சீதாயணம் (நெடுங்கவிதைத் தொகுப்பு ) வெளியீடு

This entry is part [part not set] of 34 in the series 20060428_Issue

முனைவர் மு பழனியப்பன்


காரைக்குடி கம்பன் கழகத்தின் அறுபத்தெட்டாம் ஆண்டுவிழா கம்பன் மணிமண்டபத்தில் 9-4.2006 அன்று மாலை முதல் நடைபெற்றது. எழுத்தாளர் ஜெயகாந்தன் தலைமையில் , முனைவர் ஒளவை நடராஜன், கவிக்கோ அப்துல்ரகுமான் முதலியோர் இவ்விழாவில் பங்கேற்றனர். விழாவிற்குத் தலைமையேற்ற ஜெயகாந்தன் கவிஞர் சேதுபதியின் சீதாயணம் என்ற நெடுங்கவிதைத் தொகுப்பை வெளியிட்டுத் தலைமையுரை ஆற்றினார். அவரின் உரையில் இடம் பெற்ற சிலபகுதிகள் பின்வருமாறு.
கடவுள் புகழ்பாட ஒருமைப்பாடு, சுய அன்பு மட்டுமே போதும். ஆனால் கம்பன் புகழ்பாட காலத்தின்மீது அன்பு வைத்திருக்க வேண்டும். மனிதர்க்கு மனிதர் மீது அன்பு இருப்பது இயல்பு. அதை வளர்த்துக் கொள்வதற்குத் தான் கம்பன் கம்பராமாயணத்தைப் பாடினார் என்பது மனிதாபிமானிகளின் கருத்து. சத்திரிய தருமத்தை நனவாக்குவதற்குத்தான் இராமாயணம் என்றார் வால்மீகி. ஆனால் கம்பன்தான் அது மனிதனின் புகழ் பாடுவது என்றார். மனிதனே புகழுக்கு உரியவன். கடவுளும் வாழ வேண்டும் என விரும்புபவன். கடவுள் வாழ வேண்டுமெனில் அவர் மனித உருவில் தான் வ்ரவேண்டும் என கம்பராமாயணம் சொல்கிறது. … சேதுபதியின் சீதாயணம் நூலைப் படித்துப் பார்த்தேன். கம்பனைப் படித்தால் கம்பன் மாதிரி எழுதவரும் என்பதற்கு இந்த நூல் ஒரு அத்தாட்சி. கம்பன் மாதிரி எழுத வேண்டும் இன்றைக்கு இருக்கிற புதிய விஷயங்களை எழுத வேண்டும், அந்தக் காரியத்தை சேதுபதி இங்கு நன்றாகச் செய்திருக்கிறார். என்றார்.

இவரைத் தொடர்ந்து கவிக்கோ அப்துல் ரகுமான், முனைவர் ஒளவை நடராசன் உரையாற்றினர். விழாவில் அ,அறிவுநம்பி, சவகர்லால் ஆகியோர் எழுதிய நூல்கள் வெளியிடப் பெற்றன. கம்பன் கழகச் செயலர் கம்பனடிசூடி பழ.பழநியப்பன் வரவேற்று விழாவினைத் தொகுத்தளித்தார்.
————————-

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்