கதை ஏன் படிக்கிறோம் ?

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

சுரேஷ்


சமீபத்தில் என் நண்பருடன் ஒரு சிறுகதைகள், நாவல்கள் படிக்கும் வி ?யமாக ஒரு சிறிய விவாதம் ஏற்பட்டது.

நண்பரோ செய்தித்தாள்களையும் புத்தகங்களில் கூட non-fiction புத்தகங்களைத்தான் படிப்பார். எப்பவாவது ஆனந்த விகடன், குமுதம் இதழ்களில் ஜோக் படிப்பார். மறந்தும் சிறுகதைகளையோ தொடர்கதைகளையோ படிக்க மாட்டார். என் அறைக்கு வந்தால் கூட ‘என்னய்யா ஏதாவது ‘குமுதம் ‘ புக்கு இருக்குமான்னு பார்த்தா காலச்சுவடு, உயிர்மைன்னு என்னென்னமோ வெச்சிருக்கே. இதையெல்லாம் மொத்தம் ஒரு பத்து பேர் படிப்பாங்களா ? ‘ என்று கிண்டலடிப்பார். அவாிடம் ‘ஜெயமோகன் ‘ என்றால் எதிர் பிளாட்டில இருக்காரே அவரா ? என்பார்.

என்னுடைய இலக்கிய பயணமோ ராஜேகுமாாில் ஆரம்பித்து இன்றைய நவீன எழுத்தாளர் ஜே.பி.சாணக்கியாவில் வந்து நிற்கிறது. தொியாத்தனமாக அவாிடம் ‘எப்போதும் மண்டை காயவைக்கும் புத்தகங்களையே படித்துக் கொண்டு இருக்கிறீர்களே, தி.ஐானகிராமனின் ஒரு நாவலை தருகிறேன். படித்துப்பாருங்கள் ‘ என்று கேட்டுவிட்டேன்.

பின்பு நடந்த உரையாடல்:

‘இத்தனை கதை படிக்கறீங்க. இதிலிருந்தெல்லாம் என்ன புரிஞ்சுக்கிட்டிங்க ? ‘

‘என்ன கேள்வி இது ? இலக்கியங்களை படிக்கறதால மனிதனின் எண்ணங்கள் மேம்படறதில்லையா ? ‘ என்றேன்.

‘அது சாி. திருப்பி திருப்பி ஒரே வி ?யம்தானே வெவ்வேறு விதமா சொல்லப்படுது. நல்லதுதான் செய்யணும். கெட்டது செய்யக்கூடாது. இதான ? இதத்தான் நாம சின்ன வயசிலேயே நீதிக்கதைகளாவும், ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசத்துலயும் திருக்குறள் மாதிாியான வி ?யத்துலயும் நெறைய பாத்துட்டோமே. ஆனா அது மாதிாி வாழ்க்கையிலே கடைப்பிடிக்கிறோமான்னா, பெரும்பாலும் இல்ல. அப்புறம் ஏன் இந்த மாதிாி வி ?யங்களை திருப்பி திருப்பி படிச்சுட்டு இருக்கீங்க ? ‘

அவரே மேலும் தொடர்ந்தார்.

‘நான் ஏன் இந்த மாதிாி கதைகளை படிக்கறதில்லன்னு சொல்றேன். நீங்க அதிர்ச்சியோ, அவமானப்படுத்தப்பட்டதாகவோ எடுத்துக்கக்கூடாது. கற்கால மனு ?ன் பொழுது போகறதுக்காகவும் இயற்கையின் மீதான பயங்களை உருவகப்படுத்தியும் கதை சொல்ல ஆரம்பிச்சான். அப்ப ஏற்பட்ட கதை கேக்கற ஆசை இப்ப சோறு ஊட்டும் போது கதை சொல்றது வரைக்கும் நிக்குது. ஆனா அந்த ஆசை அந்த ?டேே ?ாட போகாம எப்படி தாய்ப்பால் பழக்கத்தை மறக்க முடியாம இன்னிக்கும் சிகரெட்டை உறிஞ்சுக்கிட்டு இருக்கோமோ அதே மாதிாி தொடர்ந்துக்கிட்டு இருக்குது. உளவியல்ல ஒரு வி ?யம் சொல்லுவாங்க. மனிதனின் வளர்ச்சியில சில நிலைகள் இருக்குது. ஒரு நிலையை கடந்து அடுத்த நிலைக்கு அவன் நகர்ந்துட்டாதான் நார்மலா இருக்க முடியும். இல்லாம ஒரு நிலையிலேயே உறைஞ்சு போயிட்டா அதுதான் மனப்பிறழ்வா ஆகுது. அது மாதிாி நீங்க கதை கேக்கற பழக்கத்தை விடமுடியாம புத்தகங்களாகவும், சினிமாவாகவும், அதன் தொடர்ச்சியா இன்றைக்கு தொலைக்காட்சி சீாியல்களாகவும் கேட்டுட்டு வர்றீங்க. இந்த abnormal நிலையை என்னன்னு சொல்றது ? ‘

கேள்வியை கேட்டுவிட்டு அவர் போய்விட்டார். இதை சாி என்று ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. தவறு என்று விட்டுவிடவும் முடியவில்லை.

நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ?

****

swastikads@vsnl.net

Series Navigation

சுரேஷ்

சுரேஷ்