மாது
மனிதர்களுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தருவது எது ? ஆயுதங்கள் பாதுகாப்பைத் தருமா ? அணு குண்டுகளும், அழிக்கும் வாயுக்களும், பறக்கும் தளவாடங்களும் அரசுகளுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தருமா ? இவை யாவும் பெற்றிருப்பதால் ஒரு நாடு வல்லரசு ஆக முடியுமா ? வல்லரசானால் தருமத்தை கையிலெடுத்துக் கொண்டு தாண்டவமாடலாமா ? முடிவு நல்லதாக இருக்கும் பட்சத்தில், அதை அடையும் வழி எப்படி வேண்டுமானால் இருக்கலாமா ? மக்களிடம், குறிப்பாக அமெரிக்கர்களிடம், உள்ள வன்முறைக்குக் காரணம் எது ? நாட்டுக்கு நாடு வன்முறை வேறு படுகிறதா ? ஊடகங்களின் தாக்கம் வன்முறைக்கு ஒரு காரணமா ? கலாச்சாரங்கள் வன்முறைக்கு வழி வகுக்கிறதா ? – இவையெல்லாம் சற்று கடினமான கேள்விகள். விடைகளும் கடினமானவை. ‘ஆம் ‘, ‘இல்லை ‘ என்ற வார்த்தைகளுக்குள் அடங்காதவை.
ஊடகங்கள் கொண்டு மக்களை இத்தகைய கேள்விகளைக் கேட்கச் செய்வது ஒரு மகத்தான காரியம். குறைந்த தடையுள்ள பாதையை நாடும் மின்சாரம் போல் மனித மனம் எளிதானவற்றில் ஆறுதல் கண்டு விடும். கடுமையான கேள்விகள் கேட்பதற்கு சற்று கடுமையான மூளை வேலை அவசியம். ஆதலால் அத்தகைய கடும் கேள்விகளை மனித மனம் தவிர்த்துவிடும். கடுமையான வேலையைச் செய்ய, மூளையை எளிதான வகையில் தயார் செய்தல் ஒரு அரிதான காரியம். அதற்கு பெளலிங் ஃபார் கொலம்பைன் (Bowling for Columbine) போன்ற படங்கள் அவசியம்.
லிட்டில்டன், கொலராடோ, அமெரிக்கா. ஏப்ரல் 20, 1999 காலை ஆறு மணி, டைலன் க்லீபோல்ட் (Dylan Klebold) எரிக் ஹாரிஸ் (Eric Harris) ஆகிய இரு நண்பர்கள் பெளலிங் விளையாடச் செல்கிறார்கள். ஹாரிஸ்ஸின் வயது பதினெட்டு டைலனின் வயது பதினேழு. காலை 11.10, டைலனும் ஹாரிஸும் தாங்கள் படிக்கும் கொலம்பைன் பள்ளிக்குள் நுழைகிறார்கள். தாங்கள் கொண்டு வந்த ப்ரொபேன் குண்டுகள் அடங்கிய பைகளை உணவுக் கூடத்தில் ஒரு டேபிளின் அடியில் வைக்கிறார்கள். டைமர் 11:17க்கு பொருத்தப் பட்டிருக்கிறது. (மதிய உணவு இடைவேளை 11.00). வெளியே தங்கள் கார்களில் காத்திருக்கிறார்கள். பாம் வெடிக்கவில்லை. 9 மிமி கைத்துப்பாக்கிகளுடன் உணவுக் கூடத்தில் நுழைகிறார்கள். துப்பாக்கிச் சத்தம். பனிரெண்டு மாணவர்களும் ஒரு ஆசிரியரும் பலி. பல பேர் படு காயம். 12.05 தங்களை சுட்டுக் கொண்டு சாகிறார்கள்.
மேற்கூறிய நிகழ்ச்சியே மைக்கேல் மூர் (Michael Moore) அவர்களின் விவரணப் படத்திற்கான பெயர்க் காரணம். மைக்கேல் மூர் ஒரு இடது சாரி சிந்தனையாளர் – இல்லை இல்லை – ஒரு பரந்த சிந்தனையாளர். வலது சாரிச் சிந்தனையாளர்களுக்கும் போலி இடது சாரி சிந்தனையாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குபவர். அமெரிக்க அரசியலின் போலித் தனங்களைப் பற்றி பேசத் தயங்காதவர். சில படங்களுக்கும், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் தயாரிப்பாளர். சில புத்தகங்களுக்கு ஆசிரியர். ஈராக் போரை அடுத்து அமெரிக்க மக்களிடம் புஷ்ஷின் செல்வாக்கு கூடியிருந்த போது, புஷ்ஷை எதிர்த்துப் பேசினால் தேச விரோதி என்று பட்டம் கட்டப்படும் நிலை இருந்தது. அப்போதும் புஷ்ஷின் மூடத் தனங்களை தன் புத்தகங்களில் துணிந்து படம் பிடித்துக் காட்டியவர்.
உள்ளதை உள்ளவாறு கூறுவது நல்ல செய்திப் படமாகலாம். ஆனால் செய்திக்குப் பின்னால் இருக்கும் சேதியை படம் பிடித்துக் காட்டுவதே ஒரு நல்ல விவரணப் படத்திற்கு அடையாளம். விவரணப் படங்கள் செய்திப் படங்களாக நழுவுவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகம். ஒரு நல்ல விவரணப் படத்தை எப்படி அளிப்பது என்ற கலையில் தேர்ந்தவராயிருக்கிறார் மூர்.
Columbine தலைப்பில் இருந்தாலும், அந்த கோர நிகழ்ச்சிக்கென மூர் ஒதுக்கியிருக்கும் நேரம் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களே. ஒற்றை கிடாரின் மெல்லிய இசை, செக்யூரிட்டி காமெராவின் ஒளிப் பதிவு, காவல் நிலைய தொலைபேசிகளின் ஒலிப் பதிவு ஆகியவற்றின் கலவை கொண்டு அந்த கோர நிகழ்ச்சியை காட்டுவது, பார்ப்பவரின் நெஞ்சில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்துகிறது. மற்றொரு துப்பாக்கிச் சூடு நிகழ்ச்சியும் பத்து நிமிடம் இடம் பெறுகிறது – ஆறு வயதுச் சிறுவனின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகிறாள் ஒரு ஆறு வயதுச் சிறுமி. இக் கோரங்களைப் பற்றிய செய்தியைத் தருவதன்று மூரின் நோக்கம். செய்தி ஊடகங்கள் அதை போட்டிப் போட்டுக் கொண்டு செய்தன. இக் கோரங்களின் மூலத்தை ஆராய்வதே மூரின் நோக்கம். அதனால் மூர் பலரிடம், பலமுறை கேட்கும் கேள்வி – ‘ஏன் ? ஏன் இந்த வன்முறை ? இங்கு (அமெரிக்காவில்) மாத்திரம் ஏன் அதிக வன்முறை ‘.
மூரின் விவரணப் படுத்தும் ஆற்றலுக்கு இதோ ஒரு எடுத்துக்காட்டு. கொலம்பைன் பள்ளி உள்ள லிட்டில்டனில் உலகிலேயே மிகப் பெரிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினின் (Lockheed Martin) ஒரு உற்பத்திச் சாலை உள்ளது. அங்குள்ள ஒரு அதிகாரியிடம் ‘இங்குள்ள சிறுவர்களின் பெற்றோர் உங்கள் கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். ‘அப்பா உலக அழிவு ஆயுதங்கள் தயாரிக்கிறார். என்னளவில் நானும் அழிக்கும் கருவிகளை தயாரிக்கலாமே என்ன தப்பு ‘ என்று சிறுவர்கள் எண்ணுவதில் என்ன தப்பு ? ‘ என்று கேட்கிறார். அதற்கு அந்த அதிகாரி ‘நாங்கள் தயாரிக்கும் ஆயுதங்கள் நம் நாட்டைக் காப்பதற்கு. வேறொரு நாடு நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக நாமாகச் சென்று அங்கு குண்டு போடுவதில்லை ‘ என்று சொல்லி முடித்தவுடன் காட்சி மாறுகிறது. தகுந்த (புகைப்) படங்களுடன் கீழே கொடுக்கப்பட்ட தகவல்கள் திரையில் ஓடுகின்றன (தகவல்களில் சில):
– 1953, அமெரிக்கா ஈரானின் பிரதம மந்திரியான மோசடக்கின் (Mossadeq) ஆட்சியைக் கவிழ்த்து ஷா என்ற கொடுங்கோலனை ஆட்சியில் அமர்த்துகிறது.
– 80கள், சோவியத் ராணுவத்துடன் போரிட பின் லாடனையும் அவன் கூட்டாளிகளையும் பயிற்றுவிக்கிறது அமெரிக்கா. CIA பின் லாடன் குழுவினருக்கு மூன்று பில்லியன் டாலர்கள் வழங்குகிறது.
– 1982, ஈரானியர்களைக் கொல்வதற்காக சதாமிற்கு பில்லியன் கணக்கில் பணம் கொடுக்கிறது அமெரிக்கா.
– 1983, வெள்ளை மாளிகை ஈராக்கியர்களை கொல்வதற்காக ஈரானியர்களுக்கு ரகசியமாக ஆயுதம் வழங்குகிறது.
– 1990, அமெரிக்க ஆயுதங்களுடன் குவைத்தை முற்றுகையிடுகிறது ஈராக்.
– 1991, ஈராக்கில் நுழைகிறது அமெரிக்கா; குவைத்தில் கொடுங்கோல் ஆட்சியை நிறுவுகிறது.
– 1991ல் இருந்து – இன்று வரை – 500,000க்கும் மேற்பட்ட ஈராக்கிய குழந்தைகள் பலி.
– 2000 – 2001 – தாலிபான் ஆட்சி செய்த ஆப்கானிஸ்தானுக்கு 245 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக வழங்குகிறது.
– 9/11/01 – பின் லாடன் தனக்கு அளிக்கப் பட்ட சிறந்த CIA பயிற்சி கொண்டு 3000 பேரை கொலை செய்கிறான்.
இந்த தகவல்களை காட்டுவதற்கு, கர கரத்த குரலில் லூயி ஆர்ம்ஸ்ட்ராங்க் (Louis Armstrong) ‘எவ்வளவு அருமையான உலகம் (What a Wonderful World) ‘ என்று பாடும் பாடலை, பின்னனி இசையாகப் பயன்படுத்தியிருப்பது அபாரம்.
படத்தில் இடம் பெற்ற பேட்டிகளுள் இரண்டு பேட்டிகளை குறிப்பிட்டேயாக வேண்டும். மர்லின் மேன்சன் (Marilyn Manson) என்ற ‘அதிர்ச்சி ராக்கர் ‘ ருடரான ( ‘Shock Rocker ‘) பேட்டி ஒன்று. பழம் பெரும் ஹாலிவுட் நடிகரான சார்ல்டன் ஹெஸ்டனுடனான (Charlton Heston) பெட்டி மற்றோன்று. கொலம்பைன் கொலைகாரர்கள் மேன்சனின் ரசிகர்கள். ஊடகங்களும் அரசியல்வாதிகளும் மேன்சனை குற்றம் சாட்டி கையைக் காட்டுவதற்குத் தயங்கவில்லை. ஹெஸ்டன், அமெரிக்காவின் அடையாளமாக தன்னை காண்பித்துக் கொள்ளும் ஒரு பழம்பெரும் நடிகர். அமெரிக்க துப்பாக்கிக் கழகத்தின் (NRA) தலைவர். மர்லின் விசாலப் பார்வையுடன் தெளிவாக பதிலளிக்கிறார். ஹெஸ்டன் பசப்புகிறார். இவர்களைப் பற்றி மக்கள் கொண்டிருக்கும் பிம்பங்கள் சிறிதளவாவது தகர்க்கப் பட்டிருக்கும்.
ஊடகங்கள், முக்கியமாக அமெரிக்க ஊடகங்கள் மக்களை பயம் கொண்டு எப்படி ஆட்கொள்ளப் பார்க்கின்றன என்பதற்கு காட்டப்படும் உதாரணங்கள் – Y2K வினால் உலகமே ஸ்தம்பித்துப் போய்விடும் என்பதிலிருந்து, கொல்லும் தேனீக்கள் அமெரிக்க தெற்கு மாகானங்களில் எப்படி பரவப் போகிறது என்பது வரை – அருமை. செய்திகளால் பெரும் ஆதாயங்களை தேடி ஓடிக் கொண்டிருக்கும் ஊடகங்களை, அவைகளுக்குப் பின்னால் நின்று கொண்டு கிண்டல் செய்கின்றன சில காட்சிகள், அவற்றுள் ஒன்று – துப்பாக்கிச் சூட்டினால் இறந்த சிறுமியின் இழப்பை விட தன் தலைமுடி கலையாதிருப்பதில் அதிக அக்கறை காட்டும் ஒரு தொலைக்காட்சி செய்தியாளர்.
மூரிடமுள்ள மிகப் பெரிய ஆற்றல் அவர் பேட்டி காணும்/கேள்வி கேட்கும் முறை. எவ்வித போலி அறிவு ஜீவித்தனத்தின் சாயலும் இல்லாமல் மிக இயல்பாக சற்றே நகைச்சுவை கலந்து அவர் கேட்கும் ஒவ்வோரு கேள்வியும் ஆழ்ந்து சிந்திக்க வைப்பவை. ‘இவன் என்ன ஜோக்கர்தானே ‘ என்று எவரும் தவறாக நினைத்து, சிந்திக்காமல் பதில் சொல்ல முனைந்தால் – பதில் சொல்பவரின் நாக்கில் சனி. பதில் சொல்பவர் வகையாக மாட்டிக் கொண்டு விடுவார். (இப்படி மாட்டிக் கொண்டு பேட்டியை பாதியிலேயே முடித்துக் கோள்ளும் நிலை ஹெஸ்டனுக்கு ஏற்படுகிறது). மூர் நகைச்சுவையுடன் கேட்கும் பல கேள்விகளுக்கு பலர் பதற்றத்துடன் பதில் சொல்கிறார்கள். தன் நிலையில் உறுதி, தான் நம்பும் கருத்தில் தெளிவு, போலித்தனத்தை விரும்பாமை ஆகியவை ஒருசேர அமைந்தால்தான் மூர் போல் இயல்பாக இருக்க முடியும்.
அழுத்தமான கேள்விகளை கேட்பதே/கேட்கவைப்பதே படத்தின் முக்கிய நோக்கமென்றாலும், இந்த கேள்விகளுக்கிடையில் அங்கதத்தையும் நகைச்சுவையும் இழையோட விட்டிருப்பது மூரின் திறமையைக் காட்டுகிறது. ஒரு வலுவான கருத்திற்கிடையில், கருத்தின் வீரியம் குறையாமல் நகைச்சுவையை இழைய விடுவது கயிற்றின் மேல் கரணம் அடிப்பதற்கு ஒப்பாகும். கைதேர்ந்தவர்தான் அதைச் செய்ய முடியும். மூர் கைதேர்ந்தவர்.
படம் முழுவதும் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை கூறாமல் படத்தை முடித்கிறார் மூர். ஆம், அதுவே அவரின் நோக்கம். வினாக்களுக்கு பதில் அளிப்பதல்ல அவரது படத்தின் நோக்கம். கேள்விகளை கேட்க வைப்பதே அவரது நோக்கம். தன் நோக்கத்தை சீரிய முறையில் நிறைவேற்றியிருக்கிறார் மூர். படம் முடிந்து எழுத்துக்கள் ஓடுகின்றன. (மனதில்) கேள்விகளும் ஓடிக் கொண்டேயிருக்கின்றன.
***
பி.கு: 2002ம் ஆண்டின் சிறந்த விவரணப் படத்திற்கான ஆஸ்கர் விருது ‘Bowling for Columbine ‘க்கு கிடைத்தது.
- Dalit History Month: 1 April to 30 April
- கவிதையின் ஆன்மீகச் சிகரம் : ஜலாலுத்தீன் ரூமி மெளலானா ஜலாலுத்தீன் ரூமியின் கதைகளும் கவிதைகளும்
- திறனாய்வுக் கூட்டம்
- ஆஸ்ட்விட்சின் வாயு அறைக்கதவுகளைத் திறக்கும் கிராபிக்ஸ் சிலுவைபாடு
- ரோறா போறா சமையல்காரன்
- கடிதங்கள் – மார்ச் 11,2004
- கடிதம் – மார்ச் 11 ,2004 – இலக்கிய மதிப்பீடுகளும் பூசல்களும் : காஞ்சனா தாமோதரன், ஜெயமோஹன் நிலைப்பாடுகள் பற்றிய ஒரு குறிப்பு
- யாரோ, அவர் யாரோ ?
- நரேந்திரனின் கட்டுரை பற்றி
- அறிவிப்பு : தமிழில் கலைச் சொற்கள் திட்டம்
- கடிதம் மார்ச் 11, 2004-சமஸ்கிருதம் பற்றிய பித்தனின் கருத்துகள் மீது
- கடிதம் : மார்ச் 11,2004 – பென்கள் பள்ளிவாசலுக்கு போவது பற்றி
- போனதும், போனவைகளும்
- மார்ச் 11, 2004 : சென்ற வாரங்கள்
- பதிவிரதம்
- இனிய காட்சி
- வீடு
- இரண்டு கவிதைகள்
- நீயும் நானும்
- நீரலைப்பு
- மூன்று குறுங்கவிதைகள்
- ஆறாம் அறிவு
- துளிகள்.
- மூன்று கவிதைகள்
- Bowling for Columbine (2002)
- விண்ணின்று மீளினும்….
- நீலக்கடல்- (தொடர்) -அத்தியாயம் -10
- விடியும்!நாவல் – (39)
- கடை
- இதை மட்டும் கொடுக்கமாட்டேன்..
- ரோறா போறா சமையல்காரன்
- வாரபலன் – மார்ச் 11 ,2004 : செருகல் திருட்டு , காமனஹள்ளியில் குடியேற்றம், சினிமாவான நாவல், கேரள மண்ணில் வேலை தேடி
- திருவள்ளுவரின் பெண்ணுரிமை
- எல்லாப் பெண்களும் கற்பில்லாதவர்களா ?
- ஓ போடு ! – அசல் முகங்கள்
- அமெரிக்காவை ஆளுவது யார் ?
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தொன்பது
- அன்புடன் இதயம் – 10 – தோழியரே தோழியரே
- தாகம்
- இரு கவிதைகள்
- மனம்
- பழக்கம்
- பிழைத்துக் கிடந்தால் பார்க்கலாம்
- இரண்டு கவிதைகள்
- ஒரு சீட்டு வாங்கிடுவீர்..
- மின்சாரக் கூட்டமைப்புக் கோப்பு துண்டிப்பாகி வடகிழக்கு அமெரிக்கா, கனடாவில் நீண்ட இருட்டடிப்பு (2003 August 14 Power Grid Failure)
- ஐஸ்கிரீம் வகைகள்
- வாசம் வீசும் தென்றல் – என் கண்களில்