எஸ். அர்ஷியா
ஆழ்மனத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட
வார்த்தைகளைக் கொண்டு
கட்டப்பட்ட அழகிய வெளி!
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மதுரை மாவட்டக் கிளையில் சிறுகதை வாசித்துவிட்டு, பார்வையாளர் பகுதிக்கு வந்து உட்கார்ந்தபோது, நண்பர் ஸ்டாலின் ராஜாங்கம், ‘அர்ஷியா, இது தமிழ் முதல்வன். கவிஞர்!’ என்று ஒரு இளைஞரை அறிமுகம் செய்து வைத்தார். ஸ்டாலினுடன் எனக்கு நல்ல பழக்கம். இருந்தாலும், யாரையும் அவர் அறிமுகம் செய்து வைத்ததில்லை. அவர் மூலம், இதுதான் முதல் அறிமுகம். அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நபர், தனது ஜோல்னாவிலிருந்து தடவி யெடுத்து, ஒரு கவிதைப் பிரதியை என்னிடம் நீட்டினார். வறுமையில் முக்கியெடுத்த சிறுவன், பா¢தாபமாக விழித் துக்கொண்டிருக்கும் அட்டைப் படத்துடன் அக்கவிதைப் பிரதி இருந்தது.
எனக்கு வரும் தபால்களில் நாலில் மூன்று, கவிதைப் பிரதிகளாக இருப்பதில் கொஞ்சம் வருத்தம் இருப்பதுண்டு. அதற்காக, ‘நான் இணையத்தில் எதையும் வாசிப்பதே இல்லை. எழுத மட்டுமே செய்கிறேன்’ என்று சாரு நிவேதிதா பீற்றிக் கொள்வதுபோல, பீலாவெல்லாம் விட மாட்டேன். அதற்கு இயக்குநர் அமீர் கூட, ‘புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்’ என்று, அதே சாருவைப்போல யாரையும் துணைக்கு அழைக்கவும் மாட்டேன். கவிதைகள் வாசிக்கும் பழக்கம் எனக்கு அவ்வப்போது உண்டு.
மதுரை இலக்கிய வட்டத்தில் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை எழுதுபவர்களைவிட துணுக்கு எழுத்துதான், ஒரு காலத்தில் நிறைந்து கிடந்தது. எங்கு திரும்பினும் துணுக்கு மயம். இப்போது அந்த இடத்தில், கவிதை!
ஒரு மதுரைக் கவிஞர், ஓராண்டில் ஆறு கவிதைப் புத்தகம் வெளியிட்டிருக்கிறார். இரண்டு மாதத்துக்கு ஒன்று என்று. ஒரு கவிஞர், தனது கவிதைத் தொகுதிக்கு, டுபாக் கூர் பதிப்பாளா¢டம் கவிதையையும் காசையும் கொடுத்துவிட்டு, இரண்டையும் எப்படி மீட்பது என்று, மூன்று வருடங்களாக அலைபாய்ந்து கொண்டிருப்பதும் எனக்குத் தொ¢யும். இதையும்தாண்டி, நல்ல கவிதைகள் எப்போதாவது வெளிவந்து விடுவ துண்டு.
நல்ல கவிதைகள் என்பது என்ன? காதல். கத்தா¢க்காய். காத்திருத்தல். அவள் தந்த முதல் முத்தம். மூடி தொலைந்துவிட்ட பேனா. அவள் நோட்டுப் புத்தகத்திலிருந்து திருடிய மயிலிறகு. முத்தம் கிடைத்த புறங்கையை கழுவாமல், அழுக்கேறப் பாதுகாப்பது போன்ற இத்தியாதி, இத்தியாதிகளைத் தாண்டி, சமூகத்தின் அவலங்களைத் தோலு¡¢ப் பது. சமூகத்தின் இருப்பிடத்தைத் தக்க வைப்பது. சமூகத்தில் தனக்கான இடம் எது என்பதைக் கண்டுணர்வது. இன்னபிற என்றே நான் கருதுகிறேன். தமிழ் முதல்வன் அப்படியான ஒரு இடத்தைத் தேடித் தி¡¢பவராகத்தான், ‘ஆயுதக் கோடுகள்’ நூல்வெளி முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறார்.
சின்னதாய் கையடக்க நூல்தான். நாற்பத்தெட்டு பக்கங்கள். சிறிதும் பொ¢துமான ஐம்பத்தேழு கவிதைகள். பத்தாம் வகுப்பு மாணவராயிருந்தபோது துவங்கி, இன்று வரையிலான உழைப்பின் தொகுதியாக அது வெளிப்பட்டிருக்கிறது. சமூகத்தில் தனக்கான இருப்பைத் தேடும் ‘மொழியற்ற சொல்’ மூலம்,
‘ஒலியொறியறியா எங்கும் பரவின
தூல உடம்புச் சொல்லொன்றே
எனக்கும் பிறருக்குமான தொடர்பு மொழியாயிருக்கிறது’
எனக் கண்டறிகிறார்.
அதேவேளையில் தனது சமூகம் அழுக்குக்குள் மூழ்குவதை ‘அசுத்தகா¢ப்பு’ மூலம் வேதனைப் படர வெளிப்படுத்துகிறார். அதனிலிருந்து சமூகம் மீள … சமூகத்தார் மனிதனாராய் பா¢ணமிக்க… விடுதலை மண் பிறக்க… தமது ‘பந்து நிறை தொல்குடி வாழ்வை’ மீள்பணி செய்யத் தலைப்பட்டவராகவும் முன்னிற்கிறார். என்றபோதும் ஒதுக் கீட்டில் பயன்பெற்று உயர்ந்தவர்கள், என்ன நிலையில் தன் சமூகத்திலிருந்து விலகிய வராக இருக்கிறார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டத் தயங்கவும் இல்லை. தவறவும் இல்லை என்பது, அவரது சமூக நேர்மையைக் காட்டுகிறது.
தொப்பூள்கொடி உறவு கொண்ட ஈழச் சகோதரனின் உடல், பொருள், வாழ்க்கை யின்மேல் சிங்கள வேர்கள் ஆழப் படர்வதையும், இங்கே தமிழினத் தலைவர்கள் நாய் மேய்த்துக் கொண்டிருப்பதையும், வெற்று விவாதங்களில் ஈடுபட்டு வெறுமனே காலத் தைத் தள்ளுவதையும் ‘பொறுப்பு’டன் சுட்டிக் காட்டுகிறார்,
‘உள்ளுறுப்புகள்கூட பயன்படா நிலையில்
அப்படியே புதைப்பதா அல்லது எ¡¢ப்பதா
ஞானவெட்டியான்களிடம் மையம் கொண்டிருக்கிறது
விவாதங்கள் மட்டுமே’
என்று.
இதுபோலவே நூல் முழுவதும் தொடரும் ரவிக்குமார், கடவுகளின் இனிமைகள், நிரம்பிய வெற்றிடம், நுந்நோக்கம், பெண்ணியம், உச்சியிலாடும் மயிர்கள், மீளாய்வு, மயக்கப்படும் வார்த்தைகள், போலிகள், சிலுவை மீதேறிய சுமை என தனலாய் நூல் முழுவதும் ‘நேர்பட பேசு’கிறார், தமிழ் முதல்வன்.
கவிதைகள் ஆழ்மனத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு கட்டப்பட்ட அழகிய வெளியில் நகர்கிறது.
வாசித்து முடித்த பின்பு, எனக்குள் ஏதோ வெற்றிடம் பரவுவதை என்னால் உணர முடிந் தது. சமூகத்துக்கு என்ன செய்திருக்கிறோம் எனும் கேள்வியை ‘ஆயுதக் கோடுகள்’ வா¢ வா¢யாய் கிழித்துப்போட்டது.
·
மதுரையின் நான்காவது புத்தகக் கண்காட்சியின் ஐந்தாவது நாளில், நண்பர்களுடன் சுற்றிவந்த என்னை தமிழ் முதல்வன் ‘ஐயா!’ என்று விளித்துக் கொண்டு, கைநீட்டி வந்து சந்தித்தார். சந்தோஷமாக இருந்தது.
என் நண்பர்கள் அத்தனை பேருக்கும் அவரை அறிமுகப் படுத்தினேன், ஸ்டாலின் ராஜாங்கம் எனக்கு அவரை அறிமுகப்படுத்தியது போலவே!
arshiyaas@rediffmail.com
- செப்டம்பர் 2009 குறுக்கெழுத்துப் போட்டி
- முள் – முத்துமீனாள்- முதல் பதிப்பு வெளியீட்டு விழா
- தமிழ் முதல்வனின் ஆயுதக் கோடுகள் கவிதை நூல் குறித்து…
- சாகித்திய அகாதமி: நாகர்கோவில் நிகழ்ச்சி
- கலை, மொழி, வாழ்வியல் ஓர் அனுபவப் பகிர்வு
- கலை இலக்கிய விழாவில் ‘வல்லினம்’ இதழ் அகப்பக்கமாக புதிய அவதாரம்
- புதுப்புனலுக்கு ஏது பிரகடனம்? நீர்வளமே அதன் நிரூபணம்!
- கருத்தியல் தர்மம் காக்க!
- சமஸ்கிருதத்தை பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவே
- புலம்பெயர் இலக்கியம் – ஓர் அறிமுகம்
- கோடை
- என்றாலும் கவிதையே
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 51 << மாறாத உன் தோற்றம் >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -3 (மரணத்தில் எஞ்சியவை)
- வேத வனம் –விருட்சம் 49
- அழகு
- தாயெனும்…
- புன்னகை
- முடிவாகவில்லை
- வெறிச்சோடிக் கிடக்கும் வீடு!
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தொன்பதாம் அத்தியாயம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -10
- யார் அந்த சண்முகம்?
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தியொன்று
- தேவை கருணை பார்வை
- வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…
- பாதையையும் பயணமும்
- மிச்சாமி துக்தம் : (துக்டம்)
- சற்றுமுன் வந்த மின்னஞ்சல்
- தடை
- ’ரிஷி’ யின் கவிதைகள் -“மக்கள் சேவை”
- காட்டுவா சாகிப்
- தவிர்க்க விரும்பும் தருணங்கள்
- பண்டிகைகள்
- தலைகவிழல்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும் (கட்டுரை: 63)