பால சாகித்திய புரஸ்கார் மற்றும் விருதுகள்

This entry is part [part not set] of 41 in the series 20101010_Issue

சுப்ரபாரதிமணியன்


1.சாகித்திய அகாதமி: குழந்தை இலக்கியப் பரிசு
சாகித்திய அக்காதமி ஆண்டுதோறும் படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகிய பிரிவுகளில் பரிசு வழங்கி வருகிறது. இவ்வாண்டு முதல் சிறுவர் இலக்கியத்திற்கும் வழங்குகிறது. இவ்வாண்டிற்கான “ பால சாகித்திய புரஸ்கார்” பரிசு திண்டுக்கலைச் சார்ந்த குழந்தை எழுத்தாளர் கமலவேலனுக்கு அவரின் ‘அந்தோணியின் ஆட்டுக்கூட்டி’ என்ற நூலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 1961 முதல் சிறுவர் நூல்களை கமலவேலன் எழுதி வருகிறார். கண்ணன், அரும்பு, கோகுலம், தினமணியின் சிறுவர் மணி ஆகிய இதழ்களில் குழந்தைகளுக்காக எழுதி வருகிறார். ஆசிரியராகப் பணியாற்றியவர் . அறிவொளி இயக்கத்தில் சிறந்த பணிக்காக மால்கம் ஆதிசேசய்யா விருதும் பெற்றிருக்கிறார்.

” மண் புதிது “ சுப்ரபாரதிமணியனின் பயண நூல் வெளியீடு

சுப்ரபாரதிமணியனின் “ மண் புதிது “ பயண் நூல் வெளியீட்டு விழா திருப்பூரில் எம்ஜி புதூர் மூன்றாம் வீதியின் ஓசோ பவனில் நடைபெற்றது. வழக்கறிஞர் சி ரவி நூலை வெளியிட வழக்கறிஞர் சுகன்யா பெற்றுக் கொண்டார். நூலை அறிமுகப்படுத்தி கவிஞர் முத்து சரவணன் பேசினார். 1995 இல் சுப்ரபாரதிமணியன் இங்கிலாந்து, அய்ரோப்பிய நாடுகளுக்குப் பயணம் சென்றிருக்கிறார். அப்போதைய தமிழ் ஈழம் பற்றியக் கனவுகள் இப்போது சிதைந்திருப்பது வருத்தம் தருகிறது. அய்ரோப்பிய நாட்டில் வாழும் ஈழமக்களைப்பற்றி அதிகம் எழுதியிருக்கிறார். அவர்கள் கலாசாரரீதியாக அன்னியப்பட்டிருப்பது பற்றியும் அதிகம் கூறியிருக்கிறார். வெவ்வேறு நாட்டு தேசிய இனக்குழுப்போராட்டங்கள் தீவிரவாதப்போராட்டங்களாக மாறி இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். தீவிர அக்கறையுடன் திரைப்பட , குறும்பட முயற்சிகள் பற்றியும் எழுதியுள்ளார். வழக்கமான பயண நூலாக இல்லாமல் கலாச்சாரத்தேடலாக இந்த நூல் வடிவமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்று குறிப்பிட்டார். வழக்கறிஞர் சுகன்யா பழங்குடிகள் மீதான் வன்முறை என்ற தலைப்பிலும் வழக்கறிஞர் சி ரவி “ முத்துகுமார்; நெருப்பாய் வாழ்ந்தவன் ’ என்ற நூல் பற்றிய விமர்சன உரையையும் வழங்கினர். பழ விசுவநாதன் தலைமை வகித்து மறைந்த தமிழ் தேசிய வாதி ஆசிரியர் துரை அரசன் பற்றிப் பேசினார். கவிஞர் இரத்தின மூர்த்தியின் கவிதைகள் குற்ற உணர்வில் அமிழ்ந்து கிடக்கும் தனி மனிதனின் தீவிர மன ஆதங்கமாக அமைந்திருந்தன. ஆலம் நன்றி கூறினார். “ மண் புதிது “ நூல் வெளியீடு : அறிவு பதிப்பகம், சென்னை , இரண்டாம் பதிப்பு இது.

Interior Decoration :ஆங்கிலk கவிதை தொகுப்பு

பத்து இந்திய மொழிகளைச் சார்ந்த 54 பெண் கவிஞர்களின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பு இது. தமிழில் குட்டி ரேவதி, சல்மா, சுகந்தி சுப்மணியன், இளம்பிறை, மாலதி மைத்திரி, சிகிர்தராணி, உமா மகேஸ்வரி, வத்ஸலாவின் கவிதகள் இடம் பெற்றுள்ளன. உருது, ஆங்கிலக் கவிதகளும் உள்ளன. தெலுங்குக் கவிஞர்களின் மொழியாக்கத்தில் வசந்தா கண்ண பிரான் இடம் பெற்றுள்ளார்.

( ரூ 395. வெளியீடு . Women Unlimited , New Delhi )

நம்மாழ்வார்; சிற்பி பாலசுப்ரமணியன்

பாலுக்கும் தேனுக்கும் நிகரான இலக்கியச் சுவையும், பண்பட்ட வைணவ செந்னெறி ஏற்றத் தத்துவச் செழுமையும் கொண்ட திருவாய்மொழியைத் தந்த நம்மாழ்வார் நம் சிந்தயிலும், சென்னியிலும் வீற்றிருக்கும் கீர்த்தி உடையார். வைணவ அடிமைத் திறமும் , ஆய்வு நெறித்தரமும் ஒன்றிணைந்த சிறப்போடு கவிஞர் சிற்பி பாலசுப்ரம்ணியன் அவர்கள் இதை உருவாக்கி உள்ளார்.. ஞானப்பரம்பரை என்ற பழம் இலக்கிய வரிசையில் இடம்பெற்றுள்ள நூல் இது. பொள்ளாச்சி என் ஜி எம் க்ல்லூரி இந்த ஞானப்பரம்பரை நூல் வரிசையை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
செம்மொழி மாநாட்டு சமயத்தில் “ வள்ர் கொங்கு” என்றத் தலைப்பில் கொங்கு நாட்டுப் படைபாளிகள், மொழி அறிஞர்கள் , திரைப்படத்துறையினர் எழுதிய 500 பக்க நூல் ஒன்றையும் இக்கல்லூரி வெளியிட்டிருந்த்து. இவ்வாண்டில் இக்கல்லூரி இணைந்து நடத்திய சாகித்திய அக்காதமியின் அற நெறி நூல்களும், உலகமயமாக்கலும் கருத்தரங்கமும், நல்லி திசை எட்டும் மொழிபெயர்ப்பு பரிசு குறித்தான மொழிபெயர்ப்பாளர்களின் கருத்தரங்கு ஒன்றும் குறிப்பிடத்தக்கது.

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்