ஏலாதி இலக்கிய விருது 2009 முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

ஹெச்.ஜி.ரசூல்


முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.

ஏலாதி இலக்கிய விருதுவிழங்கும் விழா தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் தக்கலையின் சார்பில் ஆகஸ்ட்15 சனி மாலை தேசிய பல்துறைஆய்வரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் தலைமைதாங்கினார்.பேராசிரியர் நட.சிவகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.

2007 – 2009 ஆண்டு காலகட்டத்தில் வெளிவந்த சிறந்த திறனாய்வு நூல்களுக்கான போட்டியில் முனைவர் பொ.நா.கமலா எழுதி காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியர் முதல் தெரிதா வரை திறனாய்வுநூல் தேர்வு செய்யப்பட்டது.

மற்றொரு நூலாக சென்னையைச் சேர்ந்த திரைப்பட விமர்சகர் விஸ்வாமித்திரன் எழுதிய சிறுவர் சினிமா சிறந்த உலகத் திரைப் படங்கள் திறனாய்வு நூலும் தேர்வு செய்யப்பட்டது.

ஏலாதி இலக்கியவிருது ஹசன்கதீஜா நினைவுப் பரிசுக்கான ரூ2000 / க்கான பணமுடிப்பும் ஞாபகசிற்பமும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முனைவர் பொ.நா.கமலாவிற்கு டாக்டர் பிளாட்பின் முன்னிலையில் பேரா.அய்யப்பன் மற்றும் கவிஞர் ஜி.எஸ்.தயாளன் ஆகியோர் வழங்கினர்.

முனைவர் பொ.நா.கமலா விருதுநகரைச் சேர்ந்தவர். தமிழ்துறைப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.எண்பதுக்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் ஆய்வுகள் நிகழ்த்தியுள்ள இவர் மலேஷியா,தாய்லாந்து. சிங்கப்பூர் என உலக அளவில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கட்டுரை வாசித்துள்ளார். புற்றுநோயாளிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பொதுத் தொண்டைச் செய்துவருகிறார்.

ஏலாதிவிருது பெற்ற தொல்காப்பியர்முதல் தெரிதாவரை நூலில் அறுபது ஆய்வுக்கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன்.தொல்காப்பியம்,சங்க இலக்கியம்,வள்ளுவம்,காப்பியம்,நவீனகால நாவல், புனைகதை,கவிதை படைப்பிலக்கியங்களை பின் அமைப்பியல் ஆய்வியல் முறையில் திறனாய்வு செய்துள்ளார்.

ஏலாதி விருது அவுக்காரும்மாள் நினைவுப்பரிசை பெற்ற மற்றொருநூல் திரைப்பட விமர்சகர் விஸ்வாமித்திரனின் சிறுவர்சினிமா சிறந்த உலகத் திரைப்படங்கள் இரு தொகுதிகள் வம்சி வெளியீடாக வந்துள்ளன.கியூப அரசியல் திரைப்பட இயக்குநர் தாமஸ் கிதாரெஸ் அலியா குறித்த இவரது தொகுப்பு நூல் கியூபசினிமா ஒரு கலைஞனின் புரட்சித்தடம்.குருதியில் படிந்த மானுடம் சமகால அரசியல் திரைப்படங்கள் என்ற மற்றொரு நூலும் வெளிவந்துள்ளது.இவர் இலங்கை திரைப்பட இயக்குநர் பிரசன்னா விதான கேவினோடு இணைந்து பணியாற்றிய பிளவேர்ஸ் ஆப் த ஸ்கை 2008 ல் கோவா திரைப்பட விழாவில் வெள்ளிமயில் விருதைப் பெற்றது.ஏலாதி விருதுக் குழுவினர் ஹெச்.ஜி.ரசூல்.ஜி.எஸ் தயாளன்,நட.சிவகுமார், எச்.முஜிபுர் ரகுமான் மற்றும் தக்கலை கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் குறும்பட இயக்குநர் எஸ்.ஜே.சிவசங்கர் நன்றி கூறினார்.

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்