உயிர்த்திருத்தல்

This entry is part [part not set] of 31 in the series 20050707_Issue

சாரங்கா தயாநந்தன்


‘தடால் ‘ என்ற ஓசை கேட்டது. சமையலறையினுள்ளிருந்துதான். அவனுக்குத் தெளிவாகவே புரிந்து போயிற்று. அங்கே நின்று கொண்டிருப்பது யாரென்று. சடுதியான கோபம் கிளர்ந்து அவன் உடலெங்கும் பரவிற்று. ஒரு விதமான இயலாமை அக்கோபத்தினுள் புதைந்து அவனுடலில் பதற்றத்தையும் நடுக்கத்தையும் தோற்ருவித்தன.

எப்படியோ பூனை அவனை விஞ்சிய சக்தியுடன் தான் வாழ்ந்து வருவதாகத் தோன்றுகிறது அவனுக்கு. அந்த நினைப்பில் எழுந்த கேவல உணர்வானது அவனைக் கூசிக் குறுக வைத்தது. நீண்ட தடியொன்றை எடுத்து அதனப் பூனை மீது பயன்படுத்தத் தக்க பொழுதினை எதிர்பார்த்து அவ் எதிர்பார்ப்பின் தோல்வியில் தான் அவ இத் தீர்மானத்துக்கு வந்திருந்தான்.

அந்தச் சுற்று வட்டாரத்தில் பூனைகள் தாமாகத் தோன்றவில்லை. அந்த ஈரறை வீட்டின் அமைதியைக் குலைக்கும் படி பெருகிய எலிகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டி உயிரியல் எதிரியாகப் பூனையைக் கொண்டுவந்தாள் பாட்டி. அந்த நாள் இவனுக்கு இப்போதும் நல்ல நினைப்பிருக்கிறது.

‘மியாவ்… ‘ ‘ என்றது பூனை.

இவன் சற்றே விரிந்த கண்களுடன் ‘ ‘பாட்டி… ‘ என்றான்.

‘ ‘பூனையா ? நான் தான் கொண்டு வந்தன்… ‘ ‘

‘ ‘ஏன்… ? ‘ ‘

‘ ‘எலித் தொல்லை இனியும் பொறுக்கேலாது … எதுக்கும் ஒரு அளவிருக்கு…. ‘ ‘

‘ ‘ பாஷாணம் வைச்சால் செத்திடுமில்லையா ?… ‘ ‘

ச்சே… பாஷாணம் வைச்சால் வருந்திச் சாகும்… பூனை எண்டால் ‘லபக் ‘ எண்டு விழுங்கும். வேதினை இல்லாத சாவு… ‘ ‘

பாட்டி புதிய தர்மோபதேசம் செய்தாள். வலிக்காதிறத்தல் நல்லதுதான். னால் அந்தக் கொடூர இயல்பு காவிய அந்தப் பூனையை நேசிப்பதன் மீதான கிறுக்கல்களை அவனுக்குத் தவிர்க்கவரவில்லை. இருப்பினும் அந்தப் பூனை கொடியதில்லை என்று தன்னைத் தானே நிறுவிக் கொண்டது. அதைச் சாமிப் பூனை என்று அழைக்கலாமோ என்று கூடத் தோன்றியது அவனுக்கு. சிறிது நாட்கள் செல்லத் தானாகத் தேடியுண்ணுதலிலும் கவர்ச்சியுற்றது அது.

அதனைத் தட்டுமுட்டுச் சாமான்கள் நிறைந்த அறையினுள் விட்டுப் பூட்டினாள் பாட்டி. இரவினைப் பெட்டிகள் உருட்டும் ஓசை நிறைத்தது. அந்த இரவில் திருப்தி ஒளி சுடரும் முகத்தோடு பாட்டி வலம் வந்த போதிலும் கூட மறுநாள் காலையில் அச் சத்தங்கள் எல்லாம் பூனை அறையை விட்டு வெளிவருவதற்க் எடுத்த பிரயத்தனங்களே அன்றி வேறில்லை எனக் கண்டு கொண்ட போது எழுந்த ஏமாற்றம் பாட்டியை விரக்தியுள் தள்ளிற்று.

சில காலங்களின் பின் பூனை அடிக்கடி காணாமல் போனது. போவது வருவது தெரியவில்லை. னால் இல்லாத பொழுதுகள் விரிந்திருந்ர்த. பாட்டி அது பற்றிச் சொன்ன சொல்லக் கூடாத வார்த்தைகள் கருதுமிடத்து அதன் வயது பாட்டியைக் குறுக்குத் தனமாய் யோசிக்க வைப்பதாகவே அவன் கருதினான். சில நாட்களின் பின் பாட்டியின் எதிர்வுகூறல் உண்மை யாகக் கண்டபோது மனதினுள் வியந்தான் எனினும் அவன் அதை வெளிப்படையாகச் சொல்லவில்லை.

அழகிய பளிங்கு போல் ஒளிரும் விழிகள். உடல் முழுவதும் செழுமையும் அழகும் சமவிகிதக் கலப்பில் மினுமினுக்கும் அழகு. தற்செயலாக ஒருநாள் அதன் மேனி தொட்ட போதுணர்ந்த மென்மை இன்னமும் அவன் விரல்களில் உட்கார்ந்திருந்தது. எவ்வாறிருந்தால் என்ன. பூனையை அவனால் நேசிக்கமுடியாதிருந்தது.

‘ ‘பிள்ளைகள் பெற்றதப் பூனை . அவை பேருக்கொரு நிறமாகும்…. ‘ ‘

பாரதி வீட்டில் வளர்ந்த பூனை இவ்விதம் தொல்லைகள் கொடுத்திருக்காதா ?பாரதியின் உயிரொன்றிய நேசிப்பின் வசப்பட்டு யுகங்கள் கடந்தும் தன் ஜீவிதத்தைஉறுதி கொண்டிருக்கிறது அந்தப் பூனை. இவனது வீட்டுப் பூனையும் பிள்ளைகள் பெற்றது. னால் பிள்ளைகள் ஒவ்வொன்றும் இயல்பாகவே திருட்டுத்தனம் மிக்கவையாக இருந்தன. அவற்றின் துடுக்குத்தனங்களும் சாகசங்களும் மின்னல் வேகத்திலான கைவரிசைகளும் ற்றல்களின் உச்சங்களில் ஒளிர்ந்த போதிலும் அவனால் அவற்றை ரசிக்க முடியாதிருந்தது. பூனைகளாலான தொந்தரவு இப்போது அவனது வாழ்விலேயே ஒருவிதமான கசப்பை க்கியிருந்தது.

கண்ணம்மா ஒரு பூனையை வளர்த்து வந்தாளென்றும் அப்பூனையானது எலியொன்றைப் பிடித்து உடனடியாகக் கொல்லாமல் துன்புறுத்தி விளையாடியதென்றும் பின்னர் அப்பூனைக்கு நல்லதொரு தண்டனையை நாயொன்று வழங்கியதாகவும் அவன் சின்னஞ் சிறுவயதில் படித்த கதையொன்று ஒருநாள் அமைதியான வெளிப்பகன்ற இருள் திரண்ட இரவின் கனவில் வந்தது. க வல்லவர்களுக்கு வல்லவர்கள் வந்தே தீருவார்கள் என்ற அடிப்படைத் தத்துவமானது அவனது மனதில் பால் வார்த்தது. மறுநாள் எழுந்தபோது நாய்களில் காரணமில்லாத பிரேமை கிளர்ந்திருக்கக் கண்டான். னால் எந்த நாயும் அவன் வீட்டுப் பூனையைத் திகிலூட்டத் துணியவில்லை என்பதையும் பூனை அந்த நாய்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதையும் உணர்ந்து கொண்ட பிறகு அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

‘சிலீர் ‘ என்று கண்ணாடி நொருங்கும் ஓசை கேட்டது.

‘ ‘ என்னப்பா …. போய்ப் பாருங்கோவன்… ‘ ‘

அருகில் படுத்திருந்த மனைவியின் குரல் கிசுகிசுப்பாய் ஒலித்தது. அந்த அருமையான தூக்கத்தைக் கெடுத்த பூனை மீது த்திரம் த்திரமாக வந்தது. எழுந்த போதே நீண்ட ஒரு தடியைக் கையில் எடுத்துக் கொண்டான். நன்றாக வாசலை அடைக்கும் படி நின்று கொள்ளப் போகிறான் அவன். பிறகு தடியைத் தூக்கி ஒரே போடுதான். செத்து விழட்டும் பூனை. கோபமுற்ற அவன் மனம் கொலைகாரனாய்க் கருவியது. மறுகணமே குற்றத்துக்கு அதிகமான தண்டனையோ என மனஞ் சோர்ந்தான். பிறகு அதன் கால்களைத் தாக்கிக் காயப்படுத்தினால் போதும் என்ற தீர்மானத்துக்கு வந்தான். அவனது நினைவுலகம் முழுதும் நிரம்பி வழிந்தது பூனை. பதுங்கிப் பதுங்கிச் சமையலறைக்கு வந்தபோது பூனையைத் ஹன் எதிரியாகக் கெளதிய பேதமையை யாராவது அறிந்து கொண்டார்களோ என்றா பயத்துடன் அவனது விழிகள் அலைபாய்ந்தன. மங்கிய மென்னொளியில் பூனை அமர்ந்திருந்தது. மெல்லத் தடியை ஓங்கிய பொழுதில் சடுதியாகத் திரும்பி இவன் எதிர்பாராத திசையில் எதிர்பாராத வேகத்தில் ஓடி வெறுமையை அவனுக்க்குப் பரிசாக்கியது.

‘ ‘சனியன்… தப்பீட்டுது…. ‘ ‘

அந்தாத் தடிக்குப் பதிலாகக் கூரிய யுதம் கைவசப்பட்டிருத்தலையும் அதனல் அப்பூனையைத் தாக்கி வெற்றி கொள்தலுமான நிழல் தோற்றத்தை மனதில் எழுப்பி அதனால் ஒருவித திருப்தி கொண்டான். னால் மருநாள் அத் திருப்திய்த் தானாகவே தொலத்தான்.

‘ ‘என்னப்பா…பூனை நினைப்பா… ‘ ‘

கலீரெனச் சிரித்த மனைவியின் முகத்தில் ஒரு கேலியின் இழை நிரந்தரப்பட்டிருத்தலை அவன் கண்டான்.

‘ ‘என்னை நினையுங்கோ… ‘ ‘

அவளது மென்சிணுக்கத்தை ரசிக்கும் நிலையில் அவன் இல்லை.ஒரு பெரிய போரில் தோற்ரதாகவே அவன் உணர்ந்தான். னால் அந்தப் பூனையின் எதிர்காலம் எதிர்பாராத விதமான முடிவுக்கு வந்தது மறுனாளிலேயே.சற்றே வயிறுப்பியிருந்த பூனையின் கால்களில் ஒன்று பொறிக்குள் வசமாகச் சிக்கிப் போயிருந்தது. அவனுள் கோபாவேஎசமுமும் வஞ்சகமும் இணைந்துயர்ந்த ஒரு பொழுதில் மீனைப் பொறியிரையாக வைத்திருந்தான். பூனை மாட்டிப் போயிருந்தது. ஒரு சிறு பையினுள் பூனையைக் கவனமாக இட்டுக் கட்ட்டியும் கிவிட்டது. நாய் பிடிக்கும் தொழிலாளர்களிடம் அதனைக் கொடுத்தான்.

அவர்கள் அதைக் கூண்டினுள் கொட்டிய பிறகு தான் அது ஒரு பூனையெனக் கண்டு வியப்போடு இவனைப் பார்த்தார்கள். இவன் கண்களில் கெஞ்சலுடன் அவர்களில் ஒருவனின் கையில் கொஞ்சம் பணத்தை அழுத்தினான்.

‘ ‘பூனைத் தொல்லை பொறுக்கேலாது… எதுக்கும் ஒரு அளவிருக்கு… ‘ ‘

சொல்லியபிறகு தான் அந்த வார்த்தைகளை முன்பொருனாள் கேட்டது நினைவில் வந்தது. அது எலித்தொல்லை பற்றியிருந்தது. காலமானது தொல்லைகளை மாற்றுவதில் கெட்டித்தனம் உடையது எனும் முடிவுக்கு அவன் வந்தான்.

‘ ‘முடிச்சிடுங்கோ… ‘ ‘

மீண்டும் சொன்னான். கூண்டினுள் பூனை பல நாய்களின் நடுவில் ஒதுங்கி நின்றது.இவன் பூனையின் விழிகளைச் சந்தித்தான். ஏதும் செய்யமுடியாத இக்கட்டின் தவிப்பு நிரம்பிய கண்கள். ஒருகணம் தான். பார்வையை வலிந்து விலக்கிக் கொண்டான்.

‘ ‘முடிஞ்சதா….நினைச்சிடுங்கோ… ‘ ‘

பணத்தை வாங்கிக் கொண்டவன் காவிப் பற்களிலான சிரிப்பைச் சிந்தினான். நாய்க்கூண்டு வண்டி நகர்ந்து விட்டது. பூனையை ஜெயித்துவிட்டதாகத் தோன்றியது. ஒருகணம் தான். மறுகணத்தில் மனதில் ஏறிக்கொண்டுவிட்ட சொல்லவியலாத கனதியினுள் அவன் தன் மனத் திருப்தியைக் கிஞ்சித்தும் பிரிக்க முடியாதவனாயிருந்தான். னாலும் மனைவியின் முகத்துக் கேலி இழையை இனிமேல் அவன் காண வேண்டியதில்லை.

இரவு. ‘மியாவ் ‘ என்றது பூனை. மனம் சிலிர்த்துக் கொண்டது. பூனை கத்தும் சத்தம் அவனது காதுகளைச் சம்மட்டியாய் அறைந்தது. தலையைக் குலுக்கிக் கொண்டான். னால் நினைவுகள் குலுங்காமல் தெள்ளத் தெளிவாய் கி இவன் செய்துவிட்ட கொடுமையைப் பறைசாற்றின.

‘ ‘பூனை…பூனை… ‘ ‘

இவன் தன்னுணர்வின்றி உச்சரித்தான்.

‘ ‘என்னப்பா… பூனை தான் செத்துப் போட்டுதே…. ‘ ‘

மனைவி நித்திரைக் குழப்பத்தோடு திரும்பிப் படுத்தாள்.

‘ ‘இல்லை … அது சாகேல்லை…. ‘ ‘

நாய்க்கூண்டின் ஓரத்தில் ஒதுங்கி நின்று அந்தப் பூனை கடைசியாக இவனைப் பார்த்த பார்வை நெஞ்சில் தங்கி நின்று வருத்தியது. அப் பார்வையின் தவிப்பு முள்ளாய் உறுத்தியது.

பூனையின் உப்பிய வயிறு மனக்கண்ணில் எழுந்தது. இவனது இளம் மனைவி தாய்மையுறுகையில் கூட பூனையின் நினைப்பெழுந்து வருந்த வைக்குமே என அஞ்சினான். மனைவியின் கரங்களின் மென்மை கூட இலகுவாகப் பூனையின் மென்மையை மீட்டுவித்துவிடுவதில் அவளை விலகிப் படுத்தான். மெல்ல எழுந்து வெளியில் நடந்தான். நட்சத்திரப் பூகளைத் தூவியிருந்தது வானம். அவற்றை உற்றுப் பார்த்தான். அவற்றில் கூட மறைந்து கிடக்கும் வயிறுப்பிய பூனையின் தோற்றாத்தையே கண்டான். மாணவப் பருவத்தில் முயற்சித்தும் ‘பெருங்கரடி ‘யைக் கண்டு பிடிக்க முடியாத அவனின் கண்கள் பூனையின் உருவை நட்சத்திரங்களுள் கண்டுபிடிப்பதற்குச் சிரமப் படாதிருப்பதற்காகத் தன்னையே வியந்தான்.

விழிகளை வான் வெளியிலிருந்து பிரித்தெடுத்து நிலவொளி க்கிய மரநிழல் அசைவுகளை நோக்கினான். அந்த அசைவுகள் கூட பூனையின் சாகசங்களை அவனுக்கு நினைப்பூட்டிற்று.தன் வயிற்ரினுள் உழந்தைகளைக் காவியிருந்த பொழுதுகளில் அப்பூனை எத்தனை வசந்தக் கனவுகளைக் கண்டிருக்கும் . அனைத்தையும் நொருக்கிச் சாக்களத்துக்கு அனுப்பிவிட்டன் அவன். இனி அவனால் அதை காப்பாற்ற முடியாது. அது நீரில் மூழ்கி மூச்சுத் திணறி இறந்திருக்கும். னால் இவனுள் மட்டும் உயிர்த்திருக்கிறது. மனிதம் உயிர்க்கின்ற பொழுதுகளின் அப்பால் பழிவாங்கற் திருப்திகளைச் சந்தோசமாய்த் துய்க்கமுடியாதெனும் உண்மையை அவனது கன்னத்தில் வழிகிற கண்ணீர் எழுதியது. வேகமாய் அறையினுள் புகுந்து தன் கவிதைக் குறிப்புப் புத்தகத்தை எடுத்துக் கொண்டபோது அவனது கை பூனை என்பதாகத் தலைப்பிட்டிருந்தது.

**

nanthasaranga@gmail.com

Series Navigation

சாரங்கா தயாநந்தன்

சாரங்கா தயாநந்தன்

உயிர்த்திருத்தல்

This entry is part [part not set] of 15 in the series 20010311_Issue

இரா. சுந்தரேஸ்வரன்.


உயிர் கொண்ட உடலின் பெரும்பகுதி
நீரால் ஆனது!

நீர் உறிஞ்சி
சாந்தி தரும் நீலம் மறைத்து
வானிருள வலம் வரும்
மேகத்தில் தொிகிறது,
அவள் முகம்!

அவள் அழும் கண்ணீர்,
ஊர் கொள்ளும் வெள்ளம்!
பிற,
ஆனந்தம்!

சுத்தமான பச்சையில்
மிளிரும் தாவரம் போல
துளிர்க்கிறேன் நான்,
மழையில் நனைந்த பின்!

மழை முடிந்தது!
பயிர் முளைக்கிறதோ ?
களை தளிர்க்கிறதோ ?
குறைந்த பட்சம் வேண்டுவது,
உயிர் தொட்டு, சுட்டு,
இருப்பை உணர்த்தும்
தூய வெண்சுடரொளியே!

Series Navigation

இரா. சுந்தரேஸ்வரன்.

இரா. சுந்தரேஸ்வரன்.