திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100912_Issue

அரசியலும் சமூகமும்

அண்ணா மீது கவி பாடிய திருலோக சீதாராம்

மலர்மன்னன் திரு(வையாறு) லோக(நாத சாஸ்திரி) சீதாராம் பாரதி அன்பர்களில் குறிப்பிடத் தக்கவர். பாரதியாரின் மறைவுக்குப்பின் அவர் மனைவி ஸ்ரீமதி செல்லம்மா பாரதி திருச்சியில் வசித்தபோது அவருக்கு மிகவும் அனுசரணையாகவும், பாதுகாப்பாகவும் இருந்தவர், சீதாராம். ஆண்டுதோறும்…

மொழிவது சுகம் : பெண்களின் மகத்தான சக்தியை ஆண்களுக்குணர்த்துவதே எனது எழுத்தின் நோக்கம் – மரி தியய்

நாகரத்தினம் கிருஷ்ணா அரசியலில் சாதாரணமக்கள் உள்ளே நுழைய முடியுமா என்பது கேள்விக்குறி. மன்னராட்சிமுறை மீண்டும் வந்திருக்கிறது. இனி அடுத்தடுத்து வாரிசுகள் எல்லா கட்சிகளிலும் தயார். சாட்சிக்கென்று ஒன்றிரண்டு உதாரணங்கள் உலக அளவிலும் இல்லாமலில்லை. வானளாவ…

பார்சலோனா -3

நாகரத்தினம் கிருஷ்ணாஇதழ் விரித்த தாமரைபோல மோன் ஜுயிக் (Mont Juic) மலையிலிருந்து தரிசனம் கொடுக்கிறது. அதிகாலையில் கிழக்கில் சூரியன் உதிக்கும் முன்பாக பார்க்க வேண்டுமென்றார்கள். நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து புறப்பட்டு, எங்கள் தினசரியின் தொடக்கமெனத்…

மறுபடியும் அண்ணா

மலர்மன்னன்“இவர் கள்ளங் கபடமற்றவர்!” இப்படிச் சொன்னவ்ர் பூமி தானத்திற்கென சர்வோதய இயக்கம் தொடங்கி, பாத யாத்திரையாகவே பாரதம் முழுவதும் பயணம் செய்த ஆசாரிய வினோபா பாவே அவர்கள். 1956 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில்…

காக்கி உடை காவலர்கள் தங்களைவிட உயரமான தடிகளோடு மல்லுக்கு நிற்பதை நிறுத்தி உழைப்புதான திட்டத்தை அமல்படுத்துவோம்.

அ.மகபூப் பாட்சா புட்டுக்கு மண் சுமந்த வரலாறு புட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் திருவிளையாடல் வெறும் புராண கதையாக மட்டுமில்லாமல் ஊர் கூடி உழைப்பு தானம் செய்யும் கலாச்சாரத்தை பறைசாற்றுகிறது. ஆனால் நாம் அதனை…

காதுள்ளோர் கேட்கட்டும்

எஸ்ஸார்சி வேதங்கள் கோத்துவைத்தான் அந்த வேதங்கள் மனிதர்தம் மொழியிலில்லை வேதங்கள் என்று புவியோர் சொல்லும் வெறுங்கதைத்திரளிலவ்வேதமில்லை வேதங்களென்றவற்றுள்ளே- அவன் வேதத்திற் சில சில கலந்ததுண்டு வேதங்களின்றி யொன்றில்லை இந்த மேதினி மாந்தர்சொலும் வார்த்தைகளெல்லாம்- பாரதி…

அறிவிப்புகள்

பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் மாநாட்டில் அற‌ ந‌ல‌திட்ட‌ங்க‌ள் அறிவிப்பு

ஆல்ப‌ர்ட்,விஸ்கான்சின்,அமெரிக்கா.சிகாகோவின் புலூமிங்டேல் நகரில் உள்ள ஹில்டன் இந்திய நீர்தேக்க உல்லாசத்தலத்தில் அமெரிக்கா முழுவதும் உள்ள தமிழ் வம்சாவளி இனத்தைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான மருத்துவர்களும் மருத்துவத்துறை தொடர்புடைய தொழிலர்களும் மாநாட்டில் ஒன்று கூடியபோது ஒற்றுமையுணர்வும் அறநல உணர்வும்…

கவிஞர் கே. ஆர் திருத்துவராஜாவுக்கு பாராட்டு

பதிவு - சு. குணேஸ்வரன் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட மூத்த படைப்பாளியாகிய கே. ஆர் டேவிட் அவர்களின் சகோதரனாகிய கே. ஆர் திருத்துவராஜாவும் நன்கு அறியப்பட்ட கவிஞர். இவர் தேசிய உயர்கல்வி அமைச்சினால்…

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 24வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 24வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009) நாள்: சனிக்கிழமை (11-09-2010) இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில்…

பிரான்சு ஸ்ட்ராஸ்பூரில்…. “சொல் புதிது” இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு

செய்தி:ஆல்ப‌ர்ட்,அமெரிக்கா. விக்டர் யூகோ அரங்கில் விமரிசையாக எதிர்வரும் செப்.19ம்தேதி நடைபெறவுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து விழா தலைமையை பாரீஸ் அலன் ஆனந்தன் அவர்களும் வரவேற்புரையை பொன்னம்பலம் நிகழ்த்த முன்னிலையை கிருபானந்தன் வகிக்க…

தந்தையும் தாயுமான அதிபர்.

குரு அரவிந்தன்அதிபர் என்றும் நடமாடும் பல்கலைக்கழகம் என்றும் எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுகின்ற திரு. பொ. கனகசபாபதி அவர்கள் 2010 செப்ரம்பர் 4ம் திகதி 75வது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றார். ‘தோன்றின் புகழொடு தோன்றுக’…

குவைத்தில் ரமாலான் சிறப்பு மாதாந்திர இலக்கிய நிகழ்வு

வித்யாசாகர் குவைத்தில், கொட்டா மழை கொட்டினாலும், மாதம் தவறாது முதல் வெள்ளிக் கிழமையன்று இலக்கிய கூட்டம் நடத்தும் 'குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தின்' இன்றைய இலக்கிய நிகழ்வுகளும் தரம் குறையாதவை. மன்ற பொது செயலாளர்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சந்திரனைச் சுற்றித் தளத்தில் இறங்கப் போகும் இரண்டாவது இந்தியத் துணைக்கோள் சந்திரயான் -2 (கட்டுரை : 5)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சந்திரனில் இறங்கியது இந்தியக் கொடி ! யந்திரத் திறமை காட்டும் விந்தை ! எவரும் உயிரிழக்க வில்லை ! உதிரம் சிந்த வில்லை ! மதியால்…

இலக்கிய கட்டுரைகள்

உவமையும் பொருளும் – 1

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E.Mail: Malar.sethu@gmail.com பொருள்களை எளிமையாக பிறருக்கு விளக்குவதற்கும் பிறர் அறிந்து கொள்ளும் வண்ணம் கருத்துக்களைப் புலப்படுத்துவதற்கும் புலவர்களுக்கு உவமைகள் பயன்படுகின்றன. உவமையை விளக்கத்…

இவர்களது எழுத்துமுறை – 5 பாரப்புரத்து (மலையாள எழுத்தாளர்)

வே.சபாநாயகம். 1. எந்த நேரத்தில் எழுதுவீர்கள்? குறிப்பிட்ட நேரம் ஒன்றுமில்லை. இரவோ பகலோ எப்பொழுது வேண்டுமானாலும் எழுதலாம். பெரும்பாலும் விடியற்காலையில் எழுதுவதுண்டு. மத்தியான நேரத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதும் எழுதிக்கொண்டிருப்பதுண்டு. மத்தியானத்துக்குப் பின்…

கதைகள்

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -12

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "விடுதலை என்றால் பொறுப்பு என்று அர்த்தம். அதனால்தான் பல மனிதர் அதற்கு அஞ்சுகிறார்." ஜார்ஜ் பெர்னாட்…

முள்பாதை 46

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com மாலையாகும்போது வீடு முழுவதும் நிசப்தமாகிவிட்டது. சிரிப்பும், கும்மாளமும் நிரம்பியிருக்க வேண்டிய அந்த இடம் மனிதர்களே இல்லாதது போல் சந்தடியற்று இருந்தது. நான்…

பரிமளவல்லி – 11. சன்டோகு கத்தி

அமர்நாத்“மாதவி ரங்கநாதனை நான் போனவாரம் கோவில்லே பார்த்தேன். உனக்கு அவளை எப்படித் தெரியும்?” பக்கத்தில் உட்கார்ந்திருந்த பரிமளாவை சாமி கேட்டான். இருபெண்களையும் அவன் எந்தஇடத்தில் இறக்கிவிட்டானோ, அதேஇடத்தில் அவர்களைக் காரில் ஏற்றிக்கொண்டான். சரவணப்ரியா பின்னால்…

கோகெய்ன்

ராம்ப்ரசாத் 'இது துரோகம் இல்லையா, செல்வா?' 'எது துரோகம் ராஜி? அந்த வழுக்கை மண்டையன் எனக்கு பண்ணினது தான் துரோகம். என் அப்பா கொத்து வேலைக்கு சவுதி வந்தப்போ இந்தாளுகிட்ட வாங்கின 500 தினார்…

இசட் பிளஸ்

எஸ். ஷங்கரநராயணன் பரிசுத்தராஜனுக்குத் தமிழே கொஞ்சம் பேஜார்தான். தமிள்ம்பான். டமிள்னா ஆங்கில வாடையாவது இருக்கும். ஆனால் அவன் ‘’அட" சொல்கையில் ‘’அத" என மற்றவர்களின் மொண்ணைக் காதுகள் குறித்துக் கொள்கின்றன. ‘’அழ" அல்ல அள"…

எரியாத முலைகள்

கே. ஆர். மணி விக்டோரியா டெர்மினஸ் ஸ்டேஷனின் ஆறாம் ப்ளார்ட்ஃபார்முக்கு வெளியே சில நாட்களுக்கு முன் போடப்பட்ட மஞ்சள்நிறச் சாய்வு நாற்காலிகள் மும்பை மாநகரப் புறநகர் ரயில் நிலையங்களுக்குப் புதியவை. நீளமான அந்நாற்காலிகள் ஒன்றில்…

கவிதைகள்

துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்ட மய்யித்துகளுக்கான ஜனாஸா குறிப்பு

ஹெச்.ஜி.ரசூல் அத்தஹியாத் இருப்பில் நீட்டி ஆட்டாத விரல் ஆட்டிய விரல் எல்லா விரல்களையும் கடந்து ஒருபடிஉயர்ந்து நின்றது மய்யித்தை குளிப்பாட்டிய போது மலவாயின் உள்நுழைந்து நஜீஸோடு வெளிவந்த வெள்ளைத்துணி சுற்றிய இடதுகை ஆட்காட்டிவிரல் ----------------------------------------------------------------------------------------------------…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -18 பூமியின் கூக்குரல்

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ பூமியின் கூக்குரல் ++++++++++++++ புவித்தளம் போல் உணர்கிறேன் வியப்புடன் ! எத்துணை அரிய விளைவை பெற்று வந்துள்ளது இச்சூழ்வெளி…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -33 பாகம் -4 நமது பூமி

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ நமது பூமி ++++++++++++++ "தீவினையை எதிர்த்துப் போராடும் போது ஒருவன் எல்லை மீறுவது நல்லது ! ஏனெனில் மிதவாதியாக…

ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும் -மொழிபெயர்ப்புக் கவிதை

மூலம் - மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்) தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், முதியோர் காயமுற்றோர் மற்றும் நோயாளிகள் குழந்தைகள் - வயதுவந்தோர் பிணக்குவியல்களை நிறைய நிறையக் கண்ணுற்றேன் பாவங்களை ஊக்குவிக்கும் துறவிகளின் உருவங்களைக்…

குற்றமிழைத்தவனொருவன்

மூலம் - பியன்காரகே பந்துல ஜயவீர தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், பேரூந்தில் - ரயிலில் முட்டிமோதிப் பயணிக்கையில், பணப்பையினால் முச்சக்கரவண்டிக் கூலியைச் சுமக்க முடியாமல் போகும் வேளையில், 'அந்தோ, எங்களிடமும் இருக்குமெனில் சைக்கிள்…

சும்மாக் கிடந்த சங்கு

ராமலக்ஷ்மி, பெங்களூர் வெத்தலயக் கொதப்பிக்கிட்டு வீதிபாத்து நிக்கையில வீசினாங்க பொதுசனங்க போறபோக்குல கேள்விகள ”கோடிவீட்டுக் குப்புச்சாமி சீட்டுப் புடிக்கப் போறாராமே?” ”அதிகவட்டிக்கு ஆசைப்பட்டே.. உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணாதான்!” "வூட்டல கோச்சுக்கிட்டு பட்டணம் போன…

கடிவாளம்

ஷம்மி முத்துவேல் திசைக்கொரு பறவை கூட்டம், கால அவகாசத்தில் நலன் விசாரணை .... திக்கெங்கும் மனிதர்கள் தனி தனி தீவுகளில் வீண் விவாதங்கள் , சுலப சமரசங்கள் லஞ்ச லாவண்யங்கள் வெள்ளுடை தெய்வங்கள் சத்தமில்லா…

இரண்டு கவிதைகள்

சோ.சுப்புராஜ் 1 .குழல் இனிது; மிஸ் இனிது செல்ல மகள் சில்வியா மெல்லத் தான் பேசத் தொடங்கினாள்..... அம்மா, அப்பா, மாமா தாத்தா, பாட்டி என்று உறவுகளின் பெயர்களை அவளின் உதடுகளுக்குள் ஏற்றி உச்சரிக்கச்…

தாணிமரத்துச் சாத்தான்…..!

கலாசுரன்அந்த வீட்டிற்கு கிழக்காலே அந்த இரண்டு மரங்களும் கால்வலிக்க நின்றுகொண்டிருந்தன..! அங்கு யாரும் பொதுவாக செல்வதில்லை அந்த அரசமரத்தடியிலான கோயில் பூசாரியை தவிர பக்கத்தில் நிற்கும் தாணி மரத்திலும் ஒரு விளக்கு எரிந்துகொண்டிருப்பதுண்டு அரசமரத்துக்…

மேட்ரிக்ஸ் தமிழில்

நட்சத்திரவாசி நீங்கள் மேற்கொள்ளும் பயணம் நிச்சயமாக மாறுபாடனதொன்றே பஜாரில் நீங்கள் நுழைந்ததுமே அன்னியர்களில் ஒருவராய் மாறிவிட்டீர் பஜாரில் மட்டுமே அன்னியருக்கு அதிக மரியாதை இருந்தது பஜாரில் நேர்த்தியாக,வரிசையாக அமைந்திருந்த கடைகளில் உற்சாகமான வரவேற்புகளும் விதவிதமான…