வியாபாரம்

This entry is part of 41 in the series 20110102_Issue

ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாசன்


.காதலை விற்று காமம் வாங்குகிறாய்
காமத்தை விற்று கயமை வாங்குகிறாய்

விந்தை விற்று வினை வாங்குகிறாய்
பிள்ளை விற்று பிணி வாங்குகிறாய்

தாலியை விற்று தங்கம் வாங்குகிறாய்
தங்கத்தை விற்று தரணி வாங்குகிறாய்

தரணியை விற்று தனிமை வாங்கிறாய்

நிலவை விற்று கனவை வாங்குகிறாய்
கனவை விற்று கவலை வாங்குகிறாய்

கவலை விற்று கடவுளை வாங்கு
கடவுளை விற்று அன்பை வாங்கு

மொழியை விற்று மெளனம் வாங்கு
மெளனம் விற்று ஞானம் வாங்கு

Series Navigation