உலகமயமாதல் சூழ்நிலையில் இந்திய/தமிழ் கலை(!) படைப்பாளிகளின் கவனத்திற்கு சில!

This entry is part [part not set] of 33 in the series 20051125_Issue

செந்தில்


குஷ்பு விவகாரத்தை தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக தனிமனித உரிமை, பேச்சுரிமை என்று நிறைய பேசப்படுகிறது

தமிழ்நாட்டு பத்திரிக்கையாளர்களாலும், கலை விற்பன்னர்களாலும் தமிழ் நாட்டில். இந்த துறைகளை சேர்ந்தவர்களின்

கவனத்திற்கு என் தனிப்பட்ட கருத்துகள். மாதவி ஸ்ரீப்ரியா சினிமா உலக சீரழிவுகள் பற்றி சில கட்டுரைகளை திண்ணையில்

எழுதியுள்ளதை தொடர்ந்து….

1) பெண்களுக்கு 18 வயதிற்கு மேல் என்றும், ஆணிற்கு 21 வயதிற்கு பிறகுதான் திருமணமே செய்ய வேண்டும் என இந்திய சட்டம் ஏற்கனவே இருக்கிறது; ஆனால், அதற்கு முன்னாலேயே இளம் வயது ஆணும் பென்ணும் சேர்ந்து (ஆடி, பாடினால் கூட பரவாயில்லை ஐயா!) உடலுறவு கொள்வது போல் காட்சிகளை சினிமாவிலும், தொலைகாட்சியிலும் காட்டலாம்; இந்த மாதிரி ஆடை அவிழ்ப்பு அசிங்க காட்சிகளில் நடிப்பவர்கள் 16 வயதிற்கும் குறைவானவர்களாக இருப்பினும் பரவாயில்லை. இது ‘வியாபார உரிமை; தனிமனித உரிமை ‘.

ஆனால் தமிழர்கள் இந்த மாதிரி கலை(!) படைப்புகளை கண்டித்து, இது சட்டவிரோதம் என்றும், ஒழுக்ககேட்டை வளர்க்கும் என்றும், இந்த மாதிரி காட்சியமைப்புகள், உரிய தணிக்கை முத்திரைகளைப் (censor certification) பெற்றிருக்க வேண்டும் என

தமிழர்கள் கேட்டால், அது பாசிசம் ?!

2) 18 வயதிற்கும் குறைவான பெண்களையும், ஆண்களையும் மது அருந்தும் இடங்களிலும், நடன கூடங்களிலும் அனுமதிக்கலாம்; அதன் மூலம் செல்வத்தை குவிக்கலாம்; அது வியாபார உரிமை; தனிமனித உரிமை; பத்திரிக்கைகளில் 18 வயதிற்கும் குறைவான பெண்களின் அறைகுறை, நிர்வாண படங்களை பிரசுரிக்கலாம்; அது வியாபார உரிமை; தனிமனித உரிமை;

3) இப்பொழுது ஏதோ புதிதாக தொடங்கபட்டிருப்பதாக தெரியவரும் (call girl networks/telephone/video entertainment townships/parlours, Are they legal in India ?) தொழில்(!) நுட்ப பூங்காக்களில் 18 வயதிற்கும் குறைவான பெண்களையும், ஆண்களையும் வேலைக்கு சேர்க்கலாம்; அது வியாபார உரிமை; தனிமனித உரிமை;

இது தவறு, இளம் குழந்தைகளின் மனதை பாதிக்கும் என தமிழர்கள் சுட்டிக்காட்டினால், அது பாசிசம் ?!

(இது மாதிரி தொழில்களில் (தனிமனித உரிமை, வியாபார உரிமை என்ற பெயரில் எதுவும் செய்யலாம் என்ற நினைப்பில்) ஈடுபட்டு வரும் பத்திரிக்கைகள், சினிமா தயாரிப்பாளர்கள், தொலைகாட்சி நிலையங்கள், audio/video cassette தயாரிப்பாளர்கள்/வினியோகஸ்தர்கள், பொழுது போக்கு நிலையங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்; இப்பொழுது உங்கள் படைப்புகள் இந்திய எல்லைகள் தாண்டி பல நாடுகளூக்குள் சென்றடைகின்றன/விற்கபடுகின்றன. உங்கள் பொருள்கள் விற்கபடும் நாடுகளின் சட்ட

திட்டங்களை, தணிக்கை விதிகளை (censorship rules), நடிகர்கள்/பார்வையாளர்களின் வயது வரம்பு விதிகளை, இனிமேல் நீங்கள் கவனமாக கடைப்பிடிக்க வேண்டும்; நடிகைகளின் தொப்புள்களில் நாயகர்கள் பம்பரங்கள் விடும் படங்களையெல்லாம் அமெரிக்க சென்சார் அதிகார்கள் பார்த்தால், என்ன rating கொடுப்பார்கள் என தெரியவில்லை;

உதாரணமாக, தமிழர்கள்(இந்தியர்கள்) விரும்பி படிக்கும் ஒரு வாரப்பத்திரிக்கையிலோ, விரும்பி பார்க்கும் சினிமாவிலோ, இனைய செய்திதாளிலோ வெளிவந்த ஒரு அரைநிர்வாண படத்தையோ, நடனத்தையோ, அசிங்க ஆட்டத்தையோ, கோர விபத்து நிகழ்ச்சியையோ, ஒரு அமெரிக்க 4 வயது குழந்தை பார்க்க நேர்ந்து, அதனால் பாதிப்புகள் ஏற்பட்டால் அமெரிக்க கோர்ட்களில் உங்களை ஒரு வழி பண்ணிவிட வாய்ப்பிருக்கிறது.

—-

msenthi@yahoo.com

Series Navigation

செந்தில்

செந்தில்