கடிதம் பிப்ரவரி 11,2005

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

அருளடியான்


தமிழ் நாட்டைக் காப்பாற்றிய மூன்று பேராக சோ, ஜெயகாந்தன்,கண்ணதாசன் ஆகியாரை சின்னக் கருப்பன் குறிப்பிடுவது உண்மையாகவா அல்லது நகைச்சுவைக்காகவா என்று எனக்குப் புரியவில்லை. சோ இந்திய தேசிய ஒற்றுமைக்காக, காவிரியில் தமிழ் நாட்டுக்கு உள்ள உரிமையை வலியுறுத்துவதையே தேசவிரோதமாக சித்தரிப்பவர். ஜெயகாந்தனின் கருத்துக்களைகேலி செய்து சமீபத்தில் இணையத்திலும், சிற்றிதழ்களிலும் பல ஆக்கங்களைபடித்தேன். கண்ணதாசனின் கவிதை வளத்தை ரசிப்பது வேறு.

தமிழ் நாட்டில் பெரும்பாலானவர்கள் கண்ணதாசனின் பாடல்களுக்கு ரசிகர்கள் தான். அவரது

அரசியல் கருத்துக்கள் முரண்பாடானவை. காமராஜர், இந்திரா, பெரியார், அண்ணா

போன்ற தலைவர்களை ஒரு நேரத்தில் அளவு கடந்து புகழ்வதும், மாற்றுக்

கட்சியில் சேரும் போது, மிகவும் கொச்சையாக விமர்சிப்பதும் தான் கண்ணதாசன்

பாணி. இதனால் தமிழ் நாட்டுக்கும், தமிழர்களுக்கும் என்ன நன்மை என்பதை

சின்னக் கருப்பன் விளக்க வேண்டும்.

திராவிட இயக்கம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல. எனக்குத் தெரிந்த அளவில் திராவிட இயக்கத்தில் சுயவிமர்சனம் செய்யும் அறிஞர்களும் உள்ளனர்.

ஜெயகாந்தன் திராவிட இயக்கத்தில் அறிஞர்கள் யாரும்உருவாகவில்லை எனக்

குறிப்பிடுகிறார். பெரியாரை விட ஒரு அறிஞரை தமிழ் நாட்டில் தேசிய

இயக்கத்தில் நமக்குத் தெரியவில்லை. அண்ணா, கலைஞர்,நாவலர், பேராசிரியர்,

ஆனைமுத்து, முரசொலி மாறன், கு. ச. ஆனந்தன், கி.வீரமணி, டாக்டர் மா. நன்னன் –

போன்றவர்களை அறிஞர்களாக ஏற்றுக் கொள்ள ஜெயகாந்தன்களும், சின்னக்

கருப்பன்களும் மறுக்கலாம்.

அதற்காக அவர்கள் அறிஞர்கள் அல்ல என்று ஆகிவிடாது. சின்னக் கருப்பன்

திராவிடஇயக்கத்துக்கு எதிரான அறிஞர்களை அடையாளம் காட்டும்

போது வலுவான எழுத்தாளர்களை பரிந்துரைக்குமாறு அன்புடன்

வேண்டுகிறேன். எனக்குத் தெரிந்தவரை, குணா, ரவிக்குமார், கோ. கேசவன்

போன்றவர்களைக் குறிப்பிடலாம்.

இவர்களிடம் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது. அதற்காக அவர்களது திறமையை மறுக்க

முடியாது. சின்னக் கருப்பனே முயன்றால் கூட ஒரு சிறந்த ஆய்வாளராக

உருவாகலாம். ஆனால், அவர் அடையாளம் காட்டும் மூன்றுபேரும், அரசியல்

கட்சிகளின் நாலாந்தர பேச்சாளர்களின் தகுதிக்கு மேல் பெற

மாட்டார்கள்.


Series Navigation

அருளடியான்

அருளடியான்