அரசியல் : ஒரு விளக்கம்

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue


ஒரே ஒரு ஊரில் ஒரு சின்னப்பையன் தன்னுடைய அப்பாவிடம் சென்று ‘அரசியல் என்றால் என்ன அப்பா ‘ என்று கேட்டான்.

அப்பா சொன்னார். ‘பையா. இப்படி உனக்கு விளக்க முயற்சிக்கிறேன். நான் தான் இந்த குடும்பத்துக்கு சம்பாதித்து, சாப்பாடு கொண்டுவருகிறவன். என்னை முதலாளி என்று கூப்பிடலாம். உன்னுடைய அம்மா, நான் கொண்டுவரும் பணத்தை நிர்வகிக்கிறாள். ஆகவே அவளை அரசாங்கம் என்று அழைக்கலாம். நாங்கள் உங்களைக் கவனித்துக்கொள்ள இருக்கிறோம். நீயும் உன் தம்பியும் நம் பொதுமக்கள். நம் வீட்டு வேலைக்காரியை உழைக்கும் வர்க்கம் என்று அழைக்கலாம். உன் தம்பியை எதிர்காலம் என்று கூப்பிடலாம். இப்படி நான் சொன்னதைப் பற்றி .. புரிகிறதா என்று யோசித்துப்பார் ‘ என்றார் அப்பா

பையன் அப்பா சொன்னதை பற்றி யோசித்துக்கொண்டே தூங்கப்போனான்.

இரவில் தம்பி அழும் குரல் கேட்டு எழுந்தான் பையன். தம்பி டவுசரில் மலங்கழித்து, புரண்டு அழுக்காகக் கிடந்தான். அப்பா அம்மாவின் அறைக்குச் சென்று எழுப்ப முயற்சி செய்தான். அம்மா ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். எழுப்ப வேண்டாம் என்று வேலைக்காரியின் அறையைத் தட்டினான். கதவு மூடியிருந்ததால், சாவி ஓட்டை வழியாகப் பார்த்தான். அப்பா வேலைக்காரியுடன் எசகு பிசகாகப் படுத்திருந்தார். எழுந்து திரும்பி தன் படுக்கைக் சென்று தூங்கினான்.

அடுத்த நாள் காலையில் அப்பாவைப் பார்த்து, ‘அப்பா எனக்கு அரசியல் புரிந்து விட்டது ‘ என்றான்

‘ அப்பா, ‘அடடே .. நல்ல பையன். உன்னுடைய வார்த்தைகளிலேயே உனக்கு அரசியல் பற்றி என்ன புரிந்தது என்று சொல் பார்க்கலாம் ‘ என்றார்.

பையன் சொன்னான். ‘முதலாளி உழைக்கும் வர்க்கத்தை பலாத்காரம் செய்து அனுபவத்துக் கொண்டிருக்கும்போது, அரசாங்கம் நன்றாகத் தூங்கிக்கொண்டிருக்கிறது. மக்கள் உதாசீனம் செய்யப்படுகிறார்கள். எதிர்காலம் ஒரே மலமாக இருக்கிறது.. இதுதான் அரசியல் ‘

***

Series Navigation

செய்தி

செய்தி