கடிதங்கள் ஜூலை 8, 2004

This entry is part of 41 in the series 20040708_Issue

நாகூர் ரூமி , சுகுமாரன்


இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

நாகூர் ரூமி

இஸ்லாத்தின் தோற்றம் என்ற ஆசாரகீனனின் தமிழாக்கக் கட்டுரை சில கேள்விகளை எழுப்புகிறது. அவை தாரிக் அலியின் முட்டாள்தனமான அந்த புத்தகத்தின் அத்தியாயம் பற்றியதல்ல.

இஸ்லாத்தின் தோற்றம் பற்றியும், அல்லாஹ் பற்றியும், முஹம்மது நபி (ஸல்) பற்றியும் முஸ்லிம்கள் நன்கறிவர். ஒரு தாரிக் அலியை விட அதிகமாகவும் தெளிவாகவும் இஸ்லாமிய வரலாறு பற்றிய அறிவு ஒரு பாமர முஸ்லிமுக்கு இருக்கிறது என்பதை கட்டுரை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. கட்டுரையில் உள்ள தவறுகளை — தாரிக் அலியுடையதுதான் — விளக்கிச் சொல்ல வேண்டுமானால் தனியாக புத்தகம் போடும் அளவுக்கு உள்ளது. எனவே தமிழாக்கப் பகுதியை ஒட்டுமொத்தமாக அலட்சியப் படுத்துவதே இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு உள்ள வழியாகும்.

இது போன்ற கட்டுரைகளை அறிவும் தெளிவும் உடையோர் பொருட்படுத்த மாட்டார்கள்.

தேடிப்பிடித்து தாரிக் அலியின் ஒரு பகுதியை தமிழாக்கம் செய்ய வேண்டிய அவசியம் இப்போது என்ன ஏற்பட்டது ஆசாரகீனனுக்கு ? ஒரு ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மை அதில் தெரிகிறது.

ruminagore@yahoo.com


Ref:

Mathalarayan ‘s column.M T Vasudevan nair had coauthored a novel with late N P Mohammed. It is ARABIPPONNU.

M T had not formed a ‘front ‘ with Uroob.

சுகுமாரன்

sukumaran@sunnetwork.org


Series Navigation