அமரர் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு

This entry is part [part not set] of 34 in the series 20070816_Issue

விஜய் தம்பி

(கீழ் இணைக்கப்பட்டிருக்கும் செய்தியானது அண்மையில் ஈழத்து இலக்கிய உலகை விட்டுப் பிரிந்த பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவு பகிர்வு நிகழ்வின் தொகுப்பாகும். இந்நிகழ்வு கடந்த 4ம் திகதி (04.08.2007) அன்று கனடா நாட்டின் ரொரன்ரோ மாநகரில் இடம் பெற்றது.)

ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளரும், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் வழியில் வாழ்ந்தவர்களில் ஒருவரும், ஈழத்தின் உருவகக் கதையின் மூலகர்த்தாவுமாகிய அமரர் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு – கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில், கடந்த வாரம் (04.08.2007) ஸ்காபறோவில் நடைபெற்றது. நிகழ்வினை அவரது சகோதரியார் திருமதி.சரஸ்வதி வீரசிங்கம் அவர்கள் பண்டிதரது நிழற்படத்திற்கு மாலை அணிவித்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

1921ம் ஆண்டு மே மாதம் 24ம் திகதி நாவற்குழியில் பிறந்த சு.வே. அவர்கள் தனது 87ம் வயதில் கடந்த யூன் மாதம் 22ம் திகதி கொழும்பில் காலமனார். ஏலவே “மண்வாசைன”, “பாற்காவடி” என்னும் சிறுகதைத் தொகுப்புக்களையும் “மணற்கோவில்” எனும் உருவக்கதைத் தொகுதிகளையும் ஈழத்து இலக்கிய ஆர்வலர்களுக்கு தந்த சு.வே. அவரது “மணற்கோவில்” எனும் உருவகக்கதைக்காக மூதறிஞர் ராஜாஜியால் பாராட்டும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தனது அடக்கமான ஆனால் ஆழமான எழுத்துக்காளல் வாசகர்களை தன்வசம் வைத்திருந்தார்.

திருநெல்வேலி சைவாசிரியப் பயிற்சிக் கல்லூரி உருவாக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, ஈழத்து சிறுகதை மூலவரில் ஒருவர் சம்பந்தன், இரசிகமணி கணக செந்திநாதன் போன்றோரின் தடத்தில் சு.வேயும் அந்தக்கல்லூரி புத்திலக்கியப் படைப்பாளியாக ஈழத்துத் தமிழிலக்கியத்திற்கு வழங்கியிருந்தது. அத்தோடு ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தில் கற்று தமிழ் பண்டிதராகவும் இவர் விளங்கினார். பண்டைய தமிழ் இலக்கியங்களை இவர் தெரிந்து வைத்திருந்தது போலவே நவீன தமிழிலக்கியங்களையும் அவர் ஆழமாக தெரிந்து வைத்திருந்தார் என்பதற்கு அவர் படைத்த நவீன ஆக்கங்கள் பல சான்றாக உள்ளன. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை வழியாக யாழ்ப்பாண மண்ணிலே விளைந்த செழுமைத் தமிழை நவீன படைப்பிலக்கியத்திலே புகுத்திய மூலவர் என்று அறிஞர்களால் போற்றப்படுபவர் சு.வே ஆவாவர்.

பண்டிதர் சு.வே. அவர்கள் ஒரு தேசிய இனத்தின் முழுமைக்கும் தமிழ் கல்வி கற்பித்த “மகா மகோபாத்தியாயராக” விளங்கியவர் என புகழாரம் சூட்டினார் அவரது காலத்தில் அவருடன் ஆசிரியப் பணியில் ஈடுபட்ட பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் அவர்கள். ஆவர் மேலும் உரையாற்றுகையில் ஒரு ஆசிரியன் தான் அறியாத ஒன்றை தனது மாணவனுக்கு திணித்து விளங்கப்படுத்த முடியாது. எவற்றை ஒரு ஆசிரியன் ஆழ்ந்து கற்று தன்வசமாக்குகின்றானோ அவற்றைத்தான் அவன் மாணவர்களுக்கு புகுத்த முடியும் அவ்வகையில் சு.வே. ஒரு பல்வகை சிந்தனையாளனாக திகழ்ந்தவர். அவரிடம் குரு – குலக்கல்விக்குரிய ஒரு குருத்துவத் தகமை கானப்பட்டது என தனதுரையில் விபரித்தார்.

சு.வே. அவர்கள் மாணவர்கள் மத்தியிலும் சரி, ஆசிரியர்கள் மத்தியிலும் சரி, பாடசாலை நிர்வாகமோ அன்றி அக்காலத்தில் பணியாற்றிய அதிபர்கள் மத்தியிலும் அவருக்கென்றுறொரு தனி மதிப்பும் மரியாதையும் பேனப்பட்டதாகவும், அவருடன் பணயாற்றக்கிடைத்தது பெரும் பாக்கியமாக, நல்லதொரு மனிதனை, ஒரு நண்பனை தனது வாநாளில் பெற்ற பெருமையெனக் கருதுவதாக திரு. சி.சிற்றம்பலம் அவர்கள் சு.வேயின் ஆசிரியப்பணி பற்றிப் பேசும் பொழது குறிப்பிட்டார். தொடர்ந்து சு.வேயின் புனை கதையிலக்கியம் பற்றி திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்கள் பேசும் பொழுது தமிழிலக்கியமும் தமிழ் சம்பந்தமான தொழில்களும் பண்டித வர்க்கத்தின் ஏகபோக உரிமை என்ற கருத்தை உடைத்தெறிந்தவர்களில் சு.வேயும் இரசிகமணி கனக செந்திநாதனும் முக்கியம் பெறுகின்றார்கள் எனும் எஸ்.பொ எனப்படும் இன்னுமொரு படைப்பாளியின் கருத்துக்கு நாமும் உடன்பாடு என தனதுரையை ஆரம்பித்தார் குறமகள் அவர்கள். சங்க காலம் கன்ட மரபுகளையும் ஒழுக்கங்களையும் யாழ்ப்பாண மண்ணின் அழகிலும் வாழ்கையிலும் செடி கொடிகளிலும் கண்டு அனுபவவித்து தனது ஆக்கங்களில் வெளிக் கொணந்தவர் சு.வே. எனத் தொடர்ந்தார்.

தொடர்ந்து தமிழர் புணர்வாழ்வுக் கழக கனடாக்கிளையின் தலைவர் திரு.குணநாதன் அவர்கள் உரையாற்றுகையில் சு.வேயவர்களது இழப்பு தனக்கு மட்டுமல்ல தமிழ்ச் சமூகத்திற்குமான ஒரு வெற்றிடம் என நெகிழ்ந்தார். குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்ட வெறுமையை எனது குடும்பம் உணருகின்றது எனத் தொடர்ந்து பேசினார்.

வானொலிக் கலைஞராக வரவேண்டுமானால் அந்தக் கால கட்டங்களில் குதிரைக் கொம்பாக கானப்பட்டது. இருந்தாலும் அவற்றையெல்லாம் வென்று அப்பொழுதே வானொலி நாடகப் போட்டிகளில் முதற் பரிசுகளை தட்டிச் சென்றது சு.வே. அவர்களது நாடகங்கள் எனப் பெருமிதங் கொன்டார் முதுபெரும் நாடகக்கலைஞர் திரு.கே.எஸ். பாலச்சந்திரன் அவர்கள். நாடகவரலாறு பற்றிய தேடல் ஏற்பட்டால் அங்கே சு.வேயை தவிர்த்து தேட முடியாதளவிற்கு அவரது பங்கமைந்துள்ளது. இவரது நாடகங்கள் தான் வாழ்ந்த கிராமிய மனம் பேசிய நாடகங்ளாக ஏறத்தாழ 97 வாரங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியதென சு.வேயின் நாடகப்பணி பற்றி பேசும் பொழுது மேற்கன்டவாறு குறிப்பிட்டார்.

சு.வே. மிதித்த புற்களும் அவரை வாழ்த்துமாறு வாழ்ந்து காட்டியவர். மனித நேயம் மனிதப் பன்பு என்பனவற்றை பின்பற்றி வாழ்பவர்கள் மிகவும் குறைந்து கானப்படும் வேளைகளிலும் மனித நேயம் பற்றியும், பன்பு பற்றியும் வாழ்ந்து காட்டியவர் இவர். ஈழத்து சிறுகதை எழத்து வரிசையிலே உருவகக்ககதை எனும் துறையை முன்னெடுத்தது மட்டுமன்றி அதனை வளர்த்த பெருமையும் பண்டிதர் சு.வேயையே சாரும் என்று தனதுரையில் விபரித்தார் கவிநாயகர் கந்தவனம் அவர்கள். தனலக்குமி புத்தகசாலையில் தனக்கும் சு.வேக்கும் ஏற்பட்ட நட்பு பற்றியும் அது பின்பு ஆரோக்கியமான இலக்கிய உறவாக விரிந்து வியாபித்திருக்கின்றது என தொடர்ந்து பேசினார் திரு.கந்தவனம் அவர்கள்.

தொடர்ந்து “கதாநிகழ்வாக” பண்டிதர் சு.வேயின் முதலாவது சிறுகதையாகிய “கிடைக்காத பலன்” எனும் சிறு கதையினை திருமதி.இராஜ்மீரா இராசையா அவர்களும் முன்னாள் வானொலிக் கலைஞரும் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருப்பவருமாகிய குரும்பசிட்டி இ.இராசரட்னம் அவர்களும் உணர்ச்சி பொங்க கதையை வாசிக்க சேகர் தம்பிராசா அவர்கள் அப்பாத்திரமாக (கார்த்திகேயனாக) மேடையில் தோன்றி நடித்து எல்லோரையும் அக்கதையின் களத்திற்கு இழுத்துச் சென்றனர். இறுதியாக சு.வே அவர்களது குடும்பம் சார்பாக அவரது பெறாமகன் ம.கிருபாகரன் நன்றி கூறினார்.

naavai@hotmail.com

நாடகம்

குணநாதன்

கே எஸ் பாலசந்திரன்

கிருபாகரன்

குறமகள்

சரஸ்வதி

பண்டித ச வே பஞ்சாட்சரம்

ராஜரத்தினம்/ மீரா ராசையா

எஸ் சித்தம்பலம்

Series Navigation

விஜய் தம்பி

விஜய் தம்பி

அமரர் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு

This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue