தின கப்ஸா – விட்டுக் கொடுத்தல் சிறப்பிதழ்

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

சொதப்பப்பா


***

தி இந்து நிறுவனமும் அதன் கட்டிடமும் அதன் சொத்துக்களும் பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்கப்படும் – மத்திய அரசு திடார் அறிவிப்பு.

If compromise is at the heart of good neighbourliness, India as the larger nation must be willing and ready to give more for the common good of the South Asian region.

என்று தி இந்து தன் தலையங்கத்தில் கூறியது அனைவருக்கும் தெரிந்ததே. இதனால் கடுப்படைந்த காஷ்மீர் முதல்வர் முஃப்டி முகமது சையித் உடனே டெல்லிக்கு விரைந்து சென்று முதலில் இந்த தி இந்துவை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுத்தால் என்ன என்று பிரதமர், துணை பிரதமர் ஆகியோரை கலந்தாலோசித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்த பிரதமர், நல்ல நகைச்சுவையாக இருக்கும் இந்த பத்திரிக்கையை விட்டுக்கொடுப்பது தேவையா என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது, மூக்கு மேல் வேர்த்த ஹரியத் கட்சியினர் உளவாளிகள் உதவியுடன் இதற்காகத்தான் முஃப்டி முகமது சையத் டில்லிக்கு சென்றிருக்கிறார் என்பதை மோப்பம் பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. உடனே தகவல் அறிந்த ஐஎஸ்ஐ உளவு நிறுவனம் இந்த பெரிய ஆபத்தை பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்துக்கு மின்னல் எமர்ஜன்ஸி வேகத்தில் அனுப்பி இதனை விவாதிக்கக்கூட இல்லாமல் பாகிஸ்தான் பிரதமர் ஜமாலிக்குத் தெரிவித்ததாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் பிரதமர் ஜமாலி உடனே சுமார் பத்தாண்டுகளாக உபயோகப்படுத்தாமல் இருக்கும் ஹாட்லைன் தொலைபேசியை எடுத்து இந்திய பிரதமர் வாஜ்பாயியை தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறப்படுகிறது. காஷ்மீரை இந்திய விருப்பத்தின் படியே தீர்த்துவிடுவதாகவும், தயவு செய்து தி இந்து நிறுவனத்தை பாகிஸ்தானிடம் தரவேண்டாம் என்று கேட்டுக்கொள்வதாகவும் ஜமாலி கெஞ்சியதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், பாகிஸ்தானை ஒருவழி பண்ண ஓர் உபாயம் இறுதியில் கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சியில், பிரதமர் தி இந்து நிறுவனத்தை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

***

தி இந்து பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டால் நாங்களும் பாகிஸ்தான் செல்வோம். எங்களையும் பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் – தமிழ்நாடு பிராம்மண சங்கம் அறிவிப்பு.

தமிழ்நாடு பிராம்மண சங்கம் இன்று தி இந்து ஒருவேளை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்கப்படலாம் என்ற செய்தி கேட்டு துக்கக்கடலில் மூழ்கியது. துயரத்துடன் கீழ்க்கண்ட அறிக்கை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு வெளியிடப்பட்டது.

‘தி இந்து பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்கப்படலாம் என்ற செய்தி எங்கள் காதில் ஈயம் போல பாய்ந்தது. தி இந்து பத்திரிக்கை இல்லை என்றால், நாங்கள் எப்படி பஸ்ஸில் பெருமையுடன் தி இந்துவை மற்றவர் மூக்கின் முன் நீட்டி நீட்டி பேசமுடியும் ? தி இந்து பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டால் சங்கத்தினர் அனைவரையும் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். ‘

முற்போக்கு எழுத்தாளர் சங்கங்களும் இதனால் கடும் அதிர்ச்சி அடைந்ததாகவும், இனி எங்களுக்கு எந்த பத்திரிக்கை இடம் கொடுக்கும் என்று கோ என்று கதறி அழுததாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது கேட்டு பாகிஸ்தான் ராணுவம் கடும் அதிர்ச்சி அடைந்ததாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

***

நாங்கள் மட்டும் என்ன இளக்காரமா ? எங்களையும் பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா கோரிக்கை.

இவ்வளவு காலமாக பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் ஆதரவாக எழுதியும் எங்களை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்க இந்த இந்து பாஸிஸ ஆட்சிக்கு மனம் வரவில்லை என்பது, இந்த அரசாங்கத்தில் எப்படிப்பட்ட இந்து பயங்கரவாதிகள் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை வெளியிட்டுள்ள முதல் பத்தி செய்தியில் காணப்படுவதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு பதில் கூறிய பிரதமர் காரியாலயம், ‘தி இந்துவை விட்டுக்கொடுக்க வேண்டும் ‘ காஷ்மீர் முதலமைச்சர் கோரியிருக்கிறார். டைம்ஸ் ஆஃப் இந்தியா விரும்பினால் அதனையும் பரிசீலிப்போம் ‘ என்று கூறியிருப்பதாக நம்பத்த்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

***

என் ராம் மார்க்ஸிஸ்ட் கட்சியிலிருந்து ராஜினாமா செய்வாரா ?

இந்துவின் ஆசிரியர் மார்க்ஸிஸ்ட் கட்சியிலிருந்து ராஜினாமா செய்வாரா என்று தெரியவில்லை. பாகிஸ்தானில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் பட்டதால், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான என் ராமை எப்படி ஏற்றுக் கொள்வது என்று தயங்கிய பர்வேஸ் முஷரஃபிற்கு தர்ம சங்கடம் ஏற்பட்டதாய் நம்பத் தகாத வட்டாரங்கள் தெரிவித்தன. பாகிஸ்தானில் தான் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டதே தவிர, இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சியை இந்தியா தடை செய்து கருத்து சுதந்திரத்தைக் குறுக்குவதை பாகிஸ்தான் பொறுத்துக் கொள்ளாது என்று காட்டும் விதமாக, மார்க்ஸிஸ்ட் கட்சி உறுப்பினரை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ளும் என்று பர்வேஸ் முஷரஃப் அறிவித்தார். அருகில் ஜெயலலிதா அருகில் நிற்கும் அ தி மு க மந்திரியைப் போன்ற அடக்கத்துடன் பாகிஸ்தான் பிரதமர் ஜமாலி நின்று கொண்டிருந்ததாக நம்பத் தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

****

ஆர் கே நாராயணையும் விட்டுக் கொடுத்தால் தான் இந்து பத்திரிகையை பாகிஸ்தானிடம் ஒப்படைக்கலாம் : என் ராம் அறிக்கை

என் ராம் இன்று வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு கூறியதாக நம்பத் தகாத வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவின் ஒரே எழுத்தாளரான ஆர் கே நாராயணையும் பாகிஸ்தானுக்கு விட்டுக் கொடுத்தால் தான் இந்துவை விட்டுக் கொடுக்க ஒப்புக் கொள்வேன் என்றார் என் ராம்.

தி இந்து தமிழ் மொழிக்கு ஆற்றிய அருந்தொண்டு போலவே உருது மொழிக்கும் அருந்தொண்டு ஆற்றக் காத்திருப்பதாக என் ராம் தெரிவித்தார். இக்பால் படத்தைப் போட்டு காலிப் என்று கீழே எழுதும் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருப்பதாய்த் தெரிவித்தார் என் ராம். தமிங்கிலம் உருவாகக் காரணமாய் இருந்த இந்துவின் சேவை உருது மொழியை மேம்படுத்தி அதனை உருதிங்கிலீஷாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இனி உருதுவில் ஆங்கிலம் கலந்து பேசும் பாகிஸ்தானியர்களை உருவாக்குவதே தம்முடைய பணி என்றும் என் ராம் தெரிவித்ததாக நம்பத் தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

****

இந்து பத்திரிகையை ஒப்படைத்தால் முஸ்லீம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் : பாகிஸ்தான் ஜமாத் இஸ்லாமி கோரிக்கை

இந்து பத்திரிகையை பாகிஸ்தானிடம் ஒப்புவித்தால் தி முஸ்லீம் என்று பத்திரிகை பெயரை மாற்றவேண்டும் என்று ஜமாத் இஸ்லாமி கோரிக்கை வைத்ததாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்துவின் நலன்கள் காக்கப் படும் என்றும், பிரிவினைக்குப் பிறகு இந்துக்கள் எப்படி பாகிஸ்தானில் நடத்தப் பட்டார்களோ அதே பாணியில் இந்து பத்திரிகையும் நடத்தப் படும் அதனால் அஞ்ச வேண்டியதில்லை என்று ஜமாத் இஸ்லாமி தெரிவித்ததாக நம்பத் தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.

***

Series Navigation

சொதப்பப்பா

சொதப்பப்பா