ஹாஜி.E.குல்முஹம்மது – வாழ்நாள் சாதனையாளர் விருது

This entry is part of 32 in the series 20100711_Issue

இந்து சமய இலக்கிய பேரவை


புதுச்சேரி, காரைக்கால் .04.07.10. ஞாயிறுக்கிழமை
இசைத்துறையில் மிளிர்ந்து, சிறந்திருக்கக்கூடிய இசைவாணர்கள் பலர் உள்ளனர். சமுதாய கருத்துக்களை பாடக்கூடியவர்கள் ,திரைஇசை பாடல்களை பாடுவோர். வழிபாட்டு பாடல் என இவர்களில் வகைபடுகின்றனர் .

இஸ்லாமிய பாடல்களை பாடுவதுடன் இனிய கருதுக்களை கொண்ட தரமான பாடல்களை பாடுவதுடன் மேடைதோறும் இசைக்கும் இசைவாணர்கள் வரிசையில் காரைக்காலில் புகழ் பெற்று விளங்கும் “இன்னிசைச்சுடர்”, “கலைரத்னா”, ‘”தமிழ்மாமணி”’ “கலைமாமணி”, ஹாஜி.E.குல்முஹம்மது கடந்த 43 வருங்களாக இந்த இசைத்துறையில் புகழ் ஈட்டி உள்ளார்.
சிங்கப்பூர், மலேசியா, சௌதி அரேபியா, இலங்கை,மற்றும் பல நாடுகளுக்கு சென்று இசை தொண்டு செய்து வரும், ஹாஜி.E.குல்முஹம்மது, பல்வேறு நாடுகளில் பாடி புகழ் பெற்றுள்ளார். எனவே இவரது இசை தொண்டினை பாரட்டி இந்து சமய இலக்கிய பேரவை சார்பாக, காரைக்கால் அம்மையார் கலையரங்கில் 25 ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது .ஹாஜி.E.குல்முஹம்மது அவர்களுக்கு, திருநள்ளார் தர்பார்னேஸ்வரர் கோயில் நிர்வாக அரசு சிறப்பு அதிகாரி. R.பன்னீர் செல்வம் வழங்கி கௌரவித்தார்
இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொன்டனர்

Series Navigation