லெனின் விருது வழங்கும் நிகழ்வு

This entry is part [part not set] of 33 in the series 20100815_Issue

அருண் & குணா


லெனின் விருது வழங்கும் நிகழ்வு நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 15, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 4.30
இடம்: ஜீவன ஜோதி அரங்கம், எழும்பூர் (கன்னிமாரா நூலகம் எதிரில்)

லெனின் விருது

இயக்குனர் பீம்சிங் அவர்களின் மகனான படத்தொகுப்பாளர் திரு. பி. லெனின் அவர்கள் தமிழின் மிக முக்கியமான படத்தொகுப்பாளர்.

மிக உச்சத்தில் இருக்கும்போதே படத்தொகுப்பு வேலைகளை குறைத்துக் கொண்டு குறும்படத் துறையில் தனது கவனத்தை திசை திருப்பினார். மேலும், தமிழில் குறும்படங்களுக்கான ஒரு அலையை தோற்றுவித்தார். இவர் இயக்கிய “நாக் அவுட்” என்கிற குறும்படம்தான் தமிழில் முதலில் திரைப்படக் கல்லூரி மாணவர் அல்லாத ஒருவர் எடுத்த குறும்படமாகும். இக்குறும்படம் இவருக்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து குறும்படங்களுக்காக தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இவர் செலவழித்து வருகிறார். குறும்படங்கள் சார்ந்து கிராமப் புற மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தல், அவர்களை குறும்படம் எடுக்க ஊக்குவித்தல் என பல பணிகளை செய்து வருகிறார். மேலும் யாருமே செய்யத் துணியாத பணியாக தனது ஸ்டுடியோவில் குறும்படங்களுக்கு இலவசமாக படத்தொகுப்பை செய்து வருகிறார்.

குறும்படங்கள் சார்ந்து பலருக்கும் உதவி செய்து வருகிறார். தனது பணியைக் கூட அவ்வளவாக கவனிக்காமல் குறும்படங்களுக்காக தொடர்ந்து போராடும் இவர், குறும்படங்களுக்கு தமிழக அரசு விருதுகளும், உதவிகளும் செய்து ஊக்குவிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இன்னும் சொல்லப்படாத இவரது சாதனைகள் ஏராளம். இவரது எளிமை ஊரறிந்த ஒன்று.

இத்தகைய சிறப்பு வாய்ந்த படத்தொகுப்பாளர் திரு. லெனின் அவர்களின் பெயரில் ஒரு விருதை ஏற்படுத்துவதில் தமிழ் ஸ்டுடியோ.காம் பெருமிதம் கொள்கிறது. மேலும் இந்த ஆண்டு குறும்படத் துறையின் வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை திரு. லெனின் அவர்களுக்கு கொடுப்பதில் தமிழ் ஸ்டுடியோ.காம் மேலும் பெருமிதம் கொள்கிறது. இந்த விருது அவரை கௌரவிப்பதற்காக அல்ல. இந்த விருதை பெறுவதன் மூலம் அவர்தான் தமிழ் ஸ்டுடியோவை கவுரவிக்கிறார். இதுமட்டுமின்றி இனி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியை உலகத் தமிழ் குறும்பட தினமாக கொண்டாட தமிழ் ஸ்டுடியோ.காம் முடிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று (லெனின் அவர்களின் பிறந்த தினத்தில்) அந்த ஆண்டு குறும்படத் துறையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு லெனின் விருது வழங்கப்படும். இந்த விருது, பட்டயத்துடன் 10,000 ரூபாய் ரொக்கப் பரிசை உள்ளடக்கியது. மேலும் விருது பெரும் ஆளுமை குறித்த ஆவணப்படமும், அவர் குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகமும் வெளியிடப்படும். இது அவர் பற்றி உலகம் முழுவதும் உள்ளவர்கள் அறிந்து கொள்ள உதவும்.

மேலும் இந்த விருதைப் பெற யாரும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. தகுதியுடையவர்கள் எங்கிருந்தாலும் விருது அவர்களை வந்தடையும். இதற்காக தமிழ் ஸ்டுடியோ.காம் ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பரிந்துரைக்கும் நபர்களை இறுதியாக மூன்று பேர்கள் அடங்கிய நடுவர்கள் குழு தீர்மானிக்கும். இந்த நடுவர்கள் குழுவில், குறும்படம், இலக்கியம் சார்ந்த இருவரும், அனுபவம் வாய்ந்த ஒருவரும் இடம்பெற்றிருப்பர்.


அன்புடன்
அருண் & குணா

தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268

Series Navigation

அருண் & குணா

அருண் & குணா