சம்பத் ரங்கநாதன்
எனது நண்பன் சோமு வீட்டுக்கு போயிருந்தேன்.அவன் மேட்டூருக்கு போயிருப்பதாக சொன்னார்கள்.சரி எதோ சுற்றுலா போயிருக்கிறான் என்று நினைத்துகொண்டிருந்தேன்.நாலைந்து நாள் கழித்து பார்த்தால் நொண்டி நொண்டி நடந்து வந்து கொண்டிருந்தான். ‘என்னடா ஆச்சு ‘ என்று கேட்டதற்கு மேட்டூரில் போலீஸ் லத்திசார்ஜ் செய்து காலில் அடித்தார்கள் என்றான்.
‘அட பாவமே போலீஸ் கிட்ட எதுக்குடா அடி வாங்கினாய் ? ‘ என்று கேட்டேன். ‘கோர்ட்டில் குஷ்பு மீது தக்காளி வீசியதற்கு தடியடி நடந்தது.அதில் அடிபட்டுவிட்டது ‘ என்றான்.
‘ஓ இதுதானா நீ மேட்டுருக்கு போன சுற்றுலா ‘ என்று நினைத்துகொண்டேன்.அதன் பிறகு ரொம்ப நேரம் சுகாசினியை திட்டிகொண்டிருந்தான்.என்னால் காதுகொடுத்து கேட்க முடியவில்லை.
‘அப்படி என்னடா தப்பா சொல்லிட்டாங்க ‘ என்றேன்.பிலுபிலு என்று பிடித்துகொண்டான். ‘திருமணத்துக்கு முன் பெண்கள் செக்ஸ் வைத்துகொள்வது தப்பில்லை,பெண்கள் பாருக்கு போவது தண்ணியடிப்பது தப்பில்லை என்கிறார்கள்,பாய் பிரண்ட்ஸ் வைத்துகொள்ள சொல்கிறார்கள்.இதைஎல்லாம் விட்டுவைப்பதா ‘ என்று பொங்கினான்.
‘சரி நீ தண்ணியிலேயே மூழ்கி கிடப்பவனாயிற்றே,பெண்கள் தண்ணி அடித்தால் என்ன தப்பு ‘ என்று கேட்டேன்.அவனுக்கு பிரமாதமான கோபம் வந்துவிட்டது. ‘ஆண் என்ன வேண்டுமானாலும் செய்வான்.பெண் செய்யகூடாது.அது தான் கலாச்சாரம்,தமிழ் பண்பாடு ‘ என்றான்.
‘சரியப்பா,ஆம்பளை தான் உசத்தி,பொம்பளைக பணிஞ்சு தான் போகணும் ‘ என்றேன்.அந்த பதில் அவனுக்கு பிடிக்கவில்லை போலிருந்தது. ‘அப்படி எல்லாம் இல்லை.ஆனா யோசிச்சுபார் நாம சைட் அடிக்கிறோம்,தம் அடிக்கிறோம்.சரி.அதே நம்ம அக்கா, தங்கச்சி தம் அடிச்சா,கல்யாணத்துக்கு முன்னாடி எவன்கூடவாவது போனா ஒத்துக்குவமா ? ‘ என்று கேட்டான்.
‘இல்லடா அது முடியாது ‘ என்று சொன்னேன்.அவனுக்கு ஒரே சந்தோஷமாகிவிட்டது. ‘அதுதாண்டா நானும் சொன்னேன்.ஆம்பளைக ஆயிரம் தப்பு பண்ணுவானுங்க,பொம்பளை போட்டி போட்டுட்டு அதே மாதிரி தப்பு பண்ணலாமா ‘ அப்படின்னு கேட்டான்.
எனக்கு இதில் எதோ தப்பு இருக்கற மாதிரி தெரிஞ்சது. ‘இல்லடா சோமு.அப்ப நீ என்ன தாண்டா சொல்லவர்ரே ?நீ பப்புக்கு,டிஸ்கொதேக்கு போவே ஆனா உன் தங்கச்சி போககூடாது அப்படிதானே ‘ என்று கேட்டேன். ‘ஆமாம் ‘ என்று சொன்னான்.
‘நீ மட்டும் ஏண்டா போறே ? ‘ என்றேன். ‘அது என் அடிப்படை சுதந்திரம் ‘ என்று சொன்னான். ‘உன் தங்கச்சிக்கு அந்த சுதந்திரம் இல்லையா ‘ என்று கேட்டதற்கு ‘இல்லை,தமிழ் கலாச்சாரம் ‘ என்றான்.திருவிளையாடல் சிவன் தருமி பாணியில் ஒரு கேள்வி பதில் அடுத்து ஆரம்பமானது.
‘சரி நீ கல்யாணத்துக்கு முன்னாடி உன்னோட ஆளோட ,பீச்சு,பப்புக்கு,டிஸ்கோக்கு போவியா ? ‘
‘பின்ன,இங்க எல்லாம் போகாமயா லவ்வு பண்ண முடியும் ? ‘
‘சந்தர்ப்பம் கிடைச்சா பலான விஷயம் கூட பண்ணுவே இல்லையா ? ‘
‘கண்டிப்பா..இது என்ன கேள்வி ?என்னோட ஆளுன்னு இல்லை.எந்த பொண்ணு கிடைச்சாலும் விடமாட்டேன். 12 வயசுல இருந்து எப்படா வாய்ப்பு கிடைக்கும் எவ மாட்டுவான்னு காத்துட்டிருக்கேன்..எது என்னடா கேள்வி ? ‘
‘சரி அப்ப உன்கூட பப்புக்கு,பீச்சுக்கு வர்ரத்துக்கு,பலான விஷயம் பண்றதுக்கு உன்னோட ஆளுக்கு சுதந்திரம் வேணுமா வேண்டாமா ? ‘
‘கண்டிப்பா வேணும். ‘
‘அவ அண்ணன்காரன் தடுத்தா என்ன பண்ணுவே ? ‘
‘கைய்ய உடைப்பேன்.நான் ஆம்பளை ‘
‘என்னடா அக்கிரமமா இருக்கு.கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தங்கச்சி எல்லாம் ஒழுக்கமா வீட்டுல இருக்கணும்னு சொன்னாய்.இப்ப என்னடான்னா மாத்தி பேசறாய் ? ‘
‘அது என் தங்கச்சிக்கு சொன்னது.என் தங்கச்சி ஒழுக்கமா இருக்கணும்.அவ்வளவுதான் ‘.
‘அப்ப அடுத்தவன் தங்கச்சி ஒழுக்கமா இருக்ககூடாதா ? ‘
‘அதெப்படி ?அப்புறம் யார் என்கூட மஜா பண்ணறது ?அதெல்லாம் ஒத்துக்க முடியாது.மத்த பொண்ணுக கட்டுபெட்டியா இருந்தா எனக்கு புடிக்காது ‘
‘குஷ்பு சொன்னதும் அதுதாண்டா. ‘எல்லா பொண்ணுங்களும் ஜாலியா இருக்கணும் ‘னு நீ சொல்றதை தானே அவங்களும் சொன்னாங்க.அப்புறம் எதுக்கு நீ தக்காளி வீசுன ? ‘
‘குஷ்பு அப்படி பேசிருக்க கூடாது.வேற மாதிரி பேசிருக்கணும் ‘
‘எப்படி பேசிருக்கணும் ? ‘
‘சோமு தங்கச்சி சிவகாமி மட்டும் தமிழ் பண்பாட்டோட இருக்கணும்.மத்த பொண்ணுங்க எல்லாம் அடிச்சு தூள் கிளப்பணும்னு ‘ பேசிருக்கணும்.
நான் மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன்.
—-
doctorsampath@gmail.com
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VII
- கண்ணாடிகள்
- கீதாஞ்சலி (50) எனது இறுதிக் கானம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- நீரில் மூழ்கிய நியூ ஆர்லியன்ஸ் நகரில் நேரும் நெடுநாட் துயர்கள் (3) (New Orleans Aftermath Blues After Katrina Attack)
- நாடோடி மனம் – பிரம்மராஜன்
- புனைவுகளும்,இறையியற் றன்மைகளும்!
- பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் – எமே செசேர் (Aime Cesaire)
- இலக்கியத்தில் பெண்கள்
- தமிழ்க் கவிதையில் பாலியல் இருப்பின் குரல்
- சான்றுகள்
- சோமு தங்கச்சியும் குஷ்புவும்
- வட்டமேசை
- மெல்பேர்ன் தமிழ்ச் சங்கம் – சர்வதேச தமிழ் குறும்பட விழா
- கடிதம் – சுந்தர ராமசாமி குறித்த ஜெயமோகனின் நூல் வெளியீடு
- உலகமயமாதல் சூழ்நிலையில் இந்திய/தமிழ் கலை(!) படைப்பாளிகளின் கவனத்திற்கு சில!
- பெரியபுராணம் – 66 – 31. அப்பூதி அடிகள் நாயனார் புராணம்
- கடிதம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-5)
- கர்த்தரிடம் நோவா செய்துகொண்ட விண்ணப்பம்
- பழமொழியும் பாட்டியும் அம்மாவும்
- இதே கார்த்திகை
- எச்சம்!
- வயதென்ன ?
- உருமாறும் உறவுகள்
- மழை
- கற்பும், கருத்துச்சுதந்திரமும்
- தியா: முஸ்லிம் மடோனா
- போட்லாட்ச் (பெரு விருந்து) (potlatch) (அந்தஸ்துக்கான போட்டி) – 2
- மனித வதை!
- நந்தன் இல்லாமல் நடராஜரா ?
- ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது வழங்கி இந்திய ஜனாதிபதி ஆற்றிய உரை
- அந்த மலர்க் கூட்டம்
- இது எங்கள் கதை