கடிதம் அக்டோபர் 21,2004 – அன்பிற்குரிய மெமிட்டிக் க்ளோன்களுக்கு

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

அரவிந்தன் நீலகண்டன்


அன்பிற்குரிய மெமிட்டிக் க்ளோன்களுக்கு

இப்னு மற்றும் தமாம் போன்ற மெமிட்டிக் க்ளோன்களில் எவருக்கு பதில் சொன்னாலும் மற்றெவருக்கும் பொருந்தும் என்றாலும், தவறு தவறுதான். எனவே எந்த சால்ஜாப்பும் இல்லாமல் திருவாளர் இப்னு பஷீரிடம் சிறியதாக ஏன் பெரிய அளவிலேயே வருத்தம் தெரிவித்துவிடலாம். ஆனால் சால்ஜாப்பு திலகம் தமாமுக்கே வரலாம். பிரச்சார குப்பையை மறுசுழற்சி செய்யும் திலகமே உம்முடைய வார்த்தைகளை மீள்-நோக்குகிறீரா ? குருஜி கோல்வல்கர் கூறிய நிகழ்ச்சியை கூறிவிட்டு ‘இதுதான் இந்து தர்மம் ‘ என்று விஷமமாக உமது கை சரக்கை நுழைத்தது போதாதென்று இப்போதுபது வேறு மேற்கோளிலிருந்து கலந்துவிட்டது என்கிற தைரியம் உமக்கே வரும். ஆனால் இந்த கலப்பட மேற்கோளைக் குறித்து நீரே என்ன கூறினீர் என்பதை பார்ப்போமா ? உமது வார்த்தைகளில் ‘கல்வியறிவில் குறைந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. தன்னைவிட குறைவான பொறுப்பில் பணிசெய்பவராக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் பிராமணன் என்ற ஒரே காரணத்திற்காகவே அவர் வணங்குவதற்கான தகுதியுடையவர் என்கிறார் கோல்வால்கர். அதுமட்டுமல்லாமல் அதுதான் இந்து தர்மம் என்கிறார். ‘ ஆக ‘அதுதான் இந்துதர்மம் ‘ என்பது இந்த மேற்கோளுடனான வாக்கியம் என்பதாக நீரே முதலில் மேற்கோளை பக்கம் சகிதம் எழுதிவிட்டு பிறகு அதற்கு விளக்க பதவுரை வேறு அளித்து விட்டு பின்னர் ‘ஹி ஹி கலப்படம் செய்துவிட்டேன் ‘ என்று கூறுவது என்ன வித நேர்மை என்பதை மெமெடிக் க்ளோன்கள் மற்றும் இன்னபிற வகாபிய க்ளவுன்களுக்கும் விட்டுவிடுகிறேன். உங்கள் உன்னத ஹீரோ யாராவது எங்காவது ‘புனித மாதங்கள் முடிந்ததும் சிலை வணக்கம் செய்பவர்களை கண்ட இடத்தில் வெட்டிக்கொல்லுங்கள் ‘ என்று சொன்னதையும் வேறெங்காவது ‘இதுதான் இஸ்லாம் ‘ என்று கூறுவதையும் முடிச்சு போட்டு ஒரு மேற்கோளை நான் மேற்படி உக்தியில் உற்பத்தி பண்ணியிருந்தால் இந்நேரம் எங்கள் வீட்டு முற்றத்தில் பைப் வெடிகுண்டுகள் வெடித்து ‘இஸ்லாம் அமைதியின் மார்க்கம் ‘ என்கிற உண்மையை எனக்கு தெளிவுபடுத்தியிருக்கும். ஆனால் பாருங்கள் நீங்கள் அப்படியெல்லாம் செய்யலாம் ஏனென்றால் சிலை வணக்கம் செய்யும் காட்டுமிராண்டிகளான எங்களுடைய நாட்டில் எந்த குகையிலும் காஃபீர்களின் வீடுகளில் பைப் வெடிகுண்டுகள் எறிவதன் மூலம் வற்றாத மது ஓடும் மறுமைக்கு செல்லலாம் என்றெல்லாம் இறைவாக்குகள் இறங்கவில்லை.

சரி விஷயத்துக்கு வருவோமா. அரவிந்தன் நீலகண்டன் என்ன புளுகுகிறான் குருஜி கோல்வல்கர் எந்த இடத்திலும் மனுஸ்மிருதியை நியாயப்படுத்தவில்லை. சாதிய ஏற்றதாழ்வுகளை கண்டித்துள்ளார் என்று. ஆனால் மகா நேர்மையாளரும் எவ்வித மோசடி வேலையை செய்யாதவருமான தமாம் என்ன சொல்கிறார், குருஜி கோல்வல்கர் முழுக்க முழுக்க மனு ஸ்மிருதியை ஆதரித்துதான் Bunch of Thoughts ஐ எழுதியுள்ளார் என்று. இனி அரவிந்தன் நீலகண்டன் தன் புளுகுக்கு Bunch of Thoughts இலிருந்து எப்படியெல்லாம் பொய்யாக மேற்கோள்களை காட்டுகிறான் என்பதையும், தமாம் அவர்கள் எப்படியெல்லாம் படு நேர்மையாக வாதகதி பிசகாமல் தம் உண்மையை நிலை நிறுத்துகிறார் என்பதையும் பார்ப்போம். (என்ன பீர் முகமது சாகிப், இந்த அளவு நாகரிகம் போதுமா – வழக்கமான நாகரிக அளவுகோல் இதுதானே : ஈமானுடன் கப்ஸா விடுகிறவர் நேர்மையாளர் அதை கண்டிக்கிற காஃபிர் மொள்ளைமாறி. முகமதலி ‘ஒரு ஒழுக்கங்கெட்ட முஸ்லீம் காந்தியை விட உயர்ந்தவன் தான் ‘ என்று தம் மதநம்பிக்கையை கூறினாராம். மகாத்மாவுக்கே அந்த அளவு நாகரிகம்தான் ‘மார்க்க ‘ அளவுகோலில் கிடைக்கும் என்றால் ‘அவர் காலணியை சுத்தம் செய்யவும் அருகதை அற்ற ‘ இந்த அரவிந்தனுக்கு எந்த அளவு கிடைக்கும் என்பதை நீங்கள் சொல்லியா தெரியவேண்டும்! சட் எங்கெங்கோ போய்விட்டோம் மீண்டும் விஷயத்துக்கு வருவோம்)

1. மேற்கோளில் கூறப்பட்ட நிகழ்ச்சியை ஹிந்து ராஷ்டிரத்தின் இலக்கணமாக குருஜி முன்வைப்பதாக தமாம் கூறுகிறார். அவரது வார்த்தைகளில் ‘கோல்வாக்கர் சொல்லும் இந்து ராஷ்டிரத்தின் இலக்கணம் என்ன தெரியுமா ? இதோ படியுங்கள். ‘ இது உண்மையா ? ஹிந்து ராஷ்டிரத்தின் இலக்கணமாக குருஜி எங்காவது இதைக் கூறியுள்ளாரா ? இல்லை. ஏன் ? மேற்படி மேற்கோள் ஒரு வெள்ளைக்காரன் பதிவு செய்ததாக லாலா ஹர்தயாள் கூறியதாக குருஜி கூறுகிறார். எதற்கு ? சமுதாயத்தில் அந்தணரின் நிலையில் தான் ஏற ஆசைப்பட்டு – அந்தணரின் நிலை சமுதாயத்தில் எவ்வாறு இருந்தது என்பதை கூறுகிறான். அதாவது ஆங்கிலேயன் தனக்கு எவ்வித மரியாதை கிடைக்கவேண்டுமென ஆசைப்பட்டு பிரித்தாளும் சூழ்ச்சிகளை செய்தான் என்பதை அந்த மேற்கோள் விளக்குகிறது. அந்த மேற்கோளுக்கு நூலில் கொடுக்கப்பட்ட தலைப்பே ‘ ‘The British Game ‘ என்பது ‘Description of Hindu Rashtra ‘ என்பதல்ல. மேலும் அந்த மேற்கோள் பின்வருமாறு தொடங்குகிறது ‘There is an incident narrated by Lala Hardayal, one of our great revolutionaries…. ‘ ஆக தலையையும் காலையும் வெட்டிவிட்டு ஒரு மேற்கோளை எடுத்து அதில் கைச்சரக்கையும் சேர்த்து தந்துள்ளார் தமாம். விஷயம் என்னவென்றால் தமாமுக்கே அது கைச்சரக்கு என்று தெரியாது என்பதுதான். சிலவருடங்களுக்கு முன்பு நான் படித்த ஒரு ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு திக பிரசுரத்திலும் இதே மேற்கோளை இதே திருகல் வேலையுடன் இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அந்த பிரசுரத்தை நான் பாதுகாக்கவில்லை. இல்லையென்றால் அதநை நேரடியாக மேற்கோள் காட்டியிருக்கலாம். எனவே for the time being, தமாம் இரு மேற்கோள்களிலிருந்து ஒரு கலப்பட மேற்கோளை உற்பத்தி செய்து நமக்கெல்லாம் அளித்துள்ளார் என்று அந்த மோசடித்தனத்துக்கு – ஐயோ தப்பா போச்சுது- அந்த நேர்மையான புனித கைங்கர்யத்துக்கு தமாம் மட்டுமே மொத்த பொறுப்பாளி என்று ஒத்துக்கொள்வோம்.

2. தமாம் சிரமப்பட்டு கற்பனை வளத்துடன் உருவாக்கிய ஒவ்வொரு மேற்கோள் மற்றும் அதற்கு அவருக்கே உரிய பாணியில் அவர் அளித்துள்ள பதவுரைகள் ஆகியவற்றை ஆராய்ந்து கொண்டு திண்ணையின் ஆஸ்தான சாக்கடை இன்ஸ்பெக்டராகும் ஆசை எனக்கில்லை. ஆனால் அதைத்தான் செய்தாகவேண்டும் என சகோதரர் பீர் முகமது ஆசைப்பட்டால் என்ன செய்யமுடியும் ? எனவே ஓரளவுக்காவது சகோதரரின் ஆசையை தணிப்பதில் தவறில்லைதான்.

இது மகா நேர்மையாளர் தமாம் அவர்கள் குருஜியின் மேற்கோளாக கூறுவது

“வர்ண வியாவஸ்தா என்று சொல்வதையே – நமது மக்கள் இழிவு என்று நினைக்கிறார்கள். அது ஒரு சமூக அமைப்பாகும். சமூக ஏற்றத்தாழ்வு அல்ல. பிற்காலத்தில்தான் இது திரித்துக் கூறப்பட்டது. பிரித்தாளும் சூழ்நிலையை விரும்பிய பிரிட்டிஷார்தான் இப்படிப் பிரச்சாரம் செய்தனர். நான்கு சமூகப் பிரிவுகளும் – அவரவர்கள் சக்திக்கேற்ற கடமைகளைச் செய்வதன் மூலம் கடவுளை வணங்கலாம் என்பது தான் இதன் தத்துவம். ‘பிராமணர்கள் ‘ தங்கள் அறிவுத்திறமையால் உயர்ந்தவர்கள். ஷத்திரியர்கள் எதிரிகளை அழிப்பதில் வல்லவர்கள். வாணிபம் விவசாயம் செய்பவர்கள் வைசியர்கள். தங்கள் தொழிலைச் செய்வதன் மூலம் சமூகத்திற்கு சேவை செய்பவர்கள் சூத்திரர்கள். இந்த நான்கு பிரிவுகளிலும் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. இது ஒரு சமூக அமைப்பு. இதைப் புரிந்து கொள்ளாமல் இந்த அமைப்பு முறைதான் வீழ்ச்சிக்கே காரணம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்”என்கிறார் கோல்வாக்கர். (Bunch of Thoughts 8-வது அத்தியாயம் பக் – 107-108) நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். மேற்கோளின் இடையே முப்புள்ளிகள் இல்லை. இதுதான் முழுமேற்கோளும் என்பதாக அமைந்துள்ளது. இதன்படி ‘பிற்காலத்தில்தான் இது திரித்துக் கூறப்பட்டது. பிரித்தாளும் சூழ்நிலையை விரும்பிய பிரிட்டிஷார்தான் இப்படிப் பிரச்சாரம் செய்தனர். ‘ என்று முழுப்பழியையும் பிரிட்டிஷார் மீது குருஜி போடுவதாக கூறுகிறார்.

இனி மேற்கோள்: ‘Our people have come to feel that the mere mention of Varna-vyavastha is something derogatory. They often mistake the social order implied in it for social discrimination. The feeling of inequality, of high and low, which has crept into the Varna system, is comparatively of recent origin. The perversion was given a further fillip by the scheming Britisher in line with his ‘divide and rule ‘ policy. ‘ ‘ஏற்றதாழ்வு மனப்பான்மை ஒருவர் தாழ்வு மற்றவர் உயர்வு என்பது வர்ண அமைப்பினுள் சமீபகாலத்தில் புகுந்து விட்டது. இந்த வக்கிரம் பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியில் மேலும் உத்வேகம் ஊட்டப்பட்டது. ‘ இவ்வரிகள் மிகவும் திறமையாக மாற்றப்பட்டுள்ளன. பிரிட்டிஷார்தான் இதைச் செய்தார்கள் என்று குருஜி கூறவில்லை. வர்ண அமைப்பில் ஏற்பட்ட வக்கிரத்தை பிரிட்டிஷார் பயன்படுத்திக்கொண்டனர் என்றே கூறியுள்ளார். ஆனால் தமாம் குருஜியின் வரிகளை வேண்டுமென்றே திரித்து பொருளை மாற்றுகிறார். அதே மேற்கோளில் மேற்சொன்ன வரிகளுக்கு அடுத்து குருஜி மேலும் கூறுகிறார், ‘But in its original form, the distinctions in that social order did not imply any discrimination such as big and small, high and low, among its constituents. On the other hand, the Gita tells us that the individual who does his assigned duties in life in a spirit of selfless service only worships God through such performance. ‘ இப்போது இரு நூல்கள் உள்ளன – ஒன்று மனு ஸ்மிருதி : பிறப்படிப்படையிலான வர்ணாஸ்ரம தர்மத்தை குறித்தது மற்றொன்று பகவத் கீதை – வெளிப்படையாகவே பிறப்படிப்படையிலான வர்ண அமைப்பினை மறுதலித்து குண-கர்ம அடிப்படையிலான வர்ண அமைப்பை பேசுவது. குருஜி கீதையினை மேற்கோள் காட்டுகிறார். கீதை கூறுவதைப் போல ஒருவருக்கு கிடைக்கும் பணி மூலம் அவர் இறை வழிபாடு செய்கிறார் என்கிறார். செய்தொழில் வேற்றுமைகளால் சிறப்பொவ்வா என்கிறார். தமாமின் வரிகளை குருஜியுடன் மேற்கோளுடன் ஒப்பிட்டால் தமாம் எப்படியெல்லாம் வெட்டி ‘ஒருவழி ‘ செய்திருக்கிறார் என்பது தெரியும். மிகத்தெளிவாக குருஜி சாதியக்கொடுமைகளை வர்ண அமைப்புக்குள் நுழைந்த வக்கிரம் எனக் கூறியபின்னரும் அந்த வரிகளை வெட்டி எறிந்து விட்டு திருவாளர். நேர்மை அந்த மேற்கோளுக்கு கொடுக்கிற வியாக்கியானத்தை பாருங்கள்: ‘சமுதாயத்தில் அண்ணன் தம்பிகளாய் ஒற்றுமையாக இருந்தவர்களை பிரித்துஎடுத்து ஒருவனை ஒருவன் தொடக்கூடாது. தெருவில் நடமாடக்கூடாது. வேதநூல்களை படிக்கக்கூடாது. அதை கேட்கக்கூடாது. அப்படி கேட்பவர்களின் காதுகளில் ஈயத்தை ஊற்ற வேண்டும் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கக் கூடிய மனுஸ்மிருதியை பற்றி இவர்கள் கூறும்போது அது கடவுளை வணங்குவதற்கு என்று சொல்வது எவ்வளவு பெரிய துரோகம். ‘ தமாம் தெளிவாக கூறுகிறார், ‘மனுஸ்மிருதியை பற்றி இவர்கள் கூறும்போது அது கடவுளை வணங்குவதற்கு என்று சொல்வது எவ்வளவு பெரிய துரோகம். ‘. ஆனால் அவர் கூறிய மேற்கோளில் கீதை அடிப்படையிலான வர்ண அமைப்பினைக் குறித்து குருஜி கூறிய மேற்கோளை வேண்டுமென்றே சிதைத்து தமாம் மோசடி வேலை செய்து தமது வியாக்கியானத்தில் மனுஸ்மிருதியை சேர்கிறார். இது மோசடி இல்லாமல் வேறென்ன ?

இறுதியாக ஒரு விஷயம். மனுஸ்மிருதியை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றார்கள் என்கிற வதந்தி முழுப் பொய் என்பதுதான் உண்மை. எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லியில் எவரோ ஒருவர் கூறியதாக எத்தனை ஆண்டுகள் கழித்து வெளிவருகிறது என்பதுடன், ஆர்.எஸ்.எஸ் வெளிப்படையாகவே மனுவாதத்தை எதிர்ப்போம் என அதிகாரபூர்வமாக அறிவித்த அமைப்பு (பல மேடைகளில் இதனை ஆர்.எஸ்.எஸ் பல பத்தாண்டுகளாக -குருஜி காலத்திலிருந்தே-) அறிவித்துள்ளது என்பதையும் தமாம் புரிந்துகொள்ளட்டும்.

இப்போது தமாம் செய்யவேண்டிய வேலை எளிதானது. மேற்படி இரண்டு மேற்கோள்களிலும் தமாம் செய்ததற்கு அவர் விளக்கம் தரட்டும். அதன் பிறகு அவரது பிற புரட்டுகளை – அதாவது அவர் எடுத்துக்காட்டியுள்ள மேற்கோள்களின் இலட்சணத்தை அதில் அவர் செய்திருக்கும் நேர்மையான கைங்கரியங்களை பார்க்கலாம். அவ்வாறில்லாத பட்சத்தில் தமாம் போன்ற அப்பட்டமான நேர்மையற்ற மோசடி ஆசாமியுடன் விவாதிக்க ஏதுமில்லை. அதுவரை குறைந்த பட்ச நேர்மையுள்ளவர்களாக இருக்கும் பட்சத்தில் தமாமும், பண்பாடு குறித்து போதிக்க வரும் தமாமின் விசிலடிச்சான் குஞ்சுகளும் அமைதி காக்கலாம்.

பண்பான அன்புடன்

அரவிந்தன் நீலகண்டன்

infidel_hindu@rediffmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்