மாரக்கீஷ் காய்கறி கூட்டு (Marrakesh-Africa)

This entry is part of 37 in the series 20020310_Issue


தேவையான பொருட்கள்

1 சர்க்கரை வள்ளிக்கிழங்கு, உரித்து, சதுரங்களாக வெட்டியது

1 நடுத்தர கத்தரிக்காய், சதுரமாக வெட்டியது

1 பச்சை குடை மிளகாய், வெட்டியது

1 சிவப்பு குடை மிளகாய் வெட்டியது

2 கேரட், வெட்டியது

1 வெங்காயம் வெட்டியது

6 மேஜைக்கரண்டி எண்ணெய்

3 பல் பூண்டு, நசுக்கியது

1 தேக்கரண்டி மஞ்சள்

1 தேக்கரண்டி, கரம் மசாலா

1 தேக்கரண்டி பட்டைத் தூள்

3/4 மேஜைக்கரண்டி உப்பு

3/4 தேக்கரண்டி காரமிளகாய்த்தூள்

15 அவுண்ஸ், (அல்லது இரண்டு டம்ளர்) கொண்டைக்கடலை ஊறவைத்து வேகவைத்தது (வேகவைத்தபின்னர் அளவு)

1/4 கோப்பை தூளான பாதாம் கொட்டை

1 சுக்கினிக்காய் (இருந்தால்)

2 மேஜைக்கரண்டி காய்ந்த திராட்சை

1 கோப்பை ஆரஞ்ச் சாறு

10 அவுண்ஸ் கீரை (ச்பினாச்)

செய்முறை

ஒரு பெரிய பாத்திரத்தில், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கத்தரிக்காய், குடைமிளகாய், கேரட், வெங்காயம், மூன்று மேஜைக்கரண்டி எண்ணெய் போட்டு 5 நிமிடம் வதக்கவும்

இன்னொரு பாத்திரத்தில், 3 மேஜைக்கரண்டி எண்ணெய், பூண்டு, மஞ்சள், மசாலா தூள், பட்டை, உப்பு, காரமிளகாய்த்தூள் போட்டு 3 நிமிடம் வதக்கவும்.

இந்தக்கலவையை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற காய்கறிகள் வெந்துகொண்டிருக்கும் கலவை மீது கொட்டவும். இத்துடன் கொண்டைக்கடலை, பாதம், சுக்கினி, திராட்சை, ஆரஞ்ச் சாறு ஆகியவற்றைச் சேர்க்கவும். 20 நிமிடம் மூடி போட்டு குறைந்த தீயில் வேகவைக்கவும்.

இத்துடன் கீரையைச் சேர்த்து இன்னும் 5 நிமிடம் வேகவைக்கவும்

இதனை கூட்டாகவோ, தனியாகவோ, சாதத்துடனோ சேர்த்து சாப்பிடலாம்

Series Navigation