This entry is part of 37 in the series 20030309_Issue


காஷ்மீர் பற்றி அ.மார்க்ஸ் சொல்வதற்கு பதில் சொல்வது வீண். இந்த பாகிஸ்தான் நிலைப்பாட்டை பல எழுத்தாளர்கள் தெளிவாக

உடைத்திருக்கிறார்கள். அ.மார்க்ஸ் அவர்களுக்கு தெரியாதா அவையெல்லாம். தெரிந்திருந்தும் இப்படி எழுதுவதன் நோக்கமென்ன ?

காஷ்மீர் பள்ளத்தாக்கில் 72 சதவீத மக்கள் இஸ்லாமியர். உண்மைதான். ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு மட்டுமே ஜம்மு-காஷ்மீர் மாநிலமாக

ஆகிவிடுமா ? இது எப்படி என்றால், கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் 90 சதவீதத்தினர் இஸ்லாமியரே. ஆகையால் கேரளாவுக்கு தனிநாடு

வழங்கவேண்டும் என்று எழுதுவது போன்றது. உண்மை நிலை என்ன ? காஷ்மீர் பள்ளத்தாக்கில் மீதம் 28 சதவீதத்தினர் இந்துக்கள். லடாக்

பகுதியில் 90 சதவீதத்தினர் பெளத்தர்கள். ஜம்மு பகுதியில் 80 சதவீதத்தினர் இந்துக்கள். மொத்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 52

சதவீதத்தினரே இஸ்லாமியர்கள். ஆனால் இன்று (அ மார்க்ஸ் குறிப்பிடும்) காஷ்மீர் பள்ளத்தாக்கில் 99 சதவீதத்தினர் இஸ்லாமியரே.

என்னவாயிற்று ? கேடுகெட்ட இந்துமதத்தைவிட்டு இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த 50 வருடங்களுக்குள் இத்தனை இந்துக்களும்

இணைந்துவிட்டார்களா ? இல்லை. அவர்கள் இஸ்லாமிய புனிதப்போராளிகளால் காஷ்மீரிலிருந்து துரத்தப்பட்டு ஜம்மு பகுதியிலும் டெல்லியிலும்

அகதிகள் முகாமில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனை ஏன் அ.மார்க்ஸ் குறிப்பிடவில்லை. இவரே கேட்டுக்கொள்ளூம் கேள்விகளில் இந்தக்

கேள்வியும் இருக்கவேண்டுமல்லவா ?

உதா: இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக ஆனதும், அவர்கள் சிறுபான்மையாக இருப்பவர்களை கொடுமைப்படுத்தி துரத்திவிடுவார்கள் என்பதற்கு

பங்களாதேசும், பாகிஸ்தானும், காஷ்மீரும் உதாரணம் இல்லையா ? அதற்கு என்ன சொல்கிறீர்கள் ?

தனக்குத்தானே கேள்வி கேட்டு பதில் சொல்லும் மார்க்ஸ் இந்தக் கேள்வியும் கேட்கமாட்டார். இப்படி மேலே குறிப்பிட்டாலும் அதற்கு பதிலும்

சொல்ல மாட்டார்.

அப்படியே பதில் வந்தாலும் என்ன வரும் என்று தெரியும். அது மீண்டும் பாகிஸ்தானின் புரட்டல்வேலைதான். அங்கு காஷ்மீர கவர்னராக இருந்த

ஜக்மோகன் தான் இந்த இந்துக்களை காஷ்மீரிலுருந்து துரத்திவிட்டுவிட்டார். இந்த புரட்டல் பிரச்சாரம் பொய்யென்று ஜக்மோகன் உட்பட பலரும்

மறுத்திருக்கிறார்கள். சரி, அதுதான் புனிதப்போராளிகள் இந்த இந்துக்களை துரத்திவிடவில்லை. அவர்களே இப்போது இந்த இந்துக்களுக்கு

பாதுகாப்பு கொடுக்கிறோம் வாருங்கள் என்று அழைக்க வேண்டியதுதானே ? அதனைக் கேட்டால் ‘அதற்கான கால நேரம் சிந்திக்க

வேண்டும் ‘என்று பதில்வரும். ஆனால் அமார்க்ஸ் அவர்களுக்கு கவலை இல்லை. துரத்தப்பட்டது இந்துக்கள்தானே ? முஸ்லீம்களாகவோ,

கிரிஸ்தவர்களாகவோ இருந்தால் அவருக்கு குரல் கொடுக்க ஏதேனும் இருக்கும்.

Series Navigation