தோழி பொம்மை..:_

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


*****************************

ஒவ்வொருவரிடமும்
இருக்கிறது
ஒரு கரடி பொம்மையோ
தன்னைச் செதுக்கும் பெண்ணோ
ஒரு நெளிந்து நிற்கும்
தோழி பொம்மையோ..

சில பொம்மைகள்
கைகூட்டி முழங்கால் மடித்து
கண் சாய்த்து அமர்ந்து

ஸ்நேகிதனை
கண் கொட்டாமல்
அல்லும் பகலும்
கண்ணாடி கவருக்குள்ளிருந்து
பார்த்தபடி

அவர்கள் தன்னோடு்
தன் கவலைகளோடு
பேசிக் கொள்ளும் போது
காதுகள் கொடுத்து

மகிழ்ச்சியாய்
தோழர்கள் ஆடும் போதும்
புன்னகைத்தபடி

கூட இருப்பதே
ஒரு தவமாய் இயற்றி
விட்டுச் சென்ற
இடத்திலேயே காத்து., கிடந்து

புறக்கணித்தோ
பரணிலோ.,
குப்பைத் தொட்டியிலோ
வீசிச் செல்லும்
நண்பர்களை குறை கூறாமல்
அங்கும் மௌனமாய்..
அங்கீகரிப்பும் அனுமதிப்புமாய்..

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்