திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040212_Issue

அரசியலும் சமூகமும்

கல்லூரிக் காலம் – 8 -சைட்

நம்பி 'மாவு பணியாரம் ' சீனிவாசன் ஒரு 'டைப்பான ' பயல். எல்லாரும் 'சைட் ' அடிக்க அலையுறப்ப 'சைட் ' கொடுக்குறதுக்காகவே போவான். பூப்போட்ட சட்டை போட்டுக்குவான். கருப்புக் கண்ணாடி. பொம்புள புள்ளங்க…

கடிதங்கள் – பிப்ரவரி 12, 2004

வரதன் - மா. சிவஞானம் - அபராஜிதன் - மாசிலாமணி- நிலாவசந்தன் - அரவிந்தன் நீலகண்டன்- சூர்யா -முஹம்மது இஸ்மாயில் பேச்சு எழுத்து சுதந்திரத்திற்கு வரைமுறையுண்டா... ? காலம் தான் சொல்லனும். இதோ, வித்தியாசமாக…

கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி

கடைசித் தேதி 30, ஏப்ரல் 2004 கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் உலகத்து தமிழ் படைப்பாளிகள் அனைவரும் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள். போட்டி விபரங்கள்: 1) போட்டிக்கு…

தேசபக்தியின் தேவை

சின்னக்கருப்பன் சிறந்த நாவலாசிரியரும், நாடகாசிரியருமான இந்திரா பார்த்தசாரதி அவர்களும், சிறந்த நாவலாசிரியரான பி ஏ கிருஷ்ணன் அவர்களும் சமாச்சார் தளத்தில் தேசபக்தி பற்றி எழுதியிருக்கிறார்கள். http://samachar.com/tamil/features/030204-Ipa.html http://samachar.com/tamil/features/090204-contribution1.html இருவருமே பாரம்பரிய பார்வைகளிலிருந்தே இதனை அணுகியிருக்கிறார்கள்.…

சிறந்த குறும்படங்களுக்குப் பரிசு – கடைசி நாள் பிப்ரவரி 15 , 2004

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் கடந்த மூன்றாண்டுகளில் வெளி வந்த சிறந்த குறும்படங்களை குறுந்தகட்டில்(CD) அனுப்பலாம். சிறந்த மூன்று குறும்படங்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். குறும்பட வடிவம் பெறாத திரைக் கதைகளையும் பரிசுக்காக எதிர்…

‘நீ உன் சகோதரனை அவன் நற்குணத்திற்காக வெறுப்பாயாக ‘

அரவிந்தன் நீலகண்டன் 'உண்மை ஒன்றே; ஞானிகள் அதனைப் பலவாறு விளிக்கின்றனர். ' - ரிக் வேதம் ஒரு தீபாவளியன்றுதான் ஹிந்துக்களை 'ஹிந்துமதத்தின் ஆன்மிக அடிமைத்தளையிலிருந்து ' காப்பாற்றத் தான் எடுத்துள்ள வைராக்கியத்தை அறிவிக்க அமெரிக்காவின்…

நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 1

கண்ணன் பழனிச்சாமி, சிங்கப்பூர். இனி வரப்போகும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு பரபரப்புச் செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் இன்று வரை தேர்தல்கள் ஜனநாயக முறைப்படி நியாயமாக நடைபெறுவது…

அன்புதான் அனைத்துக்கும் அச்சாணி.

கோமதி நடராஜன் நாட்டுப் பற்று,தெய்வ பக்தி என்றெல்லாம் நம்முள் இருக்கிறதா என்று கணிக்கும் முன் மனித நேயம் நம்முள் துளிர் விட்டிருக்கிறதா என்று யோசித்துப் பார்க்க முற்பட்டாலே போதும்,அது,வட்டார உறவை வலுப் படுத்தி,ஊர்ப்பற்றை உருவாக்கி…

அறிவியலும் தொழில்நுட்பமும்

எரிமலைக் குழம்புகள் நிரம்பி உருவான ஹவாயி தீவுகள்

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா காலச் குயவனின் மேளமிது! கோணி கைகள் வார்த்த கோளமிது! நீரில் துள்ளும் கொட்டையிது! உள் நெருப்பைத் தள்ளும் கனல் முட்டையிது! உமர் கயாம் II…

இலக்கிய கட்டுரைகள்

பற்றிப் படரும் வெறுப்பு – (விருமாண்டி-சில குறிப்புகள்)

பாவண்ணன் வாடிவாசல் திறக்கப்பட்டதும் சீவப்பட்ட கொம்புகளுடன் இடமும் புறமும் ஆவேசமுடன் தலையைச் சிலிர்த்தபடி கண்களில் வெறி ததும்பப் பாய்ந்துவரும் அடங்காத காளையின் வருகையுடன் படக்காட்சி தொடங்குகிறது. முழுப்படத்தின் படிமமாக அக்காட்சி அமைந்துவிடுகிறது. ஏராளமான கேள்விகளை…

இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்

ஜெயமோகன் ' 'காற்றூளிக்கும் ஒவ்வாத கணக்கன் ராமலிங்கன் பாடலா அருட்பாவாகும் ? பளா பளா நன்று நன்று. ஒரு மகிமையுமில்லா வடலூர் கணக்கன் பாடலா அருட்பாவாகும் ? போலிச்சைவர்களே புகண்மின் புகண்மின்... ' [இராமலிங்கம்…

விருமாண்டி – சில எண்ணங்கள்

ஸ்ரீகாந்த் மீனாட்சி விருமாண்டி பட விமர்சனங்களைப் படித்து விட்டு, படத்தைப் பார்த்த பின் மரணதண்டனை குறித்த விவாதமும் விருமாண்டியும் என்ற தலைப்பில் கட்டுரை எழுதலாம் என்று நினைத்திருந்தேன். பார்த்து விட்டேன்; எழுதலாம்; ஆனால் ரொம்ப…

மிளகுமாமி சொல்றது என்னன்னா

கோமதி நடராஜன் (அயல் நாடு சென்று கச்சேரி முடித்துத் திரும்பும் பாடக் பாடகியர்களில் அனேகம் பேர்,வந்து இறங்கிய உடன் சொல்வது,அயல் நாட்டு ரசிகர்கள் சென்னை ரசிகர்கள் மாதிரி இல்லை,கச்சேரிக்கு நடுவே எழுந்து போவதில்லை,நன்றாக ரசிக்கிறார்கள்,என்பதுதான்.ஒருவரைப்…

எனக்குப் பிடித்த கதைகள் – 98 – அமைதியடைந்த கடல்-சோமுவின் ‘உதயகுமாரி ‘

பாவண்ணன் மருத்துவத் துறையில் பட்டப்படிப்பு முடித்த என் வாசக நண்பர் ஒருவர் ஏழை மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கத்துடன் ஒரு கிராமத்தில் சின்ன அளவில் மருத்துவமனை ஒன்றைத் தொடங்கித் தொண்டாற்றி வந்தார். இளமைக்காலம்தொட்டு தன்…

குறியும் குறியீடும்

சோதிப் பிரகாசம் சொற்களைப் பற்றி நாம் கவலைப் படத் தேவை இல்லை என்று அஸ்வ கோஷ் கூறுகின்ற ஆறுதல் மொழிகள் நமது காதுகளில் விழாமல் இல்லை. எனினும், பொருள் அற்ற புலம்பல்களாக நமது கருத்துகள்…

ஆனந்த ‘வாசன் ‘

நரேந்திரன் தமிழ் எழுத்தாளர்கள் அடிக்கடி உபயோகிக்கும் 'எதிர்பாராத விருந்து, இன்ப அதிர்ச்சி ' போன்ற வார்த்தைகளை நீங்கள் அடிக்கடி படித்திருக்கலாம். துண்டு, துக்கடா கதைகளில் கூட இன்ப அதிர்ச்சியும், எதிர்பாராத விருந்தும் வந்து நம்மைப்…

சாகித்திய அகாதமிக்கு சில பரிந்துரைகள்

K.ரவி ஸ்ரீநிவாஸ் தமிழில் ஆண்டுதோறும் சாகித்ய அகாதமி பரிசு வழங்குவதும், அதையொட்டி சர்ச்சை எழுவதும் சடங்காகிவிட்டது. பரிசு பெற்றவர் பெயர்,புத்தகம், அது குறித்த விமர்சனம்/ஒப்பாரியுடன் முந்தைய ஆண்டுகளில் எழுதியதை சிறிது மாற்றி ஒவ்வொரு ஆண்டும்…

கதைகள்

இவர்களென்ன மார்க்கண்டேயர்களா… ?

சந்திரவதனா செல்வகுமாரன் சங்கவிக்குக் கையும் ஓடேல்லை. காலும் ஓடேல்லை. இண்டைக்கு அவர் வாறார். எத்தனை வருசக் காத்திருப்புக்குப் பிறகு வாறார். சரியாப் பத்து வருசங்கள். அவளுக்கு இருபத்தைஞ்சு வயசா இருக்கேக்கை பேசின கலியாணம். மாப்பிள்ளை…

சாத்திரமேதுக்கடி ?

ஜெயந்தி சங்கர் தன் 'க்ரூ கட் ' ஹேர்ஸ்டைலை வலது கையால் படு ஸ்டைலாகக் கோதிக் கொண்டு, தன் நீல ஜீன்ஸ் பையினுள் கைவிட்டுக் கொண்டபடி மீனம்பாக்கத்தின் மூன்று வருட மாறுதல்களை தன் கண்வழி…

பூமத்திய ரேகை

அ .முத்துலிங்கம் என்னுடைய அம்மாக்களுக்கு என்னை பிடித்தது கிடையாது. ஒரு அம்மா என்றால் சமாளித்திருக்கலாம். மூன்று அம்மாக்களிடமும் சரிசமமாக, வஞ்சகம் வைக்காமல் பேச்சு வாங்குவது எவ்வளவு கடினம். ஆனாலும் நான் மிகச் சாமர்த்தியமாக பன்னிரெண்டு…

புதிய சாதிகள்

ஜோதிர்லதா கிரிஜா ”அம்மா, அம்மா!” என்று; ஒரு குரல் வாசற்புறத்திலிருந்து தயக்கமாகவும் தேய்ந்தும் கேட்டது. குரல் யாருக்கு உரியது என்பதை ஊகிக்க முடியாதவாறு அது அடங்கி ஒலித்ததால், தாயாரம்மா சமையற்கட்டிலிருந்து வெளிப்பட்டாள். கதவுக்கு அப்பால்…

அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தைந்து

இரா முருகன் கிளம்பு என்று சுப்பிரமணிய அய்யர் சொன்னால் உடனே கிளம்பிவிட முடிகிறதா ? எல்லாம் எடுத்து வைத்து, சாயங்காலம் வெய்யில் தாழ்ந்து வியாழக்கிழமை கிளம்பலாம் என்று சித்தம் பண்ணி வைத்திருந்தபோது ஏகக் கோலாகலமாக…

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -11)

எஸ். ஷங்கரநாராயணன் /6/ அவை வெறும் அச்சு யந்திரங்கள் தாமே... கொடுத்ததைப் பேசாமல் அவை பதிக்கின்றன. கல்யாணப் பத்திரிகை அடிச்ச மையைக் கழுவி விட்டு இழவு அறிவிப்பை அடிக்கச் சொன்னாலும் அழாத மெளனத்துடன் அவை…

விடியும் -நாவல்- (35)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் இமைகள் மூடித் திறப்பதற்கிடையில் விணாடி பறந்து விடுகிறது. இருந்து எழும்புவதற்கிடையில் நிமிசம் ஓடி விடுகிறது. அடுத்து செய்ய இருக்கும் அலுவலைப் பற்றிச் சிந்திக்கும் போதே மணி நடந்து விடுகிறது. படுப்பதற்கு…

இரு கதைகள்

வி கெ என் (அஞ்சலி , மொழியாக்கம் : ஜெயமோகன்) கேரள எழுத்தாளர் வி கெ என் மறைவு : அஞ்சலி , இரு கதைகள் [ கேரள நகைச்சுவை எழுத்தாளரான வி கெ…

துகில்

ஏலங்குழலி மேலேயிருந்த கம்பத்தை இரண்டு முறை பற்றிக் கொள்ள முயன்று, கை வழுக்கிக் கொண்டு சென்றது. செளம்யா எரிச்சலுடன் நழுவிக்கொண்டிருந்த துப்பட்டாவை இழுத்துவிட்டு, பக்கத்து சீட்டின் நுனியைப் பற்றிக்கொண்டாள். பஸ் திரும்பும்பொழுது ஓரமாகச் சாய,…

கவிதைகள்

ஈடன் முதல் மனிதம்

மாலதி தோட்டம் விட்டுக் கிளம்பி எங்கே வந்து நின்று விட்டோம் ? காடுகள் நகர்ந்து வந்து போரிட நீயே வென்றாய்* கடல்களை சூனியத்தில் கட்டுவித்து உறைவித்தேன் நான் வானத்தரை மேல் வலம் காற்றாடிகள் கீழே…

எதிர்பார்ப்பு

பா.தேவேந்திர பூபதி நேற்றிலிருந்து இன்று வரும் நாளை வரும் என்றிருந்த நாட்கள் இன்றுவரை வரவேயில்லை தெரு முனையில் மணியடித்து சிறியதும் பெரியதுமாய் யார் யாரிடமோ கையெழுத்து வாங்கி எதை எதையோ எண்ணிக் கொடுக்கின்ற நாளை…

மதியழகன் சுப்பையா கவிதைகள்

மதியழகன் சுப்பையா, மும்பை 1 என் தொடுதல்களை பொருட்படுத்தியதில்லை நீ சுகித்து மகிழ்கிறேன் நான். என் உரைகளை புரிந்ததில்லை நீ உலரி மகிழ்கிறேன் நான். என் எண்ணங்களை உணர்ந்ததில்லை நீ வெளிப்படுத்தி மகிழ்கிறேன் நான்.…

ஆனைச்சாத்தன் கவிதைகள்

ஆனைச்சாத்தன் தடுமாறி வீழ்கிறேன் பனியில் விழி எறி தூரத்தில் அன்றைய பனியில் நாம் நடந்த தட(ய)ங்கள் இக்கணம் அங்கு வியர்க்கிறது உனக்கு ஒரே சூரியன் உலகிற்கு ------------------------------------------------------- கை தேடும் உன்னைப் போர்வைக்குள் படரவரும்…

பின் விளைவு

க்ருஷாங்கினி ----------------- மேல் வறண்டு வேருக்குள் உயிரோடி காத்திருக்கும் அருகம்புல்லும் சிறுபரப்பில் மண் தேங்கி, விருட்சம் உள் உறிஞ்சி வேர்விட உறங்கும் அரசும் ஆலும். ஆங்காங்கே மேல் மண்ணில் தூவித்தூவி பறந்து காற்றில் படரும்…

கண்ணா நீ எங்கே

கவிநயா ஈன்ற பொழுதினும் இப்போது வலிக்குதடா உன்னைக் காணாமல் உன்மத்தம் பிடிக்குதடா சிணுங்கிய உன் வதனம் சிந்தையில் மிதக்குதடா புன்னகை பூத்த முகம் காண மனம் ஏங்குதடா அன்னையிடம் கோபம் கொண்டு ஆயர்ப்பாடி நீங்கினையோ…

அங்கீகாரம்

பவளமணி பிரகாசம் ஏட்டில் எழுதாத இலக்கியம் பாட்டில் பாடாத காவியம் கல்லில் சொல்லாத அற்புதம் வண்ணத்தில் வரையாத அதிசயம் எண்ணத்தில் எழுந்திடா கவிநயம் நீயேதானடி என்றென்னை நீ பாராட்டவில்லை என்ற குறை இன்று வரை…

முதலா முடிவா ?

காளிதாஸ் என் பிறப்பில் நான் அழுது காட்டினேனே மறந்துவிட்டாயா உலகமே நான் இறக்கும் போது எப்படி அழவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லித்தரவே நான் அழுதேன் என் பிறப்பில் நான் இறக்கும்போது எல்லோரும் அழ நான்…

உண்மை ஆன்மீகம்

சத்தி சக்திதாசன் இரவினாடை இருளையணிந்த மனித இதயம் இன்று மறந்த உண்மை நிச்சயமொன்று இறைவன் அழைப்பு அவனுக்கு நிச்சயம் இதை மறந்தவன் ஆடும் வாழ்க்கை பூச்சியம் ஆசை களைந்து இன்பம் துறந்து - உலகில்…

அன்புடன் இதயம் – 7 – கண்களின் அருவியை நிறுத்து

புகாரி கைகளைக் கட்டிக் கொண்டு கதவோரம் ஒட்டிக் கொண்டு கண்ணீரை விட்டுக் கொண்டு கனலுக்குள் வேகாதேடா - தோழா கவலைக்குள் சாகாதேடா விழியோர நீரைத் தட்டும் வேரோடு கவலை வெட்டும் வார்த்தைகள் சேர்த்துக் கட்டும்…