‘திண்ணை’யில், திரு. ச. இராமசாமியாரின் சமசுகிருதம் பற்றிய மடல்

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue


இவ்வார ‘திண்ணை’யில், திரு. ச. இராமசாமியாரின் சமசுகிருதம் பற்றிய மடல் கண்டேன்.

அன்று அம்மொழி பார்ப்பனரல்லாதாரும் கற்று உயர்னிலையில் இருந்தது என்றவர், இன்று அதன் நிலையென்ன என்று தேட மறந்துவிட்டார். இன்று அது பார்ப்பனரைத்தவிர பிறரால் சீண்டப்ப்டாததாகவே உள்ளது என்பதை ம்றுக்க முடியுமா?

பேச்சுமொழி, இலக்கிய மொழி – இரண்டுமே எம்மொழியிலும் எப்போதும் உள்ளவை. திரு, ச.. இராம்சாமியார் சுட்டிக்காட்டியதைப்போல். தமிழிலும் உண்டு. அதை என்றோ, இராபர்ட்டு கால்டுவெல்லு (Rev. Robert Caldwell) தன், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of Dravidian Languages) என்ற பனுவலில் சொல்லிவிட்டர்ர்: அஃதாவது, பண்டைக்காலம் தொட்டு, தமிழர்கள், தமிழை – பேச்சுமொழி, இலக்கியமொழி என இருபிரிவாகவே வழக்கில் வைத்தனர். சங்கத்தமிழை, பாமரததமிழர் பேசவில்லை. அது, புலவர் மொழியாகத்தான் இருந்தது. எனினும், அதுவும் பேச்சுத்தமிழும் தொடர்ந்தன என்றார் அவர். எனவே, இன்றளவும் தமிழ் வாழும் மொழியாக நின்று நில்வுகிறது.

வடமொழியென அழைக்கப்படும் சமசுகிருதத்தின் இன்றைய நிலையென்ன? அதுவும், ஒருகாலத்தில் இவ்விரு பிரிவுகளாக நிலவி வந்தது எனினும், ஒரு கால கட்டத்தில், பார்ப்பனர்களால், ‘தேவபாசை’ எனக் கட்டமிட்டு, பார்ப்பன்ர்களுக்காக், பார்ப்பனர்களாலே, வாசிக்கப்பட்டும் கேட்கப்பட்டும் , பூசிக்கப்பட்டும் – இலக்கியமொழியாகத்தான்! – அதுவும் கூட பக்தியிலக்கியம் மட்டுமே – மாற்றமடைந்தது. பார்ப்பனரல்லாத பொதுமக்கள், அம்மொழி பேச்சுவழக்கொழிந்ததால், அதை விலக்கி விட்டு பிறமொழிகளான, இந்தி போன்றவற்றை எடுத்துக்கொண்டனர். பார்ப்பனர்கள் சமூகத்தில் மற்ற மக்களிடமிருந்து, தீட்டு, எனப்பிரிந்து வாழ்ந்தமையால், இம்மொழியின் இற்க்கத்துக்கு பெரும் உதவி புரிந்தனர் எனலாம்.

இன்று தமிழகத்தில், வடமொழி ஒரு பார்ப்பனர் போற்றும் மொழி மட்டுமே. அவர்களும்கூட இம்மொழியைக் கற்பது குறைந்துவிட்டது என்பதை திரு. ச..இராம்சாமியார் மறுக்கவிய்லாது. ஏனெனின், அது பச்சை உண்மையாகும்.

அம்மொழியின் வளத்தையும், சிற்ப்பயும் பற்றி எவரும் இங்கு பேசவில்லை. எம்மொழியும் வளமிக்கதே. இம்மொழி மட்டுமல்ல. வழக்கொழிந்த மொழியா? இல்லையா? எனபதே கேள்வி.

மக்களால் நிராகரிக்கப்பட்ட மொழியை ‘செத்தமொழி’ (Dead Language) என்றே மொழிவியலாளர்கள் (Linguists) அழைப்பர் சமசுகிருதம் அவ்வகை மொழியே.

இவண்
வெண் தாடி வேந்தர்
karikkulam@gmail.com

Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்