்கும்

இது போன்ற முயற்சிகளை அவரிடம் தமிழகமே எதிர்பார்கிறது. அவரின் இத்தகைய பணித்தொடர்ந்தால் தமிழக அரசியல் அவரை சிம்மாசனத்தில் உட்காரவைத்து அழகு பார்க்கும்.
இது தவறு நடக்கவில்லை என்று கூறிக்கொண்டிருந்த கல்வித்துறையில் 33 கல்லூரிகள் பிடிபட்டிருப்பதும் அதற்கு ராமதாஸ் அவர்களின் முயற்சி ஒரு தொடக்கம்.

செல்வி

Series Navigation

செல்வி

செல்வி